மேலாயினமை கண்டு
அவர்கள்பால் மான்கள் அணைகின்றன என்பது
குறிப்பு. எயிற்றியர் - குறிஞ்சிநிலப்பெண்
மக்களின் பெயர். ஈண்டு மகளிர்
என்றது சிறுமிகளை.
மான்
ஆன் முதலிய பிளந்த குளம்புடையவாகிய காயிலைதின்னும்
பிராணிகள் கூட்டமாய் வாழு மியல்புடையனவாம். அவை மக்களால் வீட்டில்
வளர்க்கப்பட்டு அவர்களோடு மிக விரைவிற் பழகி அன்பு பூண்டு வாழ்வன.
குடும்பப் பிராணிகள் (Domestic animals),
என்பர் நவீனர். இவற்றின்
இணையற்ற புனிதமான அன்புக்கு எதிராகத் தம்மை அன்போடு அணையும்
இவற்றை இழிதகைமையால் வன்புடன் கொன்று தின்று வாழ்கின்றவர் பலர்.
இவர்கள் கொடுமைதானென்னே!1
சிறுவர்களும்
சிறுமியர்களும் இளமையிலே தங்கள் தங்கள் தகுதிக்
கேற்றவாறு வெவ்வேறுவகை ஆடல்கள் பயில்கின்றனர். மகார்கள், வீரம்,
ஆண்மை, பெருமிதம், வலிமை முதலியவற்றின் முளைகளாகி
வளர்பவராதலின் புலிக்குருளை கரிக்கன்று இவைகளுடன் ஆடினர். மகளிர்
அவ்வாறன்றி அன்பு இன்பம் முதலியவற்றின் நிலைக்களமாய்
வளரவேண்டுபவர்களாதலின் அன்புற அணையும் மான்பிணைகளோடு இன்புற
மருவியாடினர். ஆணும் பெண்ணும் மக்கட்டன்மையில் ஒரு தன்மையினரே
யென்றும், இருவருமுடன் பயின்று ஒரேவகைக் கல்வி, பயிற்சி, தொழில்
முதலியவற்றிற்குரியார் என்றும் கூறி அதுபற்றி ஒரே பள்ளியில் இருவரும்
உடன்பயிலக் கல்விச் சாலையும் பயிற்சியமைப்பும் அமைத்தும் பலவாறு
கூவித் தடுமாறி யுழன்றும் உலகுக்கு நிலைகேடு விளைக்கும் நவீனர்
இக்கருத்துக்களை யறிந்து சிந்தித்துத் திருந்துவாராக.
இங்குக்
கூறிய புலிக்குருளை முதலியன மேலே கூறிய பார்வை
மிருகங்கள் ஈன்றவையாம் என்றும், அன்றி இவையும் பிடித்துக்கட்டி
வளர்க்கப்படுவனவாம் என்றும் கொள்ளக்கிடக்கின்றது. 675-ம் பாட்டுப்
பார்க்க.
ஆடும்
மகார்களன்றி ஆடும் எயிற்றியர் மகளிர் எங்கும் உள்ளார்
என்க. உள்ளார் என்றது வருவிக்கப்பட்டது.
இவ்வாறே
மேல்வரும் இரண்டு பாட்டுக்களிலும் வினைமுற்று வருவிக்க.
4
654.
|
வெல்படைத்
தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டந்
தோறும்
கொல்லெறி குத்தென் றார்த்துக் குழுமிய வோசை யன்றிச்
சில்லரித் துடியுங் கொம்புஞ் சிறுகணா குளியுங் கூடிக்
கல்லெனு மொலியின் மேலுங் கறங்கிசை யருவி யெங்கும்.5 |
(இ-ள்.)
வெளிப்படை. வெல்லும் படையும், தறுகண்மையும், கடிய
சொல்லும் உடைய வேட்டுவர் கூட்டங்களி லெங்கும் கொல் - எறி - குத்து
என்றும் ஆரவாரித்துக் கூடுதலால் எழும் ஓசைகளேயல்லாமல் சிலவாய
பரல்களையுடைய உடுக்கையும், ஊதுகொம்பும் சிறிய முகமுடைய சிறுபறையும்
சேர்ந்து பெருகுகின்ற ஒலியினும் மிக்குச் சத்தித்து ஓடும் அருவிகள் அங்கே
எங்கும் உள்ளன.
1எங்கள்
கொங்கு நாட்டு மலைச்சாரற் காடுகளிற் கொடிய மிருகங்கள்
உண்டு. அவற்றை வேட்டையாடச் சென்றனர் ஒரு வேட்டைக் கூட்டத்தார்.
வேட்டை தொடங்கி இவர்கள் செய்த ஆர்ப்பரவங்களுக்குப் பயந்து
வேட்டைக் காட்டுக் குள்ளிருந்து ஒரு கலைமான் வெளியில் ஓடிவந்து
இவர்களிடமே நேரில் அடைக்கலம் புகுந்ததுபோல அன்புடன்
வந்தணைந்தது. ஒரு சிறிதும் கருணையின்றி உடனே அதனைப்பற்றித்
தலையைத் திருகிக் கொன்று எடுத்துக் கொண்டனர். இக்கொடுமையைக்
கண்ட கூட்டத்திற் சேர்ந்த என் நண்பர் ஒருவர் நடுநடுங்கி அதுமுதல்
அவ்வேட்டை கூட்டத்தாரை விட்டகன்றனர். இது நான் அறிந்த செய்தி -
பதிப்பாசிரியன்.
|