பக்கம் எண் :

796திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

 வகையாலே செய்தக்க தொன்றாவதன்றி, அரசனுக்கும் உறுதிபயக்கத் தக்கதாதலின் அக்காரணத்தாலும் செய்தக்கதாம் என்பது; என்னை? அரசனது நேர்முகமான ஆணைபெறாது செல்கின்றாராதலின், அது தகுதியாமோ எண்றெண்ண வந்து, அரசனுக்கு எவ்வாற்றானும் உறுதிதேடுதல் அமைச்சர் கடனாகலான அவ்வகையானும் இது செய்தக்க தொன்றெனத் துணிந்தனர் என்க.
 பொன்திகழ் மாடவீதி மதுரையின் புறுத்து - பொன்திகழ்மாடம் - பொன்னாற் செய்த அணிவகைகளை உடைய மாடங்கள்; இவை சிகரம் - பித்திகை முதலாயின; மதுரையின் புறத்துப்போகி - நகரின்புறத்துச் சென்று வரவேற்று எதிர்கொள்வது முறையாதலின் இவ்வாறு நகரினை நீங்கி வெளியே சென்றருளினர்; நகர்ப்புறத்தில் மதில்கள் சூழ்ந்த நகரம் தூரத்தே தோன்றக்கூடிய அளவு சென்றனர் என்பது "தகுவன விளம்பித் தலையளித் தருளுமப் பொழுதில், ஓங்கெயில் புடைசூழ் மதுரை தோன்றுதலும்" (2559) என மேல் உரைக்குமாற்றால் அறியப்படும்.
 இன் தமிழ் மறை தந்தார் - பிள்ளையார்; மறையின் பொருளை இனிய தமிழ்ல தந்தருளியவர் என்பது. அத் தமிழ் மறையே பின்னர் உய்திதர நின்றமையால் இத்தன்மையாற் கூறினார்.
 எதிர்கொள எய்தும் காலை - எழும் ஓசை கேட்டுக் --களிப்பினரானார். (2552) என்பதுடன் முடிந்தது.
 அமைச்சனாரும் எய்தும் காலைத் தாமும் நல்வரவேற்று நின்றார் - என இருவரது வரவேற்புச் செயல்களும் ஒன்றாக முடிவுபெற வைத்த நயமும் காண்க;
 என நினைந்து - மறை சொற்றாரை - என்பனவும் பாடங்கள்.
 

646

 2545. (வி-ரை) அம்புயமலராள் - துவாதசாந்தப் பெருவெளியில் 1000 இதழ்த் தாமரையின்மேல் வீற்றிருக்கும் உமையம்மையார். "பங்கயச் செல்வி பாண்டிமாதேவி"(தேவா). திருமகள் என்பாருமுண்டு;
 அம்புய மலராள் போல்வார் - மங்கையர்க்கரசியார்; ஆலவாயமர்ந்தாரைக் கும்பிடுதலில் முதலில் நிற்பிவர் உமையம்மை யாராகிய கருத்தும் காணக்; "கைலாய வாண! கௌரி நாயக! நின்னை வணங்கிப் பொன்னடி புகழ்ந்து, பெரும்பதம் பிழையா வரம்பல பெற்றோர், இமையா நெடுங்கண் ணுமையா ணங்கையும்" (திருவிடை-மும்-கோ-28-பட்டின-11-ம் திருமுறை); "அண்ண லார்தமை யருச்சனை புரிய வா தரித்தாள், பெண்ணி னல்லவ ளாகிய பெருந்தவக் கொழுந்து"(1128); முதலியவை பார்க்க.்
 "ஆலவாயமர்ந்தார் தம்மைக் கும்பிடவேண்டும்" என்று கொற்றவன் றனக் கும்கூறி - இறைவரைத் திருக்கோயிலிற் சென்று கும்பிடும் நிலையினை மாதேவியார் அரசனுக்கும் கூறிச் சென்றார்; கொற்றவன் தனக்கும் - மன உடன்பாடில்லாத அரசனுக்கும் என்று உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை. " தாங்கள் - சைவ வாய்மை ஒழுக்கத்தினின்ற தன்மை, பூங்கழற் செழியன் முன்பு புலப்படா வகைகொண் டுய்த்தார்"(2502) என முன்னர்க் கூறிய கருத்துக் காண்க; அரசன் முன்பு புலப்படா வகை சைவ ஒழுக்கத்தினைக் கொண்டு உய்த்த அம்மையார் இங்குக் கொற்றவன்றனக்கும் கூறிக் கோயிலுக்குச் சென்றனர் என்பது முன் கூற்றொடு முரணாதோ? என்னின் முரணாது; ஆண்டு, முன்(2502)ல் உரைத்தவை பார்க்க; அந்நாளில் சமண்மிக்கு, அரசனும் அந்நெறிச் சார்பு தன்னை அறமேன நினைந்து நிற்பச் சேவ வைதிக நன்னெறி திரிந்து மாறி நடந்தது என்ற மட்டில் நாட்டின் நிலை போந்ததே யன்றிச், வைசம் முற்றும் மறைந்துபோக வில்லை; ஆலவாயுடையார் கோயில் பணிகளும் அந்நிலைக்