| மாய்ந்தொழிவதற்காக; ஆனபெருகு...நலம்படைப்ப - ஆயின பெருகிய ஒளியின் பரப்பினாலே எல்லா அண்டங்களையும் தனது நிறைவினுள் அடக்கிக் கொண்டதாகிய; ஒப்பற்றதொரு ஞானமணிவிளக்கு எழுந்துவருவது போலும் நன்மையைச் செய்யவும், |
| 2551. (இ-ள்) புரசை...பயன்விளங்க - கழுத்துக் கயிற்றையும் வெற்றியினையும் உடைய மதம்பொருந்திய யானைகளையுடைய பாண்டியர்களது தமிழ் நாட்டின் நிலம்செய்த தவத்தின் பயன் விளங்கவும்; சைவநெறி தழைத்தோங்க - சைவநேறி தழைத்தோங்கும் பொருட்டும்; உரைசெய்...பணிமாற - எடுத்துச் சொல்லும் திருப்பெயர்கள் பலவற்றையும் ஊதுகின்ற முத்துச் சின்னங்கள் பாவும் "பாசமய கோளரி வந்தான்" என்று பணிமாறவும்; |
| 653 |
| 2552. (இ-ள்) இப்பரிசு...எழுந்தருளும்பொழுது - இவ்வாறாகிய பரிசுகளுடன் அணைகின்ற சீகாழித் தலைவர் எழுந்தருளிவரும் அப்பொழுது; இசைக்கும்...ஓசை - இசைக்கின்ற ஒப்பில்லாத முத்துக்களாலாகிய அழகிய தனிக்காளமானவை உலகமுய்ய எடுத்துச் சொல்லுதலால் எழுகின்ற ஓசையானது; செப்பரும்...தேக்க - சொல்லுதற்கரிதாகிய பெருமையுடைய குலச்சிறை நாயனாரது திருச்செவிகளில் நிறையும் அமுதம் போலப் பெருகியிட; அப்பொழுது...ஆனார் - அப்பொழுது அறிந்து நிலத்தின்மேல் மேனிபட வீழ்ந்து பணிந்தே அளத்தற்கரிய மகிழ்ச்சியையுடையவராயினார். |
| 654 |
| இந்த ஆறு பாட்டுகளும் ஒரு பொருள்மேல் வந்து தொடர்ந்து ஒரு பொருள் கொண்டுரைக்க நின்றன. |
| 2547. (வி-ரை) தூரியங்கள் கிளராமே மறை எடுப்ப - தூரியங்கள் - மங்கலம் முழக்கும் பல வகைப் பெருவாத்தியங்கள்; கிளராமே - ஓசை மேலோங்காத படி; உச்சசுரத்தில் மறை முழுக்குதலால் தூரியங்களின் ஓசை கீழ்ப்பட்டன என்பதாம்; ஆயிரம் மாமறைகள் - ஆயிரம் - மிகுதி குறித்தது; தூரியங்கள் கிளராமைக்குக் காரணம் காட்டியபடி; எடுப்ப - இனி அந்நாட்டில் எடுக்கும் பொருட்டு என்ற குறிப்பும், மறையொலியின் மிகுதிக் குறிப்புமாம். |
| மங்கல நாதம் - மங்கல ஓசை முழக்கும் சங்கு, முரசம் முதலியவற்றின் நாதங்கள்; மாதிரம் - திக்குக்கள்; உட்படுதல் - நாதத்தின் பரப்பினால் திக்குக்களும் அதனுட்படும்படி விரிந்து செல்லுதல். |
| செந்தமிழ்மாருதம் எம்மருங்கும் சேவிப்ப - செந்தமிழ் மாருதம் - செந்தமிழுடன் பொருந்தி வருகின்ற தென்றல்; தமிழுடன் பொருந்துதலாவது - செந்தமிழ் முனிவனது இருக்கையாகிய பொதிகையின்றும் பிறந்து வருதல். "பிறந்த தெங்கள் பிரான் மலயத்திடை...மறம் பயின்றதெங் கோதமிழ் மாருதம்" (313) என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க; தமிழ் மலையிற் பிறந்து தமிழ் நாட்டிற் பயின்று தமிழுடன் விரவி வருதலால் செந்தமிழ் ஞானசம்பந்தரைச் சேவிக்க வந்தது என்ற நயமும் காண்க; செந்தமிழ் ஞானத்தமிழைச் சேவித்தல் முறையாதலும் குறிப்பு. |
| எம்மருங்கும் - மாருதம் தென்றற் காற்றாகலின் தெற்கு நின்று வடக்கு நோக்கிப் பிள்ளையாரையும் உடன்வரும் நற்றவர் கூட்டத்தையும் எல்லாப் பக்கமும் சூழ்ந்து கொண்டு சேவித்தது.மாருதம் - பாண்டி நாட்டுக் குரித்தாதலும் குறிப்பு. |
| எதிர்கொண்டு - எதிர் வரவேற்றல்போல; மாருதம் எதிர்கொண்டு சேவிப்ப என்றது தற்குறிபற்றம். எதிர் கொள்ளுதல் - வடக்கினின்றும் தெற்கு நோக்கி மதுரைக்கு வருவாரைத், தெற்கினின்றும் வடக்கு நோக்கிச் சென்று சூழும நிலை உண்மையில் எதிர் கொண்டதாம் என்க. |
| 649 |