பக்கம் எண் :

390திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

 
இரவுதான் பகலாய்த் தோன்ற வெதிரெழுந் தணையை விட்ட
உரவுநீர்வெள்ளம் போல வோங்கிய களிப்பிற் சென்றார்.
 

350

  (இ-ள்) பரவையார்....போதில் - பரவையாரிடத்தில் நம்பிகளின் தூதராகும் தன்மையிற் சென்ற அரவணிந்த சடையவராகிய இறைவனார் அங்கு நின்றும் மீண்டு தாமரந்தன்மை யறியும்படி உள்ள கோலத்துடனே வந்து அணைந்தபோது; இரவு.....தோன்ற - அந்தநடு இரவானது இருளின்றிப் பகல் போலப் பேரொளியுடன் விளங்கியிட; எதிர் எழுந்து - நம்பிகள் அவருக்கெதிரே எழுந்து; அணையை......போல - அணையை உடைத்தெழுந்து பரந்த நீர்ப்பெருக்கினைப் போல; ஓங்கிய.....சென்றார் - மிகுந்த களிப்பினுடனே எதிர்கொண்டு சென்றனர்.
  (வி-ரை) நம்பி தூதராம் பாங்கு - நம்பிகளது தூதராகும் தன்மை; முறைமை; நிலைமை; ஆம் - ஆக்கச்சொல், அந்நிலையினராகத் தம்மை ஆக்கிக் கொண்டு தம்மை அருச்சிக்கும் முனிவர் கோலம் பூண்டு என்ற குறிப்புடையது.
  அறியுமாறு - பரவையாரிடத்தில் அருச்சகர் கோலத்திற் சென்றது போலன்றி நம்பிகள்பால் தாமாந்தன்மை அறியும் கோலத்துடன்.
  இரவுதான் பகலாய்த்தோன்ற - இருளடர்ந்த நடு இரவு பகல் போன்ற ஒளியுடன் தோன்ற; இஃது பேரொளியுடைய இறைவராகிய இரவியின் வருகையாலாகியது; இரவி வந்தபோது இரவு பகலாகும் இயல்பு குறித்தது; தோன்ற - தோற்றத்தின் அளவே யன்றி இரவு உண்மையிற் பகலாகவில்லை என்பது; இறைவரைக் கண்ட மாத்திரையில் நம்பிகளின் மனத்தின் எழுந்த உவகையால் முன் கொண்டிருந்த துன்பநிலை நீங்கி உவகை போந்தமையால் அந்த இரவே பகலாக விளங்கிற்று என்பதுமாம்.
  அைணையை விட்ட உரவு நீர் வெள்ளம் போல - அணையினாற் றடுப்புண்டு தேங்கி நின்ற நீர்ப்பெருக்கு அணை உடைந்தபோது மிக்க வேகத்திற் செல்வது போல; "சிறைபெறா நீர்போல" (திருவா), உரவு - (நீர்ப்) பெருக்கு; "ஊரங்கணநீர் உரவு நீர் சேர்ந்தக்கால்" (நாலடி).
  தூதராய்ப்பாங்கில் - அணையுமாறறியும் - என்பனவும் பாடங்கள்.
 

350

3505
சென்றுதம் பிரானைத் தாழ்ந்து திருமுக முறுவல் செய்ய
ஒன்றிய விளையாட் டோரா" ருறுதிசெய் தணைந்தா" ரென்றே
"அன்றுநீ ராண்டு கொண்ட வதனுக்குத் தகவே செய்தீர்

இன்றவள் வெகுளி யெல்லாந் தீர்த்தெழுந் தருளி" யென்றார்.
 

351

  (இ-ள்) சென்று....தாழ்ந்து - போய்த் தமது பெருமானாரை வணங்கி; திருமுகம் முறுவல் செய்ய - அவரது திருமுகமானது சிறுநகை காட்டக் கண்டு; ஒன்றிய....என்றே - பொருந்திய திருவிளையாட்டினை உணராதவராகிப் புலவியை நீக்கி இசைவு செய்து வந்தனர் என்றே எண்ணி; அன்று....என்றார் - தேவரீர் அன்று என்னை ஆளாகக் கொண்டருளிய அச்செயலுக்கு ஏற்ற தன்மையாகவே இன்றும்அருள் செய்தீர், இவளுடைய புலவியை எல்லாம் தீர்த்து எழுந்தருளிய அதனாலே என்று சொன்னார்.
  (வி-ரை) திருமுகம் முறுவல் செய்ய - தம்பெருமானது திருமுகம் தம்மை நோக்கிச் சிறுநகை செய்ய அது கண்டு; செய்ய - செய்யக் கண்டு; அங்குப் பரவை