பக்கம் எண் :

410திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  மன்றல் செய்...முன்பு காட்ட - மணம் விளங்கும் இனிய குளிர்ந்த நீர்த் திவலைகளுடன் கூடி மெல்லியதாய்த் தென்றலும் எதிர்கொண்டு செல்லும் பணியை முன்னே செய்து வர,
 

376

  3531. (இ-ள்) மாலை.....முதலாயுள்ள - மாலையும், குளிர்ச்சியுடைய கலவைக் குழம்பும், கத்தூரி கலந்த சந்தனமும், மிக்க அழகிய நல்ல பச்சைக் கற்பூரமும், குங்குமமும் முதலாக உள்ள; சாலும்....செல்ல - திருமேனியிற் பொருந்தும் அணிகளும், ஒருங்கே தரிக்கும் பூணாடை வகைகளும், தகுதியுடைய பிறவும் ஆகிய இவற்றைத் (ஏந்தும்....செல்ல -) தாங்கிவரும் பரிசனங்கள் முன்னே போக,
 

377

  3532. (இ-ள்) இவ்வகை....எய்த - இவ்வாறாக இவர் வந்து சார; (இதனிடையில்); எய்திய ....செய்து - பொருந்திய விருப்பத்தினோடும் மைதீட்டிய நீண்ட கண்ணையுடைய பரவையாரும் மாளிகை முற்றிலும் நிலைபெற்ற செய்தொழிலால் மிகும் அலங்காரத்துக்குரிய சிறப்புடைய அணிகள் பலவற்றையும் செய்து; நெய்வளர்...நிரைத்து - நெய் நிறைந்த விளக்குக்களையும் தூபங்களையும் நீர்நிறைகுடங்களையும் வரிசைபெற அமைத்து; பின்னும் - அதன் மேலும்,
 

378

  3533. (இ-ள்) பூமலி....நாற்றி - பூக்கள் பொலிந்த மணமுடைய அழகிய மாலைகளையும், மணிகள் புனைந்த கோவைகளையும் தொங்கவைத்து; காமர்....நீவி - விருப்பம் தரும் பொற்சுண்ணத்தை வீசி மணமுடைய நறிய சந்தனத்தால் மெழுகி; சூழ்ந்த தோகையர் வாழ்த்த - சுற்றிலுமுள்ள தமது தோழியர்கள் வாழ்த்துக்களைச் சொல்ல; தூமலர் வீதி - தூய்மையாகிய மலர்கள் நிறைந்த திருவீதியிலே; மாமணி வாயில் முன்பு வந்து - பெரிய மணிகள் பொருந்திய திருவாயிலின் முன்பு வந்து; தாமும் - (பரவையார்) தாமும்; எதிர் ஏற்று நின்றார் - (நம்பிகளை) வரவேற்று நின்றனர்.
 

379

  இவ்வைந்து பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.
  3529. (வி-ரை) பின்சென்று....மீள்வார் - மரபின்படி சிறிது தூரம் பின் சென்று வழிவிட்டு வணங்கி விடைகொள்ளும் முறை; முன் (3521) உரைத்தவை பார்க்க.
  "எம்பிரான் வல்லவாறு!" என்று - இது நம்பிகளின் மனத்தின் அற்புத உணர்ச்சியின் எழுந்த எண்ணம். சிறிது போதினில் முன்முறை சென்றபோது "நாமே வேண்டவும் வெம்மைதான் சொல்லி மறுத்தாள்"(3506) என்று மீண்டருளியதும், பின்முறை "தாழ்குழல் செற்றந் தணிவித்தோம்"(3526) என்றதும் ஆகிய இந்த இரண்டு நிலைகளும் இவரையன்றி யில்லையாதலின் வல்லவாறு! என்று அற்புதமடைந்த தன்மை. இதற்கு இவ்வாறன்றி, எம்பிரானது வல்லமையால் முடிவதாயிற்று - நிறைவேறிற்று - என்றுரைப்பர் முன் உரைகாரர்; அவர் இது முடிந்ததென்பது அவாய்நிலையால் வந்ததென்றும், ஆறு- என்பதற்கு ஆற்றால் என மூன்றனுருபு விரித்தும் பொருள் கூறுவர்.
  வம்பலர் குழலார் - "முருகலர் குழலாய் (3518) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. மேலும் "வண்டுலாங் குழலார்"(3534) என்பதும் காண்க.
  காதல் நயந்து - காதலால் விரும்பி; நோக்கி - குறித்து.
 

275

  3530. (வி-ரை) முன் துயிலுணர்ந்து சூழ்ந்த - முன் - நம்பிகள் துயிலுணர்த்தி ஏவு முன்னமே பரிசனத்தின் கடமைப்பாடுடைய நிலை குறித்தது.
  துயிலுணர்தல் - விழித்தல்.