|
எடுத்து விளம்பினார் - தொடங்கிப் பாடியருளினார்; இப்பாட்டின் பொருள் முன் 1552 - 1553 - 1554 பாட்டுக்களில் விரிக்கப்பட்டமையும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. |
616 |
பொது - கோளறு பதிகம் |
திருச்சிற்றம்பலம் | பண் - பியந்தைக் காந்தாரம் |
|
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி |
மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தெ னுளமே புகுந்த வதனால் |
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி சனிபரம் பிரண்டுமுடனே |
ஆசறு;நல்ல நல்ல; வவைநல்ல நல்ல;வடியா ரவர்க்கு மிகவே. |
(1) |
தேனமர் பொழில்கொ ளாலை விளைசெந்நெ றுன்னி வளர்செம்பொ னெங்கு நிகழ |
நான்முக னாதி யாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன் |
றானுறு கோளு நாளு மடியாரை வந்து நலியாத வண்ண முரைசெய் |
ஆனசொன் மாலை யோது மடியார்கள் வானி லரசாள்வ ராணை நமதே! |
(11) |
திருச்சிற்றம்பலம் |
பதிகக் குறிப்பு :- பரசுவது நம்பெருமான் கழல்களென்றாற் பழுதணையாதெனப் பகர்ந்து பரமர்தாள் போற்றுதல் என ஆசிரியர் முன் (2514) காட்டியருளியபடி கண்டுகொள்க. குறிப்பு - வேயுறு தோளி என்று தொடங்கியது வெற்றிதரும் சிவ சக்தியை முன்னிட்டது குறிப்பு. "போகமார்த்த பூண் முலையாள்" "தளரிள வள ரொளி", "பாடகமெல்லடிப் பாவை" முதலியவையும் பார்க்க. (வ. சு. செ. குறிப்பு) |
பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) மிக நல்ல வீணை தடவி - "கங்காளராய் வருங்கடன் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே" (திருவிருத் - தனி) என்றபடி உலகம் புனருற்பவமாய் வரும்பொருட்டு இறைவர் சங்காரத்திறுதியில் வீணை ஒலியினை ஆக்கிக் கேட்பர் என்பது; "ஓதத் தொலிமடங்கி யூருண் டேறியொத்துலக மெல்லா மொடுங்கியபின், வேதத் தொலிகொண்டு வீணைகேட்பார் வெண்காடு மேவிய விகிர்த னாரே" (தாண்) என்றபடி இவ்வீணை ஒலி தம்முள் ஒடுங்கிய உலகம் மீள வருமாறு நாதரூபமாய்ச் சுத்த மாயையின் முதல் விருத்தியாகி நிகழ்வது. இங்கு "வீணை தடவி என்னுளமே புகுந்த" என்றதனால் சமண் மாசும் ஆசும் அறுதலாகிய சங்காரக் குறிப்பும், மீளச் சைவத்தின் ஆக்கமாகிய புனருற்பவக் குறிப்பும் பெறப்பட்டன; புகுந்த அதனால் - ஆசறுதலும் நல்லவாதலும் அவன் அருள் காரணமாகவே நிகழ்வன என்று தற்போத மிழந்தநிலை குறித்தது; "பரசுவது நம்பெருமான் கழல்க ளென்றால் பழுதணையாது" (2514) என்று ஆசிரியர் இதன் கருத்தை விளக்கியருளினர்; ஞாயிறு...பாம்பிரண்டும் - இவை நாளும் கோளும் குறித்தன; ஏழு நாட்களின் பெயரோடு ஒன்பது கோள்களையும் இவ்வாறு அடையின்றி ஓர் அடியில் அடக்கிக்கூறியது தெய்வ அருட்கவி நலம். அவற்றின் விரிந்த பெரிய வன்மைகள் யாவும் இவ்வாறு ஒடுங்கிநிற்கப் பணித்தது அருள்வன்மை; "பெரியநின் வலியை யின்னே, தேற்றம துறாத கொள்கைச் சிறியநம் வன்மை தன்னா, லூற்றுடைப் பாலிற் புக்க வுறையென வடுது மன்றே" (கந்தபு-இரண்-சூர-யுத்-பட-252) என்று ஆரனுக்கு முருகப்பெருமானருளிய அருட்கூற்று இங்கு நினைவுகூர்தற்பாலது; உடனே - ஒன்றொன்றாயன்றி ஒருங்கே; ஆசரும் - தீமை - நீங்கும்; நல்லநல்ல - பொருளுக்கு அழிவுகூறாத சற்காரியவாதம் சைவ |