பக்கம் எண் :

[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்795

 புணர்த்தியோதினார்; திருவவதாரத்தின் தன்மையாலே நமது பிரானாராய் வந்தவா என்றலுமாம்; வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க...அழுத"(1899) என்ற குறிப்பும்பட நின்றது.
 "இங்கெழுந்தருள உய்ந்தோம் " என - இது எதிர்கொள்ளும் முறை பற்றி அம்மையார் தமது திருவுள்ளக் கருத்தைக் கூறியது; எழுந்தருள - எழுந்தருளப் பெற்றதனால்; எழுந்தருளுவதனால் எனக் காரணப் பொருளில் வந்த வினையெச்சம்.
 உய்ந்தோம் - இறந்த காலம் உறுதியும் விரையும் குறித்தது. என - என்ற கருத்துடன் நல்வரவு கூறி; இக்கருத்தையே அமைச்சர் பெருமானார் பின்னர் பிள்ளையார் திருமுன்பு தமது முறையால் விரித்துக்கூறிய நிலை கண்டுகொள்க; இன்றெழுந்தருளப் பெற்றபே றிதனா லெற்றைக்குந் திருவரு ளுடையோம் - நற்றமிழ் வேந்தனுழுய்ந்து - மேன்மையும் படைத்தனம் (2557) என்ற அருமையா திருப்பாட்டின் கருத்துக்களை இங்கு வைத்துக் காண்க:
 645
2544
ன்றலங் குழலி னாரை வணங்கிப்போந் தமைச்ச னாரும்
வென்றிவே லரச னுக்கு முறுதியே யெனவி ரைந்து
பொன்றிகழ் மாட வீதி மதுரையின் புறத்துப் போகி
யின்றமிழ் மறைதந் தாரை யெதிர்கொள வெய்துங் காலை..
 

646

2545
அம்புய மலராள் போல்வா "ராலவா யமர்ந்தார் தம்மைக்
கும்பிட வேண்டு" மென்று கொற்றவன் றனக்குங் கூறித்
தம்பரி சனங்கள் குழத் தனித்தடை யோடுஞ் சென்று
நம்பரை வணங்கித் தாமு நல்வர வேற்று நின்றார்.
 

647

 2544. (இ-ள்) மன்றலம்...போந்து - மணம் பொருந்திய கூந்தலினையுடைய மங்கையர்க்கரசியம்மையாரை வணங்கிச் சென்று; வென்றி...என - வெற்றிவே லேந்திய மன்னவனுக்கும் இச்செயல் உறுதி பயப்பதாகும் என்று உட்கொண்டு; விரைந்து...போகி - பொன் வேலைப்பாடுகள் பொருந்திய விளங்கும் மாடங்களையுடைய திருவீதிகளின் புறத்தில் விரைந்துசென்று; இன்தமிழ்...காலை - இனிய தமிழினால் வேதங்களை அருளிச்செய்து தந்த பிள்ளையாரை எதிர்கொள்ளும் பொருட்டுச் சேர்கின்றபோது,
 

646

 2545. (இ-ள்) அம்புயமலராள் போல்வார் - தாமரை மலரில் வீற்றிருப்பவன் போல்பவராகிய மங்கையர்க்கரசியம்மையார்; ஆலவாயமர்ந்தார் தம்மை...கூறி - திருவாலவாயுடைய பெருமானைத் தாம் சென்று கும்பிடவேண்டுமென்று அரசனுக்கும் கூறி, தம் பரிசனங்கள்...சென்று - தமது பரிசனங்கள் சூழ்ந்துவரைத் தனித்த காவலுடனே சென்று; நம்பரை வணங்கி - திருவாலவாயுடைய பெருமானாரை வணங்கி; தாமும்...நின்றார் - தாமும் பிள்ளையாரை நல்வரவேற்கும் முகத்தால் நின்றனர்.
 

647

 இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிவு கொண்டன.
 2544. (வி-ரை) வணங்கிப்போந்து - அரசியாரது கட்டளையை மேற்கொண்டு அதனைச் செய்துமுடித்தற் பொருட்டு விடைபெற்றுக்கொள்ளும் வகையால் வணங்கிச் சென்றனர்; போந்து - அரண்மனையினின்றும் புறம்போந்து;
 போந்து - விரைந்து -போகி-எய்தும் - என்று கூட்டி முடிக்க. வென்றிவேல் அரசனுக்கும் உறுதியே என - அச்செயல் அரசியின் கட்டளையை நிறைவேற்றும்