பக்கம் எண் :


எறிபத்தநாயனார்புராணம்713

 

இந்நாட் புதிய நாகரிகத்தின் பயனாகக் கிடைத்த கேடான உபகாரங்களாம்.
இவை முன்னாள் நகர, கிராம வாழ்க்கையிற் காணப்படாதது மாந்தர் சுக
வாழ்விற்குக் காரணமா யிருந்தது. சூரியனுதிக்குமுன் அதிகாலையில் எழுதல்,
இயன்ற அளவு சுத்தி செய்து கடவுளை வணங்குதல், வெளியிற்போய் வந்து
பற்றுலக்குதல், குளித்தல், சூரியனுதிக்கையில் அவனுக்கு அர்க்கியமாதி
கொடுத்தல், பின் அற்றைநாட் கருமத்திற் புகுதல் முதலியன முந்தையோர்
கண்ட முறையும் நியமமுமாம் விரிவு ஆசாரக் கோவை முதலிய நூல்களிற்
காண்க. இந்நல்லொழுக்கங்கள் இந்நாள் அருகி வருதல் வருந்தத்தக்கது.

     புனன்மூழ்கி - "சீதப்புனல் மூழ்கிச் சிற்றம்பலம் பாடி", "மொய்யார்
தடம் பொய்கை புக்கு முகேரென்னக், கையாற் குடைந்து குடைந்துன்
கழல்பாடி" என்பனவாதி திருவாசகங்களும், பிறவும், புனன் மூழ்கும் நியமத்தை
விளக்குவன. ஊற்றுள்ள தூநீர்க்குளங்கள், நல்ல நீர் ஓடும் ஆறுகள்,
இவைகளில் மூழ்கிக் குளித்தல் நன்மை தரும். நீரினுட்பாய்ந்து மூழ்கிக்
குளித்தல் சுகம்தரும். இவ்விதிகளைச் சுகாதார நூல்களுட் காண்க.
இவ்வாறன்றி வெந் நீரிற் குளித்தல், கிணறுகளில் நீர் மொண்டுவைத்துச் சிறு
பாத்திரங்களிற் குளித்தல் முதலிய இக்கால வசதிகளைப் பற்றிச் செய்து
கொள்ளும் நியமங்கள் அத்தனை பயன்றரா. எவ்வாற்றானும் குளிர்ந்த நீரிற்
குளித்தலே நமது நாட்டியல்புக் கடுத்ததாம். இவை முதலிய வெல்லாம் இங்கு
வைத்துக் கண்டுகொள்க. இனி, நீர் மூழ்குதல் உடற்சுத்தம் செய்யும். உடல்
சுத்தமற்றதாயின் உளச் சுத்தத்திற் குறைவுளதாம். அசுத்த உடலுடன் செய்யும்
நியமங்கள் அசுத்த பாத்திரத்தில் வைக்கும் பால்போலக் கேடுறும் என்பது
ஆன்றோர் துணிந்த உண்மை. இவ்வுண்மையறியாதார் பலவாறு பிதற்றி
யொழிவர். இவை யெல்லாம் உணர்த்துவார் இங்குப் புனன்மூழ்கி என்பதனை
விதந்து கூறினார்.

     வாயுங்கட்டி - வாயைத் துணியினாலே கட்டி. இறைவனுக்காகும் மலர்
பறிக்கும் போதும் திருமாலை கட்டிச் சாத்தும்போதும் வாயினின்றும் அசுத்த
வாயு, வாய் நீர் ஆவி, தும்மல், இருமல், உமிழ்நீர் முதலியன வெளிப்போந்து
மலர்களிலே தாக்கி அசுத்தப் படுத்தாத படிக்கும், மலர்களின் மணம் தமது
மூக்கிற்புக்கு நுகர்ச்சிக்கட் படாதபடிக்கும், இத்திருப்பணியாளர், இது செய்யும்
போது வாய்கட்டிப் பணி செய்தல் மரபு. இந்நியதி இந்நாளிலும் மிக நியமமான
சில பூசைகளிற் கையாளப்படும் வழக்குண்மை காண்க. கதிர்காமத் தலத்திற்
பூசாரி நாடோறும் வாய்கட்டி வந்தே பணி செய்தல் இன்றும் காணத்தக்கதாம்.
எனவே இத்திருப்பாணியாளர் பணியிற் கைத்தொண்டும் மனத்தொண்டும் என
இரண்டுமே நிகழ்தற்குரியன. இங்கு முன்னி என்றதும், மேற்பாட்டில்
"உண்ணிறை காதலோடும்" என்றதும், வரும்பாட்டில் "நெஞ்சில் வாலிய
நேசங்கொண்டு" என்றதும் காண்க. இதுபற்றி முன்னுரைத்தவையும் காண்க.

     உண்மை நூற்றுணிபும் விதியும் இவ்வாறிருப்பவும் இந்நாளில் நந்தன
வனத் திருப்பணியாளர் பலர், மலர் கொய்யும் போதும், மாலைகட்டும்
போதும் நந்தனவனத்துள்ளும் பூமண்டபத்துள்ளும் ஒரு சிறிதும் கருதாது
பலவற்றையும் வாயில் வந்தபடி யெல்லாம் பேசுதல், உமிழ்நீர் உமிழ்தல்,
தும்முதல், இருமுதல், தாம்பூலம் புகையிலை முதலியன தரித்துக் கொள்ளுதல்,
குளிக்காமலும், அன்றிக் கைகால் சுத்தியேனும் செய்யாமலும் பணிசெய்தல்
முதலிய அநுசிதம் செய்து ஒழுகுதல் மிக வருந்தத்தக்கது. இம்மட்டோ!
திருநந்தன வனத்துள்ளும், அதற்கருகிலும், இறைவன் பூசனைக்கு ஆகும்
மரம் செடி கொடிகளின் கீழும், அருகிலும் அவனுக்காகும் அறுகுபடர்ந்த
தரையிலும் மலசலமும் கழிக்கத் துணிந்து எரிவாய்நரகிற் காளாகின்றனர்.
நந்தன வனத்துள்ளே குடியிருக்க வசதி செய்தல், போசனஞ் செய்தல்,
சிற்றுண்டி முதலிய உல்லாசம, பயிலுதல், துயிலுதல் முதலியனவும்
சிவாபராதமும் அநுசிதமுமாம். திருக்கோயிலுக்குள் வில்வ மரத்தின் கீழும்
சிறிதும் அஞ்சாது மலசலம் கழிக்கும் பாதகர் எதைத்தான் செய்யத் துணியார்?
அந்தோ! பாவம்! நந்தனவனம்