| (இ - ள்) அவ்வகை...ஆக - அவ்வகையில் அவ்வமணர்கள் எல்லாம் முன்கூறிய அந்த நிலைமையினையடைந்தவர்களாக; சைவ நன்மரபில்......அமைச்சனார்க்கும் - சைவத்தின் நன்மரபில் வழிவழிவந்த பெரிய மயில் போன்ற இளமையாகிய மெல்லிய சாயலையும் பையரவல்குலையு முடைய பாண்டிமாதேவியாராகிய மங்கையர்க்கரசி யம்மையாருக்கும் மெய்ம்மையுள் நிற்கும் அமைச்சனாராகிய குலச்சிறையாருக்கும்; நன்நிமித்தம் மேன்மேல் விளங்கும்-நன்னிமித்தங்கள் பலவும் மேலும் மேலும் விளங்குவனவாயின. |
| (வி-ரை) அவ்வகை - அவர்கள் - அந்நிலைமையர்கள் - அகரம் இரண்டும் சேய்மைச் சுட்டுக்கள் இதுவரை அவர்கள் பானின்ற நமது கருத்தை மீட்டு இனி இப்பக்கம் அணியவர்களாகிய அம்மையார்பால் திரும்பும் குறிப்புடையன. இவ்வாறே முன் "இந்திலையவர்கள்" - "அந்நிலை யமணர்"(2529) என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க. அந்நிலை - மையர்கள் எனப் பிரித்து, மையர் - அறிவினுள் இருள் கொண்டவர் என்ற குறிப்புமாம். |
| சைவ நன்மரபில் வந்த...பாண்டிமாதேவியார்... மங்கையர்க்கரசியார்; இவ்வாறு அம்மையாரைப் போற்றிய திறம் அவர் பாதங்களிற் கொண்ட பேரன்பு மிகுதியையும், சமணத்தை விட்டுச் சைவத்திறத்திற் பேசப் புகுகின்றதனால் விளைந்த பெருமகிழ்ச்சியினையும் உள்ளக் கிளர்ச்சியினையும் உணர்த்திற்று; சைவத்தாபன நிலைபேசத் தொடங்குகின்ற இவ்விடத்து அதனைச் செய்து உதவிய அம்மையைப் போற்றும் தகுதியும் காண்க. "வைசத் துறையின் வழிவந்த குடிவளவர்"(1900) |
| மெய்வகை அமைச்சனார் - குலச்சிறையார்; ஒருபாற் கோடாது நாட்டுக்கும் அரசுக்கும் உறுதி தேடிய மெய்ம்மைத்திறம் போற்றப்பட்டது; அரசன் எவ்வழி நிற்பினும் தாம் உண்மைத் திறத்தினையே நாடிச் செய்தனர் என்பது; மெய்ம்மை - சத்தாந்தன்மை; அது அழிவில்லாத சிவநெறியின் தன்மை குறித்தது; |
| பையர...தேவி - பையர வங்குற் பாண்டிமா தேவி(தேவா) |
| நன்னிமித்தம் மேன்மேல் விளங்கும் என்க; விளங்கும் - விளங்கின; விளங்கும் - பூதிசாதன விளக்கம் போற்றல் பெறாது ஒளிகுன்றியிருந்த நிலை நீங்கி விளங்க நின்றமை காட்டுதலின் விளங்கும் நல் நிமித்தம் - என்றார்; பழம்பெருஞ் சைவத்தின் பழம் பெருநிலை விளங்க வருவனவாதலின் இவை பொதுப்படக் கூறுவதன்றி இன்னவென்று விரிக்க வேண்டாவாயின. |
| அமணரெல்லாம் - என்பதும் பாடம். |
| 642 |
2541 | அளவிலா மகிழ்ச்சி காட்டு மரும்பெரு நிமித்த பெய்த உளமகிழ் வுணருங் காலை யுலகெலா முய்ய வந்த வளரொளி ஞான முண்டார் வந்தணைந் தருளும் வார்த்தை கிளர்வுறு மோகை கூறி வந்தவர் மொழியக் கேட்டார். | |
| 643 |
| (இ - ள்) அளவிலா...எய்த - அளவில்லாத பெருமகிழ்ச்சியினை முன்னறிவிப்பாகக் காட்டுகின்ற அரியபெரியநிமித்தங்கள் வந்து பொருந்த; உளம்மகிழ்வு உணருங்காலை - உள்ளத்தில் மகிழ்ச்சியினை உணர்கின்ற அப்போது; உலகெலாம்...வார்த்தை-உலகெலாம் உய்யும்படி அவதரித்த ஒளி வளரும் ஞானத்தினை உண்டருளிய பிள்ளையார் வந்து சேர்ந்தருளும் நல்வார்த்தையினை; கிளர்வுறும்...கேட்டார் - கிளர்ச்சி பொருந்திய உவகைச் செய்தியை அறிவித்துக்கொண்டு வந்தவர்கள் சொல்லக் கேட்டார்கள்(அம்மையாரும் அமைச்சனாரும்). |