பக்கம் எண் :

[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்403

  அங்கொடிங்கு உழல்வீராகி - அங்கு - நம்பிகள் இருக்கும் இடம், தேவாசிரியன் மருங்கு (3466).
  இங்கு - பரவையார்தம் திருமாளிகை; உழலுதல் - ஒருமுறைக் கிருமுறை அடி வருந்த நடத்தல்; மறுத்து வலிந்து போக்கிய பின்னரும் சார்தல் என்றதும் குறிப்பு.
  எளிவருவீரும் - அரியாராகிய நீர் எளியராக வருவீராகி; ஏவலாள் போல அலைவீருமாகி.
  எளிவருவீரும் - உம்மை உழல்வீராதலின்றியும் என இறந்தது தழுவியது.
  அன்பர்க்காக எளிவருவீருமானால்என் செய்கேன் இசையாது - தேவரீர் உழன்று எளிவருதல் கருதி அதன் பொருட்டு இசைகின்றேன் என்பது; அன்பர்க்காக, அரியவராகிய தேவரீர் எளியராய் வரும்போது அவர்க்காக அடியேன் இசைதலே தகுதி என்றதுமாம்; இசையாது என் செய்கேன் என்க. சொல் வைப்பு முறை மாறியதும், எதிர் மறைகளும் உறுதியும் விரைவும் மனந்தடுமாறி நிலைநின்ற அமைதியும் குறித்தன.
 

366

3521
"நங்கைநின் றன்மைக் கேற்கு நன்மையே மொழிந்தா" யென்று
மங்கையோர் பாகம் வைத்த வள்ளலார் விரைந்து போகத்
திங்கள்வா ணுதலி னாருஞ் சென்றுபின் னிறைஞ்சி மீண்டார்;
எங்களை யாளு நம்பி தூதர்மீண் டேகு கின்றார்,
 

367

 

வேறு

3522
ஆதியு மேலு மாலய னேடற் கருளாதார்
தூதினி லேகித் தொண்டரை யாளுந் தொழில்கண்டே
வீதியி லாடிப் பாடி மகிழ்ந்தே மிடைகின்றார்
பூதியி னீடும் பல்கண நாதர் புகழ்வீரர்,
 

368

3523
அன்னவர் முன்னும் பின்னும் மருங்கு மணைவெய்த
மின்னிடை யார்பா லன்பரை யுய்க்கும் விரைவோடுஞ்
சென்னியி னீடுங் கங்கை ததும்பத் திருவாரூர்
மன்னவ னாரம் மறையவ னார்பால் வந்துற்றார்.
 

369

  3521. (இ-ள்) "நங்கை.....மொழிந்தாய்" என்று - "நங்கையே! உன்னுடைய உயர்ந்த தன்மைக்குத் தகுந்தபடி நன்மையே உரைத்தாய்" என்று பரவையாரை நலங்கூறிப் பாராட்டி; மங்கையோர்....போக -உமையம்மையாரை ஒரு பாகத்தில் வைத்த வள்ளலாராகிய இறைவர் விரைந்து செல்ல; திங்கள்....மீண்டார் - சந்திரன் போன்ற ஒளி பொருந்திய நெற்றியினையுடைய பரவையாரும் சிறிது தூரம் பின்சென்று வணங்கி மீண்டனர்; எங்களை...ஏகுகின்றார் - எங்களை ஆட்கொண்டருளும் நம்பிகளது தூதராகிய இறைவர் மீண்டு அவர்பாற் செல்கின்றாராக,
 

367

  3522. (இ-ள்) ஆதியும்....அருளாதார் - அடியினையும் முடியினையும் முறையே மாலும் பிரமனும் நாடிக் காணுதற்கு அருளாத இறைவர்; தூதினில்.....தொழில் கண்டே - தாமே தூதாகச் சென்று தொண்டனாரை ஆட்கொள்ளும் அந்த அருட்