பக்கம் எண் :

திருத்தொண்டர் புராணமும் - உரையும்29

பெறும்படி பரவும் காதலியாராகிய பகவதியாரது மணிவயிற்றினிடமாக; உருத்தெரிய உளதாக - உருவம் தெரியவரும் கருப்பமாகிய பெரும் பிள்ளைப்பேறு உலகமுய்யும்படி உளதாயிற்று; அவ்வாறாகவே.
     (வி-ரை.) இப்பாட்டினாற் கணவனார் புரிந்த தவத்தின் பயன்பெறும் பொருட்டு அவரது கருத்தமைந்த கற்புநெறியில் நின்ற மனைவியார் செய்த வழிபாடும் பயனும் கூறப்பட்டன.
     பெரியநாச்சியார் - பெரியநாயகியம்மையார். திருத்தோணியில் எழுந்தருளிய அம்மையாரின் திருப்பெயர். இவரே பின்னர்ப் பிள்ளையாரைப் பாலூட்டியவர்.
     வழிபட்டுப் பரவும் - என்க. சிவபாதவிருதயர் செயலைத் தவம் புரிந்தார் என்றும், அது முடியும்படி மனைவியார் செய்த செயலை வழிபட்டுப் பரவும் என்றும் கூறியது கணவர் செயலே தமது செயலாகக்கொண்டு அதற்கேற்றபடி ஒழுகும் கற்புநிலையினைக் காட்டுங் கருத்து. "கற்புமேம் படுசிறப்பாற் கணவனார் கருத்தமைந்தார்" (1914) என்றதும் இது.
     திருத்தோணி வீற்றிருந்தார் - சீகாழியில் இலிங்கம், குரு, சங்கமம் என்ற மூன்று திருமேனிகளிலும் இறைவர் வெளிப்பட்டுத் திருத்கோயிலிற் பிரமபுரீசர் என்றும், தோணியில் தோணியப்பர் என்றும், மேல் விமானத்தில் சட்டைநாதர் என்றும் எழுந்தருளியுள்ளார். அவருள்ளே பகவதியார் வழிபட்டது தோணியப்பரை என்பதாம். பிள்ளையாருக்கு வெளிப்பட் டருள்புரிந்த வரலாறு பின்னர்க் காண்க.
     வயிற்றில் உருத்தெரியவரும் பெரும்பேறு - உளதாக - வயிற்றினிடமாகப் பிள்ளையாரது திருஉருவம் வெளிப்படும் காரணமான பெரும்பேறாகிய கருப்பம் தரித்ததாக. பேறு - பிள்பை்பேறு; மக்கட்பேறு - என்ற வழக்கும் காண்க. ஏனைய மக்கட்பேறு போலன்றி இது மக்களையெல்லாம் உய்விக்கவல்லது என்பார் பெரும்பேறு என்றார்.
     உலகுய்ய என்றது அக்கருத்தை விளக்கியதுடன், சிவபாதவிருதயர் வேண்டியபடி அப்பேறு அமைந்ததனையும் குறித்தது. உருத்தெரிய - உளதாக என்றதற்குக் கருப்பத் தோற்றம் மட்டும் உளதாயிற்று என்றுரைப்பாருமுளர்.
     திருவயிற்றில் - என்பதும் பாடம்.
20
பத்துத் திங்களினும் சடங்கு
11919.ஆளுடையா ளுடன்றோணி யமர்ந்தபிரா னருள்போற்றி
மூளுமகிழ்ச் சியிற்றங்கள் முதன்மறைநூன் முறைச்சடங்கு
நாளுடைய வீரைந்து திங்களினு நலஞ்சிறப்பக்
கேளிருடன் செயல்புரிந்து பேரின்பங் கிளர்வுறுநாள்.
21
     (இ-ள்.) ஆளுடையாளுடன் .... போற்றி - ஆளுடைய பிராட்டியோடு திருத்தோணியில் எழுந்தருளிய பெருமானுடைய திருவருளைத் துதித்து; மூளும் மகிழ்ச்சியின் - பெருகும் மகிழ்ச்சியுடனே; தங்கள்....செயல் புரிந்து - தங்கள் முதன்மையான வேதங்களின் விதித்த முறைப்படிசெய்யும் உரிய சடங்குகளையெல்லாம் நாளினை முதலாகவுடைய பத்து மாதங்களிலும் நலம் பெருகும்படி சுற்றத்தாருடனே கூடிச் செய்து; பேரின்பம் கிளர்வுறும் நாள் - பெரிய இன்பம் கிளர்வுறும் அத்திருநாளிலே.
     (வி-ரை.) அருள் போற்றி - வழிபாட்டுப் பரவியபடி அவரது திருவருளினால் பேறு உளதாயிற்றாகலான் அதனை மறவாது போற்றினார்.
     முதன்மறை நூல் முறைச் சடங்கு - முதன்மறை - முதன்மை பெற்ற முரை முதன் மறை - ருக்வேதமென்று கொண்டு, சிவபாத விருதயர் ருக்வேதி யென்று