பக்கம் எண் :

[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்797

 கேற்றபடி நிகழ்ந்தனவேயன்றி மறைக்கப்படவில்லை; தொண்டர்களும் பலர் இருந்தனர்; வழிபாடுகளும் அருசியேனும் நிகழ்ந்து வந்தன; 2573 பார்க்க; தேவியார் திருக்கோயிலுக்குச் சென்று அவ்வப்போது வழிபடுதலையும் கோயிற் பணிகளையும் அரசன் முற்றும் மறுத்தானல்லன்; இவ்வாற்றலெல்லாம் மாதேவியார் கொற்றவன் றனக்கும் கூறிச் சென்றமை முன் கூற்றோடு முரணாது அமையுமென்க; அற்றேல் அஃதாக, மாதேவியார் கூறிச் சென்றமையும், அதற்குக் கொற்றவன் மாறாது இசைந்தமை யாதோ? எனின், அஃது அவன் மன நிலை; முன் விரித்தவாறு முற்றும் மாறியொழியாமையானும் திருவருட்டுணையானும் அமைவுடைத்தாயிற் றென்க. பின் சரித விளைவுகளும் கருதுக.
 தம் பரிசனங்கள் சூழத் தனித்தடையோடும் சென்று - தம் பரிசனங்களாவார் - மாதேவியார்க்குரிய அந்தப்புரத்துத் தனிப் பரிசனங்கள்; இவர்கள் பெரும்பான்மை பெண்களாவார். தனித் தடை - தனியாக அமைந்த திரை வீழ்த்த சிவிகையும் காவலாளரும் முதலாயின அமைப்புக்கள்; 2758 பார்க்க; அரண்மனையின் புறத்தே செல்லும்போது அரச மாதேவிமார்கள் இவ்வாறு செல்வது முன்னாள் வழக்கு. தடை - காவல்; பிறரது நோக்கம் - செயல் முதலியவை செல்லாவகை தடுக்கும் அமைப்புக்களாதலின் காவல் - தடை எனப்பட்டது; "தடைபல புக்க பின்பு தனித்தடை நின்ற தத்தன்"(475).
 நம்பரை வணங்கி - திருவாலவாயுடைய இறைவரைக் கும்பிட்ட பின்னர்; அரசனுக்குச் சொல்லிப் போந்ததும் உண்மையே என்ற குறிப்பு; வணங்குதல் - பிள்ளையாரைத் தந்தருளியதன் பொருட்டு நன்றி; பின்னர் அரசனும் இக்கருத்தே பற்றித் துதித்தல் காண்க.(2766)
 நம்பரை - திருஞான சம்பந்தரை என்றுரைத்தாருமுண்டு. அது பொருந்தாமையறிக.
 தாமும் - மந்திரியார் வரவேற்றலுடன் தாமும் என உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை.
 தனக்குக் கூறி - என்பதும் பாடம்.
 

647

 

வேறு

 

பிள்ளையார் மதுரையை அணைதல்

2546
திருநிலவு மணிமுத்தின் சிவிகையின்மேற் சேவித்து
வருநிலவு தருமதிபோல் வளரொளிவெண் குடைநிழற்றப்,
பெருகொளிய திருநீற்றுத் தொண்டர்குழாம் பெருகிவர
அருள்பெருக வருஞானத் தமுதுண்டா ரணைகின்றார்;
 

648

 (இ-ள்) திருநிலவு...குடை நிழற்ற - சிவனது அருட் செல்வம் பொருந்திய ஆகிய முத்துச் சிவிகையின் மேலே நின்று சேவித்துக்கொண்டு வருகின்ற நிலவு பொழிவும் மதிபோல வளரும் ஒளியினை உடைய முத்து வெண்குடை நிழலைச் செய்யவும்; பெருகொளிய...வர - பெருகும் ஒளியினையுடைய திருநீற்றுத் தொண்டர் கூட்டம் பெருகிச் சூழ்ந்து வரவும்; அருள்பெருக...அணைகின்றார் - திரு அருள் பெருகும்படி வந்தவதரித்த சிவஞானத் தமுதுண்ட பிள்ளையார் மதுரையினை வந்தணைகின்றாராயினார்.
 (வி-ரை) இப்பாட்டு "மதுரைத் தொன்னகர் வந்தணைகின்றார்"(2528) என்று முன்கூறி விடுத்த இடத்தின் தொடர்ச்சி; செய்யுள் யாப்பும் அதுவே யாகித் தொடர்பு