| | செயலைக் கண்டே; பூதியில்....வீரர் - அனுபூதியில் சிறந்து திளைக்கின்ற பலவகைப் பட்ட சிவபூத கணநாதர்களும் புகழுடைய வீரர்களும்; வீதியில்....மிடைகின்றார் - அத்திருவீதியிலே ஆடியும் பாடியும் மகிழ்ச்சியோடு நெருங்குகின்றார்களாகி; |
| | 368 |
| | 3523. (இ-ள்) அன்னவர்....அணை வெய்த - அத்தகையோர்கள் தமது முன்னும் பின்னும் பக்கங்களிலும் முறைமைப்படி சார்ந்து வர; திருவாரூர் மன்னவனார் - திருவாரூரினை அரசாளும் தியாகராசர்; மின்னிடையார்..விரைவோடும் - மின்போன்ற இடையினை உடைய பரவையாரிடத்துத் தம் அன்பராகிய நம்பிகளைச் சேர்க்கின்ற விரைவினோடும்; சென்னியில்....ததும்ப - தமது தலையிலே நீடிய கங்கையாறு அலைத்து மோத; அம்மறையவனார்பால் வந்துற்றார் - அந்த மறையோராகிய நம்பிகளிடம் வந்து சேர்ந்தருளினர். |
| | 369 |
| | இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டுரைக்க நின்றன. |
| | 3521. (வி-ரை) நங்கை! - பெண்களிற் சிறந்தவளே! |
| | நின் தன்மைக்கேற்ற நன்மையே - நினது அத்தன்மைக்குப் பொருந்திய நலப்பாடே; முன் "முருகலர் குழலாய்!" என்று தொடங்கிய குறிப்பும் ஆண்டுரைத்தவையும் பார்க்க. |
| | மங்கையைப் பாகம் வைத்த வள்ளலார் - வள்ளன்மையுடன் கருணையையும் உடையவர் என்பது. |
| | விரைந்து போக - செயல் நிறைவை அறிவித்து வினை முடிபாக்கும் தீவிரம்; மேல் (3523) இதன் காரணம் கூறுவார். |
| | திங்கள் வாணுதலினார் - பரவையார்; "மதிநுதற் பரவையார்" (3513) என்ற ஆண்டுத் தொடங்கியவாறே முடித்தபடி; ஆண்டுரைத்தவை பார்க்க. |
| | சென்றபின் இறைஞ்சி - வழிவிடும் நிலையும், வழிவிட்டு விடைகொள்ளும் நிலையும் குறித்தது; நம்பிகளும் இவ்வாறே "பின்புசென் றிறைஞ்சி மீண்ட" நிலை (3512) காண்க; முன்முறையில் மறுத்து "நீரும்போம்" (3499) என்று போக்கியபோது இம்மரபு பிறழ்ந்தமை அப்போதிலிருந்த மனநிலை காரணமாக நிகழ்ந்த தென்க. |
| | நம்பி தூதர் - பரவையார்பால் தாமாந்தன்மை அறிவுறு கோலத்தோடு வந்தமையால் "மங்கை பாகர்" என்றதும், நம்பிகள் பால் செல்லும் நிலைபற்றி அதற்கேற்பத் தூதர் என்றதும் கருதுக. இவ்வாறு தூதாகச் சென்றமை நம்பிகள் திருவாக்கில் வரும் பல அகச்சான்றுகளாலும் விளங்குவதாம்; "அடியேற் கெளிவந்த தூதனை" (நள்ளாறு); "தூதனை யென்றனையாள் தோழனை" (கானப்பேர்) என்பன முதலிய பலவும் காண்க. |
| | ஏகுகின்றார் - ஏகுகின்றாராகி; முற்றெச்சம். |
| | ஏகுகின்றார் - ஆளும் தொழில் - என்று வரும்பாட்டுடன் முடிக்க. |
| | 367 |
| | 3522. (வி-ரை) ஆதியும் மேலும் - மாலயன் நாடற்கு - ஆதி - அடி; மேல் - முடி; ஆதியினை மாலும், மேலினை அயனும் முறையே நாடற்கு என்று நிரனிறையாகக் கூட்டுக. |
| | மாலயற் கருளாதார்....தூதினில் ஏகித் தொண்டரை ஆளும் - அவர்கள் ஆட்படாமையின் அருளாதார்; தொண்டர் ஆட்பட்டமையால் அருளினார் என்பது. அரியயற்கு அருளாத காரணம் பற்றி இலிங்க புராணத் திருக்குறுந்தொகை பார்க்க. "தேவர்கள் ஆள்கொடுத் தெம்போ லரனை யறிகிலர்" (திருமந்திரம்) என்பது முதலியவை பார்க்க. |