பிறநாட்டவரும், "பீலிபெய்
சாகாடு" என்று திருக்குறளாசிரியர் உவமான
முகத்தாற் கூறியது உண்மை முகத்தாலும் பொருந்தும் எனக் கொள்ளுமாறு
பெரிய அளவுக்கு, மயிற்பீலியை நமது நாட்டினின்றும் ஏற்றுமதி செய்து
வந்தார்கள் என்று சரிதங்களா லறிக்கின்றோம்.
குழை
- சந்தன முதலிய உயர்ந்தசாதி மரங்களின் இளந்தளிர்கள்.
முச்சி
- உச்சியில் முடித்த கூந்தல். இது கூந்தல் முடிக்கும் ஐம்பாலில்
ஒன்று.
சூர்
- அச்சம். அரிப்பிணவு -
பெண் சிங்கம். பிணா என்றது பிணவு
என நின்றது. நிலா நிலவு என வருவதுபோல. 9
659.
|
பொருவருஞ்
சிறப்பின் மிக்கா ரிவர்க்கினிப் புதல்வர்ப்
பேறே
யரியதென் றெவருஞ் சொல்ல வதற்படு காதல லாலே
முருகல ரலங்கற் செவ்வேல் முருகவேள் முன்றிற் சென்று
பரவுதல் செய்து நாளும் பராய்க்கட னெறியி னிற்பார், 10
|
|
|
660.
|
வாரணச்
சேவ லோடு வாமயிற் குலங்கள் விட்டுத்
தோரண மணிக டூக்கிச் சுரும்பணி கதம்ப நாற்றிப்
போரணி நெடுவே லாற்குப் புகழ்புரி குரவை தூங்கப்
பேரணங் காடல் செய்து பெருவிழா வெடுத்த பின்றை, 11
|
|
|
661.
|
பயில்வடுப்
பொலிந்த யாக்கை வேடர்தம் பதியா நாகற்
கெயிலுடைப் புரங்கள் செற்ற வேந்தையார் மைந்த ரான
மயிலுடைக் கொற்ற வூர்தி வரையுரங் கிழித்த திண்மை
யயிலுடைத் தடக்கை வென்றி யண்ணலா ரருளி னாலே, 12
|
|
|
662.
|
கானவர்
குலம்வி ளங்கத் தத்தைபாற் கருப்ப நீட
வூனமில் பலிகள் போக்கி யுறுகடன் வெறியாட் டோடும்
ஆனவத் திங்கள் செல்ல வளவில் செய் தவத்தி னாலே
பான்மதி யுவரி யீன்றா லெனமகப் பயந்த போது, 13
|
|
|
663.
|
கரிப்பரு
மருப்பின் முத்துங் கழைவிளை செழுநீர் முத்தும்
பொருப்பினின் மணியும் வேடர் பொழிதரு மழையே யன்றி
வரிச்சுரும் பலைய வானின் மலர்மழை பொழிந்த
தெங்கும்; அரிக்குறுந் துடியே யன்றி யமரர்துந் துபியு
மார்த்த. 14
|
659.
(இ-ள்.) வெளிப்படை. ஒப்பற்ற சிறப்பினால் மிக்கார்களாகிய
இவர்க்கு இனிப் புதல்வர்பே றென்பதே கிடைத்தற்கரியதாம் என்று
எல்லாருங் கூற, அப்பேற்றிலே பட்ட ஆசை மிகுதியாலே வாசமிக்கலர்ந்த
மாலையணிந்த செவ்வேலேந்திய முருகவேளினது திருமுன்றிலிற்
சென்று
பரவி நாடோறும் பரவுக்கடன் பூண்ட நெறியிலே நிற்பார்களாகி, 10
660.
(இ-ள்.) வெளிப்படை. அந்நெறியிலே
சேவற் கோழிகளையும்
வரிகளையுடைய மயில்களையும் காணிக்கையாக விட்டும், தோரணமாக
மணிகளைத் தொங்க வைத்தும், வண்டுகள் மொய்க்கும் அழகிய கடப்ப
மாலைகளைத் தொங்கவிட்டும், போரில் வல்ல அழகிய நீண்ட வேலேந்திய
முருகப் பெருமானுக்குப் புகழ் புரியும் குரவைக்
கூத்தாடப் பெரிய
அணங்காடல் செய்வித்தும் பெருவிழா எடுத்துச் செய்த பின்னர், 11
|