பக்கம் எண் :

[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்397

 
கொண்டணைந் தவரை யானுட் கொண்டிலேன் பாவியே" னென்
றொண்சுடர் வாயி லேபார்த் துழையரோ டழியும்போதில்,
 

360

3515
வெறியுறு கொன்றை வேணி விமலருந் தாமாந் தன்மை
அறிவுறு கோலத் தோடு மளவில்பல் பூத நாதர்
செறிவுறு தேவர் யோகர் முனிவர்கள் சூழ்ந்து செல்ல
மறுவில்சீர்ப் பரவை யார்தம் மாளிகை புகுந்தார் வந்து.
 

361

  3513. (இ-ள்) மதிநுதல்....பின்பு - மதிபோன்ற நெற்றியினை உடைய பரவையார் மறையவராய் வந்தவர் சென்ற பின்னர்; முதுமறை....அறிவுற்றே - முதிய மறைமுனிவர் கோலத்துடன் வந்த அவர் அருளுடைய இறைவரேயாம் என்ற நிலை தோற்றும் அதிசயம் பலவும் தோன்ற அறிந்து; அஞ்சி....என்பார் - அச்சங்கொண்டு "கெட்டேன்! எமது பெருமான் திருமுன்பு எதிராக மொழி தந்து என்ன செய்ய மறுத்தொழிந்தேன்" என்று வருந்துவாராய்,
 

359

  3514. (இ-ள்) கண்....எய்தி - கண்ணுறக்கம் கொள்ளாதவராகி வெவ்விய செயலிழந்த வருத்தம் கொண்டு; ஈங்கு...பாவியேன் என்று - இங்கு இன்று தேவர்கள் பெருமனார் தாமே தமது தோழராகிய நம்பிக்காக அருச்சகர் கோலந்தாங்கி வந்தணைந்தவரை நான் இன்னாரென்று தெளியாதேன் பாவியானேன் என்று இரங்கி; ஒண்....போதில் - ஒள்ளிய விளக்கமுடைய வாயிலினை நோக்கியவாறே பாங்கிமாருடனே மனமழிந்து வருந்தும் போதில்;
 

360

  3515. (இ-ள்) வெறி....விமலரும் - மணம்மிக்க கொன்றையைச் சூடிய சடையினை உடைய இறைவரும்; தாமாந் தன்மை அறிவுறு கோலத்தோடும் - இறைவர் என்று கண்டார் அறியும்படி வெளிக்காணும் திருக்கோலத்துடனே; அளவில்....செல்ல - அளவற்ற பல பூதகண நாதர்களும் நெருங்கிய தேவர்களும் யோகர்களும் முனிவர்களும் தம்மைச் சூழ்ந்து செல்ல; மறுவில்....வந்து - குற்றமற்ற சிறப்பினையுடைய பரவையாரது திருமாளிகையின்கண் வந்து புகுந்தருளினர்.
 

361

  இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
  3513. (வி-ரை) மதிநுதல் - மதியுடைய நுதல் என்று கொண்டு மதியுடை மையினாலே தோன்ற என்னும் குறிப்பும் தரநின்றது. "மதியினாலே சென்னியிளம் பிறையணிவார் கோயில் வாயிற் றிசைநோக்கிக் கைதொழுதாள்" (2373); முன்னர்ப் "பரமராவ தறியாதே பாதி மதிவா ணுதலாரும்" (3493) என்றதனை இதனுடன் ஒப்பிட்டுக் கவிநயங் கண்டுகொள்க.
  அருமறை முனியாய் வந்தார் - அர்ச்சகராகிய கோலத்துடன் வந்தவர்; "பண்டேதம்மை யர்ச்சிக்கும் சீலமுடைய மறைமுனிவராகி" (3491); "முப்போது மருச்சிப்பார் முதற்சைவ ராமுனிவர்" (முப்-தீண்-புரா-1); ஆய் - ஆக்கச் சொல் அக்கோலந் தாங்கி என்ற பொருள் தந்து நின்றது.
  ஆளுடைய முதல்வராகும் அதிசயம் - ஆகும் - என்று காணுதற் கேதுவாகிய என்ற பொருள் தந்தது. அதிசயம் பல - அவரது கோலமும், ஒழுக்கமும், வந்த நேரமும், பேசிய சொல்நிலையும், ஒளியும் முதலியவை; புட்ப வருஷம் பொழிதல் முதலியவை என்றுரைப்பாரு முண்டு; அது பொருளன்றென்க; இவ்வாறு இறைவர் தம்மை யறியக் காட்டாது வெளிப்படும் போதெல்லாம் அவ்வக் கோலங்கள் மறைந்த பின்