| | னரே அறிய வைக்கும் சரிதங்களை ஈண்டு நினைவு கூர்க. "காண் பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே" (தேவா); அருளுடை - வந்ததன் காரணம் கூறியபடி. |
| | கெட்டேன் - தமது பெருந்தவறு கண்டபோது வருத்த மிகுதிக்கண் வருவ தோரிடைச்சொல். |
| | என் செய மறுத்தேன்? - ஏன் மறுத்தேன்; இறைவர் அருளிய மொழியைக் கேட்டு அதன்படி ஒழுகலன்றி வேறு என்ன செயல்தான் எனக்குண்டு என்பது. |
| | என்பார் - என்று பார்த்து - அழியும் போதில் - என வரும்பாட்டுடன் முடிக்க. என்பார் - என்பாராகி; முற்றெச்சம். |
| | முதிர்மறை - ஆளுடைய முதல்வர் - என்பனவும் பாடங்கள். |
| | 359 |
| | 3514. (வி-ரை) கையறவு - செயலிழந்த நிலையின் வரும் துன்பம். |
| | ஈங்கு - உட்கொண்டிலேன் பாவியேன் -முன் பாட்டில் வந்தவர் முதல்வராகும் தன்மை அதிசயங்களால் அறிவுற்று அஞ்சிய நிலை கூறினார். இப்பாட்டால் அவர் அவ்வாறு வருதற்குரிய ஏதுவினை மேலும் கருதி யுணர்ந்தமை கூறினார். பிரானார் - அணைந்தவரை - பிரானார் அணைந்தார்; அவரை என்க; உட்கொள்ளுதல் - மனத்துள் ஆய்ந்துணர்ந்து அதற்குத் தக ஒழுகுதல் என்ற பொருளில் வந்தது. |
| | பாவியேன் - பாவியேனாதலின் என்று தம்மைத் தாமே நொந்துகொண்டு வருந்தியது; பாவித்திலேன் என்றுரைத்தலுமாம். |
| | சுடர் வாயிலே பார்த்து - இறைவரைப் புலவி மிகுதியினாலே "நீரும் போம்" என்று மறுத்துப் போக்கியபின் மன அமைதியின்றிய கலக்கத்தால் வாயிலைச் செறிய அடைத்தலின்றி யிருந்தனராதலின் அதனைப் பார்த்து என்க. இவ்வாயில் வழியே முன் வந்தனர்; இன்னும் வருவரே என்ற மனங் கலங்கிய நிலையினால் வாயிலே பார்த்தழிந்தனர்; இது (உயர்ந்த) தன்மை நவிற்சியணி. வாயில் - தூது என்றலுமாம். |
| | உழையர் - பக்கத்திலிருப்போர்; தோழியர்கள். |
| | அவர்களோடு அழிதலாவது அவர்களும் தமது தலைவியாரது நோயிற்கலந்து அனுபவித்தனர்என்பது. |
| | இன்றிங் கண்டர் - என்பதும் பாடம், |
| | 360 |
| | 3515. (வி-ரை) தாமாந்தன்மை அறிவுறு கோலம் - முன் தம்மைக் கண்டோர் அறிவுறாதபடி அருச்சகர் கோலம் கொண்டணைந்தது போலன்றி, இப்போது இறைவர்தாம் என்று அறியும்படியுள்ள கோலம். அவை, பேரொளி, சடைமுடி முதலிய தமது அடையாளங்கள், பூதநாதர் முதலியோர் சூழ்தல் முதலாயின. |
| | பூதநாதர் - சிவபூத கணநாதர்கள்; யோகர் - யோகத்தாற் சிவனை விடாது உட்கொண்டோர். |
| | வந்து மாளிகை புகுந்தார் - என்க; வினைமுற்று முன் வந்தது விரைவுக் குறிப்பு; வந்து (நேரே) மாளிகை புகுந்தார் - என்றமையால் வாயில் அடைப்பின்றி நின்றமை குறிக்கப்பட்டது. "மணிவாயிற் கதவஞ் செறிய வடைத்த வதன்முன்பு நின்று பாவாய் திறவாயென்றழைப்ப"(3492) என முன்னர்க் கூறியது கருதுக. |
| | செறிவுறு தேவர் - அனேகராதலின் செறிவுறு என்றார்; செறிதல் - நெருங்குதல். |
| | மறுவில் சீர் - உத்தம குணங்களின் வழுவின்மையும்,அதனாலாய சிறப்பும், முன்னர் அறியாது "நீரும் போம்" "உமது பெருமைக்குத் தகுதியன்று" என்றவாறெல்லாம் கடிந்து மறத்தவை அவர்பாற் குற்றமாகாமையும், அதனாலே இறைவர் மீளவும் எழுந்தருளக் காரணமாயின சிறப்பும் குறிப்பாலுணர்த்தியவாறு. |