பக்கம் எண் :

[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்405

  ஆளும் தொழில் கண்டே - இறைவரது அடியார்க்கெளிவரும் பெருங்கருணையே நேரே கண்டு.
  பூதி - அனுபூதி; சிவானுபூதி; பூதியில் நீடுதல் - யோக நிலையில் உள்ளே எப்போதும் சிவானந்தத்தில் திளைத்திருத்தல்; உள்நிறைந்த சிவானுபூதியினை இங்குப் புறத்திலும் கண்டு மகிழ்ந்தனர். சிவானுபூதி - சிவனை உள்ளே கண்டு கொண்டு அவனது அருளில் திளைத்து மூழ்கிய அனுபவநிலை;"மாறாத சிவானு பல மருவிக் கொண்டே" (சித்தி - 11-1); "மெய்யே கண்டுகொண் டிருப்பர் ஞானக் கடலமு தருந்தி னோரே" (சிவப் - 98) என்பனவாதி ஞானநூல் உண்மைகள் காண்க. பூதி - விபூதி - திருநீறு என்றனர் முன் உரைகாரர்கள்.
  புகழ் வீரர் - பாரிடத் தலைவர் முதலாக முன் (3516) சொல்லப்பட்டவர்கள்; வீரமாவது சிவனடிமைத் திறத்தால் வருவது;"வீர மென்னால் விளம்புந் தகையதோ?"
  கணநாதப் புகழ்வீரர் - என்றுபாடங் கொள்வாருமுளர். மேல் பல வகையினரைக் கூறி "முன்னும் பின்னும் மருங்கும்" என்று முறைமையும் வகுத்தலின் அது பொருந்தாமை யறிக.
 

368

  3523. (வி-ரை) அன்னவர் - முன்கூறிய அத்தகைய கணநாதர் புகழ்வீரராகிய அவர்கள்.
  முன்னும் பின்னும் மருங்கும் - இறைவரது முன்னரும் பின்னரும் பக்கங்களிலும் அவ்வவர் முறைமைக் கேற்ப.
  மின்னிடையாள்......விரைவோடும் - இம்முறை மீண்டு செல்லும்போது இறைவர் விரைவின் ஏகுதலின் காரணம் கூறியபடி; தளர்ந்து வீழ்ந்த நம்பிகளது இடுக்கண் கண்டு தரியாது (3510) போந்தாராதலின் விரைவின் ஏகினார்.
  சென்னியில்....ததும்ப - சென்னியில் சடைக்கற்றையின் கரையினளவில் நிறைந்து நிற்கும் பரந்த நீராதலின் ஐயர் விரைவின் ஏகிய அசைவினால் நீர் ததும்பிற்று என்பது கவிநயம். கருணை வெள்ளம் ததும்ப என்பது குறிப்பு.
  மன்னவனார் - மறையவனார்பால் வந்துற்றார் - மன்னர் மறையவரிடம் தேடிவருதல் தகுதி என்ற சொற்சுவைபடக் கூறியது கவிநயம்; மறையவனார் - சிறப்புக் குறித்தது; திருவாரூர் மன்னவனார் - தியாகராசர்.
  மன்னவனார்தா மன்பினர்தம் - என்ற பாடமுமுண்டு.
 

369

3524
அன்பரு"மென்பா லாவி யளிக்கும் படிபோனார்
என்செய்து மீள்வா ரின்னமு" மென்றே யிடர்கூரப்
பொன்புரி முந்நூன் மார்பினர் செல்லப் பொலிவீதி
முன்புற நேருங் கண்ணிணை தானு முகிழாரால்.
 

370

  (இ-ள்) அன்பரும்....இடர்கூர - அன்பராகிய நம்பிகளும் "என்னிடத்து உயிரினை அளிக்கும்படி என்று சென்றவராகிய இறையவர் இன்னமும் என்ன செய்து மீள்குவரோ?" என்றே வருத்தம் மிக; பொன்புரி...முகிழாரால் - பொன்னாற் புரித்திட்டது போன்ற பூணூல் அணிந்த மார்பினையுடைய இறைவர் செல்லப் பொலிவு பெற்ற அத் திருவீதியினை எதிர்நோக்கும் தமது கண்களை இமைக்காதிருந்தனர்.