| பெரு விருப்பம் பொருந்திய காதலின் வெள்ளமானது மேலே பெருகி ஓங்கிட; தம்மையும்...கூர - தம்மையும் அறியாதபடி வரம்பு கடந்து பொங்கித் திரண்ட மகிழ்ச்சி பெருக; மேவிய சிறப்பின் மிக்கார் - இவ்வாறு பொருந்திய சிறப்பினால் மிகுந்தவராயினர். |
| (வி-ரை) மிக்கார் - முன்பாட்டிற் போலவே ஈண்டும் மாதேவியாரும் அமைச்சனாரும் என்ற எழுவாய் வருவித்துக் கொள்க; உள்ளத்தில் மகிழ்வு பொங்க அதன் வயத்தினுள் அழுந்தித் தம்மையும் அறியாவண்ணம் நின்றாராதலின் இந்த இரண்டு செய்யுட்களினும் அவர்களைக் குறிக்கும் பெயர்களாகிய எழுவாய் மறைந்து நின்ற கவிநயம் காண்க. |
| மொழி விளம்பினோர்க்கு ... நல்கி - இது உலக வழக்கிலும் நிகழ்வது காண்க; வேண்டுவ - அவர்கள் தம்பால் வேண்டுவன என்றும், தாம் வேண்டுவனற்றை என்றும், அவர்கள் எக்குறைபாடும் இன்றி நிரம்பியிருக்க வேண்டுவனவற்றை எல்லாம் என்றும் உரைக்க நின்றது; அடைய - நிரம்ப; அடையும்படி என்றலுமாம்; ஆளுடைய நம்பிகள் தமது நகருக்கு எழுந்தருளா நின்றாரென்று முன்னேயோடி அறிவிப்பப் "பொன்னார் கிழியு மணிப்பூணுங் காசுந் தூசும் பொழிந்தளித்தார்" (வெள்.சருக்.16) என்னும் வரலாறும், அவ்வாறு வரும் பிறவும் இங்கு நினைவு கூரத்தக்கன. |
| மெய்ம்மையில் விளங்கு - உண்மைத் தன்மையில் விளங்குதலாவது சத்தாகிய சிவநெறியில் விளங்குதல். |
| விருப்புறுகாதல் வெள்ளம் - என்க; வெள்ளம் - பெருக்கு என்ற பொருள் தந்து நின்றது; |
| தம்மையும் அறியாவண்ணம் கைமிக்குத் தழைத்துப் பொங்கி - தம்மையே மறக்கும் நிலை வரும்படி வரம்பு கடந்து ஓங்கி; மைமிகுதல் - வரம்பு கடந்து பெருகுதல்; மைகூடுதல் - என்புழிப்போலக் கை - என்பது வேறுபொருளின்றி மிகுதிப் பொருள் தந்து நிற்பதோர் முன் னொட்டுமொழி; விம்முதல் - வெளிப்படப் பெருகுதல்; சிறப்பு - சீர்பெறும் தன்மை; மிக்கார் - மிகுந்தராயினார்; ஆக்கச் சொல்வருவிக்க. |
| 644 |
2543 | மங்கையர்க் கரசி யார்பால் வந்தடி வணங்கி நின்ற கொங்கலர் தெரிய லாராங் குலச்சிறை யாரை நோக்கி "நங்கடம் பிரானா ராய ஞானபோ னகர்முன் பெய்தி 'யிங்கெழுந் தருள வுய்ந்தோ' மெனவெதிர் கொள்ளு" மென்றார். | |
| 645 |
| (இ-ள்) மங்கையர்க்கரசியார்பால்...நோக்கி - மங்கையர்க்கரசி யம்மையார் தம்மிடம் வந்து அடிவணங்கி நின்ற மணமுடைய மாலையணிந்த குலச்சிறையாரை நோக்கி; நங்கள் தம்... என்றார் - நமது பெருமானாராகிய ஞானபோனகரது திருமுன்பு சென்று சேர்ந்து 'இங்கு எழுந்தருளியவதனால் நாங்கள் உய்திபெற்றோம்' என்று கூறி வரவேற்றுக் கொள்க என்று கூறினார். |
| (வி-ரை) மங்கையர்க்கரசியார்பால் - அம்மையார் தம்மிடத்து; |
| அடிவணங்கி நின்ற - அரசியாராதலின் மந்திரியார் அடிவணங்கி நின்று கேட்டல் மரபு; |
| நங்கள்தம் பிரானாராய - நங்கள் - அரசரையும் மந்திரியாரையும் உளப்படுத்திக் கூறிய உளப்பாட்டுத் தன்மைப் பன்மை; பிரானார் ஆய - விண்ணப்பித்துக் கொண்டதனை ஏற்றருளித் தலைமையை மேற்கொண்ட என்று குறிக்க ஆய-என ஆக்கச்சொல் |