பக்கம் எண் :

422திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  லன்று என்பதும் கண்டுகொள்க, போகங் கூட்டுவிக்கும் எல்லாவுயிர்களுக்கும் இவ்வாறு நிகழ்தலில்லையே எனவும், கலிக்காமனாரை வருந்தச் செய்யாது வேறு வழியால் இறைவர் அறிவித்திருக்கலாமே எனவும் மேலும் மேலும் வினவுதல் திருவருள் செல்லும் வழிகள் மனிதர் அறிவுக்குள் அகப்படாமையினை அறியாதார் செயலே யாமென்றொழிக. (3557-3559 பார்க்க); கலிக்காமனார் விதிவழியே இறைவர்பால் வைத்த அன்பு காரணமாகவே செற்றங்கொண்டாரேனும் இறைவரது திருவருள் உயிர்களிடத்து நிகழும் வழிகள் பலவே றாதலும், நம்பிகளது சிவயோக நிலையும், அவர் உலகினைத் தெருட்டி ஆட்கொள்வதற்கு இறைவரது பணியினால் வந்த நிலையும் மேல் இறைவரால் காட்டியருளப் பெறும் தன்மையில் விளங்கினார் என்பதும் ஈண்டு மனங் கொளற்பாலன; இறைவர் செய்யும் நிக்கிரகங்கள் அருளின் பாலவேயாம் என்ற சிவாகம ஞானநூல் முடிவாகிய உண்மையும் இங்குக் கருதப்படுதல் வேண்டும்; இங்கு "அருளினார்" என்ற குறிப்புமது. அன்றியும், இறைவரது திருவருட் செயல்கள் மக்களின் பசுபோதங் கொண்டு ஆராயத்தக்கன என்று புகுதலும் பிழையாகு மென்க.
  வாடு - முதலினைத் தொழிற் பெயர்; தன் - சாரியை; அருளினார் - கருணை பாலித்தார். மறக்கருணை.
  வருத்துமாற்றால் அருளினார் என்க; ஆறு - இங்கு அறிவுறுத்தும் வழி என்ற பொருளில் வந்தது; வருந்தும் - வருந்தச் செய்யும் என்று பிறவினைப் பொருள் கொள்க. "மருத்துவன் சில வியாதி - அறுத்துக் கீறித் தீர்த்திடும்; சில நோய் - கட்டி - பாலும் கலந்துடன் கொடுத்துத் தீர்ப்பன்" (சித்தி-2-33)என்ற உண்மை இங்குக் காணற்பாலது.
 

389

3544
ஏதமில் பெருமைச் செய்கை யேயர்தம் பெருமான் பக்கல்
ஆதியா ரருளுஞ் சூலை யனல்செய்வேல் குடைவ தென்ன
வேதனை மேன்மேற் செய்ய மிகவதற் குடைந்து வீழ்ந்து
பூதநா யகர்தம் பொற்றாள் பற்றியே போற்று கின்றார்,
 

390

3545
சிந்தையால் வாக்கா லன்பர் திருந்தடி போற்றி செய்ய
எந்தமை யாளு மேயர் காவலர் தம்பா லீசர்
"வந்துனை வருத்துஞ் சூலை வன்றொண்டன் றீர்க்கி லன்றி
முந்துற வொழியா" தென்று மொழிந்தருள் செய்யக்கேட்டு,
 

391

3546
"எம்பிரா! னெந்தை தந்தை தந்தையெங் கூட்ட மெல்லாந்
தம்பிரா னீரே யென்று வழிவழிச் சார்ந்து வாழும்
இம்பரின் மிக்க வாழ்க்கை யென்னைநின் றீருஞ் சூலை
வம்பென வாண்டு கொண்டா னொருவனே தீர்ப்பான் வந்து!"
 

392

3547
"மற்றவன் றீர்க்கிற் றீரா தொழிந்தெனை வருத்த னன்றால்;
பெற்றமே லுயத்தீர்! செய்யும் பெருமையை யறிந்தா ரியாரே?
உற்றவன் றொண்டற் கேயா முறுதியே செய்தீ" ரென்னக்
கற்றைவார் சடையார் தாமு மவர்முன்பு கரந்தா ரன்றே.
 

393

  3544. (இ-ள்) ஏதமில்.....பக்கல் - குற்றமில்லாத பெருமை கொண்ட செய்கையினையுடைய ஏயர் பெருமானிடம்; ஆதியார்..... செய்ய - இறைவர் அரு