பக்கம் எண் :

396திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  3511. (வி-ரை) மயங்குதல் - சித்தம் துணிவு பெறாமை; கலக்கம்.
  அமுதம் - தரியாது தளர்ந்து வீழ்ந்த சோர்வு தீர்ந்து உய்ய வருதலின் அமுதம் என்றார்.
  வாய்மை - மெய்த் திருவாக்கெனு மமுதம்; முன்னர்க் (3483) கூறியதும் வாய்மையே;" உனக்கோர் தூதனாகி யிப்பொழுதே....பரவைபாற் போகின்றோம்" (3483) என்று தூதனாய்ச் செல்கின்ற அளவே அங்குக் கூறினாராதலின்; இங்கு "இப்போதே நீ குறுகுமா கூறுகின்றோம்" என்ற நிலையினுடன் ஒத்துப் பார்க்க; இக்கருத்தேபற்றி ஈண்டு வாய்மை நலங்கிள ரமுதம் என்றார்; "போதியோ வென்னு மன்ன மெய்த்திரு வாக்கெனு மமுதம்" (2986); முன்னே கூறியது திருவிளையாட்டின் பொருட்டாதலின், இங்கே இம்முறை "வாய்மை" என்றார் என்று ஈண்டு முன் கூறியது வாய்மை யன்று என்னும் குறிப்புப்பட விசேடவுரை காண்பாருமுண்டு; முன்காட்டியவாற்றால் அது பொருளன்மை கண்டு கொள்க.
  உயங்கிய - வாடிய; உயங்குதல் - வாடுதல்.
  அடித் தொழும்பனேனைப் பயங்கெடுத்துப் பணி கொள்வது - "சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனாதல்" என்றபடி தொண்டரைக் காப்பது தலைவர் கடன் என்பது குறிப்பு.
  இவ்வாறன்றே பணிகொள்வது - தம் கருத்து நிறைவேறிற் றென்று நம்பிகள் துதித்த வகை.
 

357

  3512. (வி-ரை) கருணைகூரச் செல்ல - என்க. கூர - கூர்தலினால்.
  பின்பு சென்று இறைஞ்சி - வழிச்செல விடுப்பாரைச் சிறிது தூரம் (7 அடி அளவு என்ப) பின் சென்று வழி விடுவித்து விடைகொள்ளும் மரபு குறித்தது.
  பேதுறவோடும் - மயக்கத்துடனே; பேதுறவு - இன்னதென்று துணியமாட்டாத துன்பநிலை.
  முன்புடன் போதாதாரும் - முன்னர், "வேண்டுவார் போத, ஒழிந்தார் புறத்தொழிய" (3486) என்றபடி முன்பு உடன் தொடர்ந்து செல்வதாகும்.
  முறைமையில் சேவித்து - முறைமையாவது அவ்வவர்க்கேற்ற நிலை. அருச்சகர் கோலங்கொண்டு சென்ற முன்போலன்றி, ஈண்டு இறைவர் "தாமாந்தன்மை அறிவுறு கோலத்தோடு" (3515) செல்கின்றாராதலின் அம்முறைமைக் கேற்றவாறு என்றலுமாம்; இவர்களை மேற் குறிப்பது (3515 -3516) காண்க.
  புனித மாளிகை - ஒருமுறைக் கிருமுறை இறைவர் எழுந்தருளும் பேறு பெறுதலின் புனிதம் என்றார். இதனையே "வெள்ளித் திருமலை" (3516) என்பது காண்க. முன்னர்த் தொடக்கத்தில் "அவதாரஞ்செய் மாளிகை" (90) என்றார்.
  மாளிகையிற் சென்றார் - முன்பு சென்ற செலவினை எட்டுத் திருப்பாட்டுக்களாற் (3485-3492) கூறிய ஆசிரியர், ஈண்டு இவ்வொருபாட்டின் ஒரு பகுதியில் முடித்தருளினர், நம்பிகளுக்கருளும் விரைவு குறித்தற்கு.
 

358

3513
மதிநுதற் பரவை யார்தா மறையவர் போன பின்பு
முதுமறை முனியாய் வந்தா ரருளளுடை முதல்வ ராகும்
அதிசயம் பலவுந் தோன்ற வறிவுற்றே யஞ்சிக் "கெட்டேன்!;
எதிர்மொழி யெம்பி ரான்மு னென்செய மறுத்தே!" னென்பார்.
 

359

3514
கண்டுயி லெய்தார் வெய்ய கையற வெய்தி "யீங்கின்
றண்டர்தம் பிரானார் தோழர்க் காகவர்ச் சிப்பார் கோலங்