| பட முன் நிறுத்திய, கொச்சகக் கலிப்பாவினாலே மீண்டும் யாத்த நயமும் காண்க. இடைப்பட்ட எல்லாம் வேறாகிய அறுசீர் விருத்தமாதலும் காண்க. |
| திருநிலவு - திரு - சிவனது அருட்பெருகும் திரு; சிவனருளால் வந்த திரு; மணி - அழகிய; மணியாகிய என்றலுமாம். |
| சிவிகையின்மேற் சேவித்து வரும் மதிபோல் - குடைநிழற்ற - சிவிகையின் மேல் கவித்த முத்துக்குடை ஒரு மதிபோன்றிருந்தது; மதி அங்கு நிற்கும் இயைபு என்னை? எனின் மதியாதலின் மேனின்று சேவித்தது போல நின்றது என்பதாம்; குடைக்கு மதி மெய்பற்றி வந்த உவமம்; சேவித்து வரும் மதி என்றது தற்குறிப்பேற்றம்; மதிமுதல் வானவர் பிள்ளையாரைச் சேவித்து வரத்தக்கார் என்பதும் உட்குறிப்பு; 137, 1395, வெள் - சருக் - 34 முதலியவை பார்க்க. "சதுரானனனுஞ் சக்ராயுதனும், சந்த்ராதவரும் இந்த்ராதியரும், மதுரா புரிவா தறிவா மெனமேமல் வரவந்தனன் வைதிக வாரணமே"(தக்கயா); மதி - பாண்டியர் குல முதல்வன் என்பதும் குறிப்பு. |
| பெருகுஒளிய திருநீறு - இதுவரை "பூதி சாதன விளக்கம் போற்றல் பெறா தொழிந்த" நிலை மாறி, இனி அத்திருநீற்றின் ஒளி பாண்டிய நாட்டிற் பெருக நிகழ்வது குறிப்பு; ஏனைய ஒளிகள் யாவும் குறைந்தொழிய, அவ்வாறு குறைந்தழியாது நித்தமாய்ப் பெருகும் ஒளியாகிய திருநீறு என்ற கருத்தும் காண்க; ஞானம் பெருகும் ஒளி என்றலும் ஆம். |
| பெருகிவர - அங்கங்கும் தொண்டர் கூட்டம் வந்து சார்ந்து பெருக. இனிப் பாண்டி நாட்டிற் பெருகி வரும்படி என்றலுமாம். |
| வளரொளி வெண்குடை போல் நிழற்ற - அம்முத்தின் ஒளியே போலப் பெருகொளிய திருநீற்றுத் தொண்டர் குழாம் புடைசூழ என்ற நயமும் காண்க; வெண்ணீற்றொளி போற்றி நின்று"(2214) என்ற கருத்தைச் சிந்திக்க. |
| அருள்பெருக - அமுதுண்டார் - உலகில் சிவனருள் பெருகும்படி தாம் அமுதுண்டவர்; ஏனையோர் அமுதுண்டால் அது அவ்வவர்க்கே சில நலந் தந்தொழிய இவர் அமுதுண்டமை உலகில் யாவர்க்கும் சிவனருள் பெருகச் செய்தது; "திருத்தோணியமர்ந்த பிரானருள் பெருக"(1924) |
| வரும் - உலகில் வந்தவதரித்த; அருள்பெருக வரும் - சிவனருள் பெருகிப் பாண்டி நாட்டில் நிகழும் பொருட்டுவரும் என்ற குறிப்பும் காண்க. |
| வளர்ஞானத்தமுது - என்பதும் பாடம். |
| 648 |
2547 | துந்துபிகண் முதலாய தூரியங்கள் கிளராமே அந்தணரா மாதவர்க ளாயிரமா மறையெடுப்ப, வந்தெழுமங் கலநாத மாதிரமுட் படமுழங்கச் செந்தமிழ்மா ருதமெதிர்கொண் டெம்மருங்குஞ் சேவிப்ப, | |
| 649 |
2548 | பண்ணியவஞ் சனைத்தவத்தாற் பஞ்சவனாட் டிடைப்பரந்த எண்ணிலம ணெனும்பாவ விருஞ்சேனை யிரிந்தோட மண்ணுலக மேயன்றி வானுலகுஞ் செய்தபெரும் புண்ணியத்தின் படையெழுச்சி போலெய்தும் பொலிவெய்த, | |
| 650 |