பக்கம் எண் :

[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்793

 (இ - ள்) அளவிலா மகிழ்ச்சி காட்டும் - நிமித்தம் - மகிழ்ச்சி - மகிழ்ச்சியைத் தரும் பின் நிகழ்ச்சியினை. காட்டும் - முன் அறிவிக்கும்.
 உளம்மகிழ்வு உணரும் காலை - மனத்தினுள் தானே எழுந்த மகிழ்ச்சியினை நுகர்ந்துகொண்டிருக்கும்போது; நல்நிமித்தம் கண்டார் - மகிழ்வுகொண்டார்: அவ்வாறு மகிழ்வுகொண்ட அப்போதே - வார்த்தை கேட்டார் என்று இந்நன்னிமித்தங்கள் பயன்றந்த விரைவு கூறப்பட்டது:
 உலகெலாம் - இறைவர் இப்புராணத்துக்கு எடுத்துத் தந்தருளிய முதன் மங்கல மொழி; அதனை ஆசிரியர் அருமை காட்ட அருமையாக வைத்தாண்ட சில இடங்களுள் இஃது ஒன்று; "உலகெலா முய்ய வுறுதியாம் பதிகம்" (பஞ்சாக்கரப்பதிகம் ஏயர்கோ - 88). "அஞ்செழுத் தோதி யேறினாருய்ய உலகெலாம்"(2114): பிள்ளையார் இனி உலகுய்யச் செய்தருளும் சைவ விளக்கமாகிய அருளிப்பாடுகள் குறித்தன;
 ஒளி வளர்ஞானம் - என்க, சிவஞானம்; ஒளி - உள்ளொளி; ஒளி வளர்க்கும் ஞானமாவது சிவத்தன்மையை உள்ளே பெருகச்செய்யும் என்றதாம் "அலகின் ஞானக் கடலி டைப்படு, மமிர்த யோகச் சிவவொ ளிப்புக, வடிய ரேமுக் கருளினைச் செயும்"(திருநா - ஏகாதச - 1. நம்பியாண்டார் நம்பி. 11-ம் திருமுறை); உள்ளொளி பெருக்கி"(திருவாசகம்); "ஒளிவளர் விளக்கே" (திருவிசைப்பா).
 வந்து அணைந்தருளும் வார்த்தை - மதுரையினை அ ணுக வந்தணைந்த செய்தி: "மதுரைத் தொன்னகர் வந்தணைகின்றார்"(2528) என்ற வரலாற்றுத் தொடர்ச்சி யாதல் காண்க: 2529 முதல் 2539 வரை கூறியவை யிடைப்பிறவரலாகப் பின்சரித விளைவுகளைத் தொடர்புபடுத்திச் செலுத்திக் கொள்ளும் பொருட்டுக் கூறப்பட்டன.
 வந்தவர் ஓகைகூறி - மொழிய என்க. வந்தவர் - பிள்ளையாருடன் வந்தவர்களுன் முன்னறிவிப்பாக வந்தவர்; அம்மையாரும் அமைச்சனாரும் விடுக்கச் சென்று வந்தவர் என்றலுமாம்; கண்டுவந்தவர்கள் என்றாலும் பொருந்தும். ஓகை - உவகைச் சொல்; ஓகை கூறி மொழிதலாவது மதிழ்வு கூறும் தொடக்கத்துடன் கூறுதல்;
 கிளர்வுறும் ஓகை - உணர்வுட்கொண்ட மனமகிழ்ச்சி மேலே பொங்கிச் செயலாக எழும்படியான உவகைச் சொற்கள்; அவ்வாறு கிளர்வுற்ற நிலை வரும்பாட்டிற் கூறப்படுதல் காண்க;
 அணைந்தருளும் வார்த்தை கேட்டார் - முன்னர்த் திருமறைக்காடு சேர்ந்த நன்னிலை கேட்டார்(2503); இப்போது அததைத் தொடர்ந்து மதுரையிலணைந்தருளும் வார்த்தை கேட்டார் என்று தொடர்புபடுத்திக் கூறிய நயம் காண்க.
 அணைந்தருளும் - அணைந்து அருளைச் செய்யவுள்ள என்ற பொரும் தந்து நின்றது.
 கேட்டார் - மாதேவியாரும் அமைச்சனாரும் என்ற எழுவாய் அவாய்நிலையான் வந்தது.
 ஓகை கூர - என்பதும் பாடம்.
 643
2542
ம்மொழி விளம்பி னோர்க்கு வேண்டுவ வடைய நல்கி
மெய்ம்மையில் விளங்கு காதல் விருப்புறு வெள்ள மோங்கத்
தம்மையு மறியா வண்ணங் கைமிக்குத் தழைத்துப் பொங்கி
விம்மிய மகிழ்ச்சி கூர மேவிய சிறப்பின் மிக்கார்.
 

644

 (இ - ள்) அம்மொழி...நல்கி-அந்த மொழியைச் சொன்னவர்களுக்கு வேண்டுவனவற்றை நிரம்பக் கொடுத்து; மெய்ம்மையில் ... ஓங்க - மெய்ம்மையிலே விளங்கும்