| விண்ணவர் பூமாரி பொழிந்து வாழ்த்த என்க; இது திருவருள் வெளிப்பாடு கண்டபோது தேவர்கள் செய்தல். |
| மன்றல் செய் - மணம் வீசும்; சீகரம் - நீர்த்தூவல்; தென்றல் நீர்த்தூவலுடன் வீசிற்று; நீர் கலத்தல் குளிர்ச்சியை மிகுதிப்படுத்தியது என்பது. |
| மந்தத் தென்றல் - மெல்லிதாய் வீசும் தென்றற் காற்று; மந்தமாருதம் என்பர். |
| எதிர்கொண்டு எய்தும் சேவகம் - நம்பிகளை எதிர்கொண்டு வந்து கவரி வீசி உபசரிப்பது போன்ற பணி; எதிர் கொள்ளுதல் - தற்குறிப்பேற்றம்; தென்றல் எதிர்கொண்டு - என்றதனால் நம்பிகள் தேவாசிரியனினின்றும் போந்து, வடக்கு நின்றும் தெற்கு நோக்கி எழுந்தருளினார் என்றும், பரவையார் திருமாளிகை தெற்குத் திருவாயிலினின்றும் தெற்கே உள்ளதென்றும் கருத இடமுண்டு; இந்நாளில் பரவையார் திருமாளிகை என்று வழங்கும் கோயிலும் இவ்வாறே அமைந்துள்ளதும் காண்க. |
| முன்பு - காலத்தாலும் இடத்தாலும் முன்பு. |
| காட்ட - நிலைமை புலப்படுத்த. |
| 376 |
| 3531. (வி-ரை) கலவைச் சேறு - வாசனைப்பண்டம் சேர்த்துக் கலந்த குழம்பு. மான்மதச் சாந்து - கத்தூரியுடன் கூட்டிய சந்தனம். |
| மெய்க்கலன்கள் - மெய்யில் அணிவன; மெய்ப்பூச்சும் அணிகளும். |
| ஆடைவர்க்கம் - உடைவகை; ஆரவர்க்கம் என்பது பாடமாயின் முத்தாரம் முதலியன என்க. முன்னர் மாலை என்றது மலர்மாலைகளை. |
| பாலன - இவ்வகையைச் சார்ந்தன; பிறவும் - தாம்பூலம் பழம் முதலியவை. |
| இவை முன்னமே பரவையார் மாளிகையில் செல்வதற்கு நம்பிகள் கொணர்ந்தவை. - ஏந்திச் செல்லும். |
| பரிசனம் முன்பு செல்ல - பரிசனம் - முன்னர் நம்பிகளுடன் வந்தாரும், அன்று திருவாரூரில் அப்போது சேர்ந்தாரும், இவர்களுள் ஒரு கூனனும் ஒரு குருடனும் சார்ந்தமையும், அவ்வாறு சார்ந்து மாலை - தாம்பூலங்களை ஏந்திச் செல்லப் பெற்ற பேற்றினால் முறையே நம்பிகள் திருவருளால் கூன் நீங்கப்பெற்றும், கண் விழிக்கப்பெற்றும் நலம் பெற்றமையும் வரலாறுகளாம். இவை "திருவாரூரன் பொன்முடிமேல், ஏற்றுத் தொடையலு மின்னடைக் காயு மிடுதருமக், கோற்றொதது கூனனுங் கூன்போய்க் குருடனும் கண்பெற்றமை, சாற்றித் திரியும் பழமொழி யாமித் தரணியிலே" (திருவந்தாதி - 48) என்றும், இதனைச் "சடையார் தூதுதருந் திருநாட்கூனுங் குருடுந்தீர்த்தேவல் கொள்வார் குலவு மலர்ப் பாதம், யானும் பரவித் தீர்க்கின்றே னேழு பிறப்பின் முடங்குகூன்" (3938 - கூற்றுவர் புரா - 9) என்றும் உரைத்தருளியவாற்றால் அறியப்படும். |
| பாலினம் - என்பதும் பாடம். |
| 377 |
| 3532. (வி-ரை) இவர் - நம்பிகள் பரிசனங்களை யுள்ளிட்ட இவர்கள் என்றலுமாம். |
| எய்திய விருப்பினோம் - நம்பிகளைக் "காதல் நயந்து" (3529) என்றதற்கேற்பப் பரவையாரை எய்திய விருப்பினோடும் என்றது இருபாலும் விருப்பம் மூண்ட நிலை குறித்தது. |
| மைவளர் நெடுங்கண்ணாரும் - முன்னர்ப் புலவியாற் சிவந்திருந்த கண்கள் இப்போது புலவி நீங்கியதனால், "கருங்குவ ளைச்செவ்வி யோடிக்கெழுமினவே" |