|
பட்டனர். அதன் பின் இற்றை நாளிலும், சிவநெறியினின்றும் முரண்பட்டு அதனைப் பலவாற்றானும் குறையச்செய்யும் நோக்கமும் ஊக்கமும் கொண்ட கிறித்தவர் முதலிய புறச் சமயிகள் இம்மலைகளிலே முன் போந்தாரின் வழித் தோன்றல்களாக வதிந்து வருதல் முன் வரலாற்றின் உண்மையை மேலும் வற்புறுத்தி மெய்ப்படுத்துகின்றது என்க. |
அழிவு முன் சாற்றலுற்று - பின்வரும் அழிவை முன்னே தெரிவிக்கும் அறிவிப்பாகி. |
வெருக் கொள்ளுதல் - காரணம் தோற்றாது சடுதியில் அச்சங் கொள்ளுதல்; "வெருக் கொண்டார் போலழுவர்" (1953). |
தீக்கனாக்களோடும் துன்னிமித்தங்கள் - நிகழ்ந்தன - கனாக்கள் கனவு நிலையினும், நிமித்தங்கள் நனவு நிலையினும் காணும் அறிவிப்புக்கள். இவை யிரண்டும் பிற்பயன்களை முன் அறிவிப்பன என்பது துணிபு. நோயும் முன்நினைவுகளும் காரணமாகவும், இவ்வாறுள்ள பிற காரணங்களாலும், பகலிலும், நிகழும் கனாக்கள் பயன் காட்டா என்பர். சிற்சில நிமித்தங்களும் அவ்வாறே கழியும். ஆனால் கருமம் பற்றி இறைவனியதியில் வரும் கனா நிமித்தங்கள் பலனறிவிப்பனவேயாம் என்க. |
அங்கு - எண் பெருங் குன்றங்களில் அவ்வப்பள்ளிகளிலும் அமணர் பதிகளிலும். |
அமணர்க்குத்துன் னிமித் தங்கள் |
2530.பள்ளிகண் மேலு மாடு பயிலமண் பாழி மேலும் |
ஒள்ளித ழசோகின் மேலு முணவுசெய் கவளங் கையிற் |
கொள்ளுமண் டபங்கள் மேலுங் கூகையோ டாந்தை தீய் |
புள்ளின மான தம்மிற் பூசலிட் டழிவு சாற்றும். |
632 |
(இ-ள்.) பள்ளிகள் மேலும் - சமணரது கோயில்களின் மேலும்; மாடு...மேலும் - அவற்றின் பக்கத்தில் சமணகுருமார் தங்கும் குகைகளின் மேலும்; ஒள் இதழ் அசோகின் மேலும் - ஒள்ளிய இதழ்களையுடைய அசோக மரங்களின் மேலும்; உணவு செய்...மண்டபங்கள் மேலும் - உணவு செய்யும் கவளங்களைக் கையில் ஏந்திக் கொள்ளுதற்குரிய மண்டபங்களின் மேலும்; கூகையோடு...அழிவு சாற்றும் - கூகைகளோடு ஆந்தைகளும் பிற தீய பறவைக்கூட்டமும் தம்முட்போர் செய்து பின்வரும் கேட்டைத் தெரிவிக்கும். |
(வி-ரை.) இது முதல் மூன்று பாட்டுக்களினும் சமணர்க்கு நேர்ந்த துன்னி மித்தங்கள் கூறப்பட்டன. மேல் 2535 முதல் 2538 வரை நான்கு பாட்டுக்களால் அவர்கள் கண்ட தீக்கனாக்களின் தன்மை கூறப்படுதல் காண்க. |
கூகையோடு...அழிவு சாற்றும் - "பல் சகுண மெல்லா முறைமுறை தீங்கு செய்ய, வித்தகு தீய புட்களீண்டமுன் னுதிரங் காட்டு மத்தனுக்கு" (812) என்று புட்கள் தீச்சகுணமாகிய உதிரங்காட்டும் தன்மைபற்றிக் கண்ணப்ப நாயனாந் வரலாற்றிற் கூறியது காண்க; கூகை ஆந்தை தீயபுள்ளினம் - கூகையும் ஆந்தையும் முதலியவை காணலாகாதனவும் கேட்கலாகா தனவுமாகிய புட்கள் என்பர்; இவை பெரும்பான்மை சுடலைகளினும் பாலைவனங்களினும் வசிக்கும். அம்மை மூத்த பதிகங்கள் பார்க்க. |
தீயபுட்கள் - எப்போதும் தீமை காட்டுவனவும், ஒவ்வோர் நிலையில் தீமை காட்டுவனவுமாம். காக்கை இடம் சென்றால் தீ தென்பது வழக்கு. "கொடியிடமாப் போந்த குறை" -, என்று சிலேடைபட முருகனைப்பாடினன் ஒரு புலவன். |
கூகை - கோட்டான்; பூசலிட்டு - ஒலி செய்து; கூவி. இவை கண்களில் தீயின் கூறு மிக்குடையன. ஆதலின் இரவில் இருளில் பார்வையுடையன. பூனைகள்போல; இத்தன்மையால் இருட்டன்மையுடைய சாக்காடு முதலிய துன்பங்களின் அணுகுதலை முன் அறியும் தன்மை பெற்றமையால் அதனை அறிந்து கூவுவன; அது பற்றி இவற்றின் கூவுதல் தீமையை முன்குறிக்கு மென்ப. |
புள்ளிவையான - என்பதும் பாடம். |
632 |