2549 | துன்னுமுழு வுடற்றுகளாற் சூழுமுணர் வினிற்றுகளால் அன்னெறியிற் செறிந்தடர்ந்த வமண்மாசு கழுவுதற்கு மன்னியொளிர் வெண்மையினாற் றூய்மையினால் வழுதியர்தங் கன்னிநாட் டிடைக்கங்கை யணைந்ததெனுங் கவின்காட்ட, | |
| 651 |
2550 | பானல்வயற் றமிழ்நாடு பழிநாடும் படிபரந்த மானமிலா வமணென்னும் வல்லிருள்போய் மாய்வதனுக் கானபெரு கொளிப்பரப்பா லண்டமெலாங் கொண்டதொரு ஞானமணி விளக்கெழுந்து வருவதென நலம்படைப்ப, | |
| 652 |
2551 | புரசைவயக் கடகளிற்றுப் பூமியர்வண் டமிழ்நாட்டுத் தரைசெய்தவப் பயன்விளங்கச் சைவநெறி தழைத்தோங்க வுரைசெய்திருப் பேர்பலவு மூதுமணிச் சின்னமெலாம் "பரசமய கோளரிவந் தா"னென்று பணிமாற, | |
| 653 |
| வேறு |
2552 | இப்பரி சணையுஞ் சண்பையர் பெருமா னெழுந்தரு ளும்பொழு திசைக்கும் ஒப்பினித் திலப்பொற் றனிப்பெருங்காளமுல குய்ய வொலித்தெழு மோசை செப்பரும் பெருமைக் குலச்சிறை யார்தஞ் செவிநிறை யமுதெனத்தேக்க அப்பொழு தறிந்து தலத்தின்மேற் பணிந்தே யளப்பருங் களிப்பினரானார். | |
| 654 |
| 2547. (இ-ள்) துந்துபிகள்...மறை எடுப்ப - துந்துபி முதலாகிய வாத்தியங்களின் ஓசை மேலெழாமல் அந்தணர்களாகிய மறை முனிவர்கள் அனந்தமாகிய வேதங்களை எடுத்தியம்பவும்; வந்தெழும்...முழங்க - வந்து எழுகின்ற மங்கல நாதங்கள் எல்லாத் திசைகளும் உட்பட முழங்கவும்; செந்தமிழ்...சேவிப்ப - செந்தமிழுடன் பொருந்தி வரும் தென்றற் காற்றும் எதிர்கொண்டு வரவேற்று எப்பக்கமும் சேவிப்பவும், |
| 649 |
| 2548. (இ-ள்) பண்ணிய...பரந்த - செய்த வஞ்சனை பொருந்திய தவம் முன்னிலையாகப் பாண்டிய நாட்டில் பரவிய; எண்ணில்...இரிந்தோட - எண்ணில்லாத சமணம் என்னும் பாவமாகிய பெரிய சேனை உடைந்து ஓடும்படியாக; மண்ணுலகமே யன்றி... செய்த - இந்நிலவுலகமே யல்லாமல் விண்ணுலகமும் கூடிச் செய்ததாகிய; பெரும்...பொலிவெய்த - பெரிய புண்ணியமாகிய படை எழுச்சி போலப் பொருந்திய பொலிவு உண்டாகவும்; |
| 650 |
| 2549. (இ-ள்) துன்னும்...துகளால் - நெருங்கிப் பொருந்தி முழுவுடலில் உள்ள அழுக்கினாலும், தீய சூழ்ச்சியை உடைய உணர்வின் மாசினாலும்; அல் நெறியில்...கழுவுதற்கு - நெறியல்லா நேறியில் முழுதும் சேர்ந்த சமணம் என்னும் அழுக்கினைக் கழுவிப் போக்கித் தூய்மையாக்குதற்காக; மன்னியொளிர்...தூய்மையினால் - நிலைபெற்று விளங்கும் வெண்மையினாலும் தூய தன்மையினாலும்; தங்கை - கங்கை நதியே; வழுதியர்...இடை - பாண்டியரது கன்னி நாட்டிலே; அணைந்தது எனும் கவின் காட்ட - வந்து சேர்ந்தது போன்ற அழகினை எடுத்துக் காட்டவும்; |
| 651 |
| 2550. (இ-ள்) பானல்...பரந்த - கருங்குவளை மலர்களையுடைய வயல்கள் சூழ்ந்த தமிழ் நாடானது பழியைச் சேரும்படி அங்குப் பரவிச் சூழ்ந்த; மானமிலா...மாய்வதனுக்கு - மானமில்லாதஅமணர் என்னும் வலிய இருளானது கெட்டுப்போய் |