வஞ்சனை - வஞ்சித்துச்செய்யும் தொழில்கள்;
அவதி - எல்லை; அளவு;
அவதி - தீமை - தொல்லை - துன்பம் - என்று கொண்டு, அமண்கையர் வஞ்சனை செய்வார்; ஆனால் அதனால் தீங்கு வாராது என்ற குறிப்புப்படவும் நின்றது; இப்பொருளில்
ஓர் - ஒன்றும் என முற்றும்மை விரித்துரைத்துக்கொள்க; "ஆனால் உரை செய்வதொன்றுளது; அது கோள் தீய ஆனதாற் செல்ல உடன்படுவதொண்ணாது" என்றுரைக்க.
அமண்கையர் - அமண் - ஆடையில்லாமை;
கையர் - கைக்கொள்பவர்; அமணராகிய கீழ்கள் என்றலுமாம் - மானமில்லாமையும் தீக்குணமும் குறிப்பு.
உறுகோள் உறும் - பொருந்தும்; கோள் - நவக்கோள்கள்; கிரகநிலை; "உறுகோளு நாளும்" (பதிகம் - 11). செல்ல உடன்படுவது - பிள்ளையார் உடன்படுவதென்றும், தாம் உடன்படுவதென்றும் இருவழியும் உரைக்கநின்றது. "பரசுவது...அணையாது" எனப் பகர்த்து - இது பிள்ளையார் எடுத்துக் கூறியபடி பதிகக் கருத்தும் குறிப்புமாம்; பதிக மகுடம் காண்க. பரமர் தாள்போற்றி - பதிகத்தால் அரசுகளது தடைக்கு விடை பகர்ந்ததனோடு பரமர் துணைசெய்தருளும்படி போற்றியதுமாம்; "அடியாரை வந்து நலியாத வண்ண முறைசெய், ஆன சொன்மாலை" (பதிகம் - 11). "வேயுறு தோளி"யை - "வேயுறு தோளி" என்று தொடங்கும் பதிகத்தை; முதற்குறிப்பு. | | | | |