பக்கம் எண் :

758திருஞானசம்பந்தநாயனார் புராணம்

வித்தல் - புனித நீறளித்து அணியும்படி செய்தல்; இறைவனதருளின்வழிச் செய்வித்து என்ற குறிப்புப்பெறப் பிறவினை வாய்பாட்டாற் கூறினார்; "தென்னவன்றனக்கு நீறு சிரபுரச் செல்வரீந்தார், முன்னவன் பணிந்து கொண்டு முழுவது மணிந்து நின்றான்; மன்னனீ றணிந்தா னென்று மற்றவன் மதுரை வாழ்வார், துன்னி நின்றார்க ளெல்லாந் தூயநீ றணிந்து கொண்டார்" (2755) என்பதன் முற்குறிப்பு இங்குக் காணத்தக்கது; வேந்தனையும் என்றதனால் "மன்ன னெப்படி மன்னுயி ரப்படி?"; "மன்னவன் வழித்தே மன்பனத யுலகம்" என்றபடி அவனைப் பற்றிய மக்களையும் என்பது குறிப்பிடப்பட்டது.
616
     அங்குநின்ற செயல் சிவனடியார் செயலேயாக - செயல் - ஒழுக்கம்; சிவனடியார் செயலே - சிவனடியார்கள் மேற்கொள்ளும் ஒழுக்கமேயாக; ஏகாரம் பிரிநிலை.
     வென்றருளி - ஆக்கி - இடுவித்து - என்பன அற்றைநாளில் பிள்ளையார் செய்தருளும்படி அவர்கள் வேண்டிய செயல்கள்; சிவனடியார் செயலேயாக நினைத்தருளல் என்றது பிற்றை நாள்களிலும் என்றும் இவ்வாறே குறைவின்றிச் சைவ ஒழுக்கம் நிலைநிற்கும்படி எண்ணி ஆசிபுரிதல். இதனை ஏற்றுப் பிள்ளையார் அருள் புரிந்த நல "வாழ்க வந்தணர்" என்ற திப்பாசுரத்தில் அருளியவாற்றாலறிக.
     நினைந்தருளவேண்டும் - ஆசாரியரது நினைவு சிவசங்கற்பமுமாதலின் அந்நினைப்பினுள் நின்று இறைவன் அருளுவதுறுதி என்பது கருத்து. "நினையாதார் புரமெரிய நினைந்த" (தேவா).
     நின்று போற்ற - வணங்கி எழுந்துநின்று துதிக்க; என - என்று மொழிந்து.
     நம்பர் பாதம் - என்பதும் பாடம்.
614
     2513. (வி-ரை.) மற்று அவர்கட்கு அருள்புரிந்து - அவர்கட்கு - விண்ணப்பஞ் செய்த பாண்டிய நாட்டவர்க்கும், நின்று போற்றிய தொண்டர்க்கும்; இருவரும் ஒரே பொருள்பற்றிய விண்ணப்பஞ் செய்தாராதலின் அவற்றிற்குப் பிள்ளையார் அருள் புரிந்ததனை ஈண்டு ஒன்றுசேர்த்துக் கூறினார்.
     பிள்ளையாரும் வாகீச முனிவருடன் கூடச் சென்று - திருமடங்களினின்று இருவரும்கூடத் திருக்கோயிலுக்குச்சென்று; பாண்டிநாட்டவர் வந்து விண்ணப்பித்த இடம் பிள்ளையாரது திருமடமாதலின் (2507) அங்குநின்று போந்து அரசுகளுடன் கூடச் சென்றருளினர்; உடன் உருபைச் சிறப்புப்பற்றி அரசுகளுடன் சேர்த்துக் கூறினார்; மேல் 2514ல் நிகழவுள்ள வரலாற்றுக் குறிப்பு.
     பெற்றம் உயத்ந்தவர் - கொடி உயர்த்துதல் வெற்றியும் மேன்மையும் குறிக்கும்; இனிப் பாண்டி நாட்டுக்கும் சைவத்திற்கும் வரும் வெற்றியும் ஆக்கமும் குறிப்பு.
     பெற்றம் உயத்ந்தவர் பாதம் பணிந்து போந்து - உட்புகுந்து திருமுன்பு பணிந்து திருமுன்றிலிற் புறம்புபோந்து; "அவர்கட் கருள்புரிந்த" பிள்ளையார் பின்னர்த் திருவருளை முன்னிட்டு அதனை அரசுகளிடமும் அறிவித்து முடிபு கொண்டு துணிவதன்முன், இறைவரருளைப் பெற்றுத் தொடங்குவதற்காக இங்குப் பணிந்து புறம் போந்தனர்; இறைவரிடம் விடைபெற்று அப்பதியினின்றும் புறப்படும் கருத்தன்று; அது பின்னர் "மீண்டும் புக்குப் பாதமுறப் பணிந்தெழுந்து பாடிப் போற்றிப் பரசியருள்பெற்று விடைகொண்டு போந்து" (2516)என்றதனாற் பெறப்படும்.
     பெரிய திருக்கோபுரத்துள் இருந்து - வார்த்தை - சொற்றனி மன்னவருக்குப் புகலி மன்னர் சொல்லி - பெரிய திருக்கோபுரம் - திருமுன்றிலின்புறத்து அபிமுகத்துள்ள கோபுரங்களும் பெரிய கோபுரம். பெரிய திருக்கோபுரத்துள் இருந்து -