பக்கம் எண் :


716 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

"ஒல்லையினில் முன்புபோ லுடன் கொண்டு" (148) "இத்தனை பொழுது தாழ்த்தே னெனவிரைந் தேகுவார்" (163) என்ற கண்ணப்ப நாயனார் புராணத்திருவாக்குக்களும் பிறவும் காண்க.

     வாரா நின்றார் - வருவாராயினார். இங்குவருகின்றார் என்னாது
வாரா நின்றார் எனக் கூறியதனால் பின் சரித நிகழ்ச்சியின் முற்குறிப்பாகுமாறு
வாரா - வந்து, நின்றார் - தடைப்பட்டு நின்றார் எனப் பிறிதொரு தொனிப்
பொருளும்படக் கூறிய நயம் காண்க.

     பூக்கூடை - தண்டுங்கொண்டே - என்பனவும் பாடங்கள். 10

561.
மற்றவ ரணைய விப்பால் வளநக ரதனின் மன்னுங்
கொற்றவர் வளவர் தங்கள் குலப்புகழ்ச் சோழ னார்தம்
பற்றலர் முனைகள் சாய்க்கும் பட்டவர்த் தனமாம் பண்பு
பெற்றவெங் களிறு கோலம் பெருகுமா நவமி முன்னாள்,   11
   
562.
மங்கல விழவு கொண்டு, வருநதித் துறைநீ ராடிப்,
பொங்கிய களிப்பி னோடும் பொழிமதஞ் சொரிய, நின்றா
ரெங்கணு மிரியல் போக, வெதிர்பரிக் கார ரோடத்,
துங்கமால் வரைபோற் றோன்றித் துண்ணென வணைந்த
                                       தன்றே.   12

     561. (இ-ள்.) வெளிப்படை. அவர் மற்று இவ்வாறு அணைவாராக, இங்கு வளமை பொருந்திய அத்திருநகரில் நிலைபெற்ற அரசராகிய
அநபாய்ச் சோழர்
குலத்து வழிமுதலாய் வந்த புகழ்ச்சோழ நாயனாராது
பகைப்புலத்துப் போர்களை வெல்லும் பட்டவர்த்தனம் என்னும் பண்புடைய
வெங்களிறு அலங்கார மிகுந்த மகாநவமியின் முன்னாளாகிய அந்நாளிலே, 11

     562. (இ-ள்.) வெளிப்படை. மங்கலமாகிய திருவிழா வணியை
மேற்கொண்டதாகி, (அத்தலத்தே ஓடி) வருகின்ற (ஆம்பிராவதி) நதியில்
நீராடி, மிக்க களிப்புடனே பொழிகின்ற மதநீர் சொரிய வருவதாய்,
அங்கங்கும் நின்றவர்கள் பயந்தோட, எதிரிலே, குத்துக்கோற்காரர்கள்
ஓடிச்செல்லத், தூய பெரிய மலைபோலத் தோன்றிப் பயங்கரமாக அணைந்தது
அன்றே. 12

     இவ்விரண்டு பாட்டுக்களும் ஒருமுடிவு கொண்டன.

     561. (வி-ரை.) மற்று - அங்கு. வினைமாற்றுப் பொருளில் வந்தது.
இப்பால் என்றலும் காண்க.

     வளநகர் - கருவூர். மன்னும் கொற்றவர் - அநபாயர். ஆசிரியரது
காலத்து நிலைபெற்று நின்று பேரரசு செலுத்தியவராதலின் மன்னும் என்றார்.
மன்னுதல் - நிலைபேறுடைத்தாதல்.

     கொற்றவர் வளவர் தங்கள் குலப் புகழ்ச்சோழனார் -
அநபாயச்சோழர் குலத்தில் முந்தை வழிமுதலாய் அவதரித்த புகழ்ச்சோழர்
என்ற அரசர். இவர் நாயன்மார்களிலொருவர் சரிதவரலாறும் பண்பும்
பொய்யடிமையில்லாத புலவர் சருக்கத்துட்காண்க. "பொழிற்கருவூர்த் துஞ்சிய
புகழ்ச்சோழர்க் கடியேன்" என்பது திருத்தொண்டத் தொகை.
மன்னுங்கொற்றவர் வளவர் தங்கள் குலம்
என்றது பொதுவாகச் சோழர்
குலத்தைக் குறித்ததென்பர். ஆயின் இப்புராணம் பாடுங்காலத்து வாழ்ந்த
அந்நகரத்தரசராகிய அநபாயரைச் சிறப்பாகச் சுட்டி அவர் வந்த குலம் என்ற
பொருள்பெற வைத்தது ஆசிரியர் கருத்துப்போலும். "அநபாயன் றிருக்குலத்து
வழிமுதலோர்" - புகழ்ச்சோழர் புராணம் - (8) என்று இதற்குப் பின்னர்ப்
பொருள் விரித்திருத்தல் காண்க. "மன்னிய அநபாயன்" - (552) என
இக்கருத்தை பெற முன்னர்க் கூறியதும் காண்க. இப்புராணத்துள்ளே
நாயன்மார்களான சோழர்களது தொடர்பு பற்றிய இடங்களில் அநபாயரைச்
சுட்டிக் கூறும் மரபுடைய ஆசிரியர் இங்குக்