| அது பற்றிநின்ற வயிற்றினையும் உடன் கிழித்தாலன்றி அதனை வேறு பிரித்துக் கண்டு கிழித்தல் இயலாதாதலானும் உற்றவிவ் வயிற்றினோடும் என்றார். உற்ற - பிரிக்கலாற்றாது பொருந்திய. இவ்வெல்லா ஏதங்களும் பொருந்துதற் கிடம் தந்த என்பதும் குறிப்பு. |
| உடைவாள் தன்னாற்செற்றிட உடைவாள் வளவர் சேனாபதிக் குடியில் வந்து அத்தொழிலும் புரிவாராதலின் உடைவாளினை எப்போதும் உடையவராயினர்; அதனுடன் உடைவாள் கொண்டோச்சிப் பகைவரைக் கிழித்தலும் வல்லராயினர்; ஆதலின் பாதகச் சூலையாகிய பகையினை எளிதினிவ்வாறு கிழித்துத் தீர்க்கவும் வல்லராயினர் என்க. "ஏயர் கோக்குடிதான், மன்னி நீடிய வளவர் சேனாபதிக் குடியாம்" (3159); செற்றிட - என்ற குறிப்புமது; செறுதல் - அழித்தல். பகையை வீட்டல் இங்கு வயிற்றைக் கிழித்தல் குறித்தது. |
| உயிரினோடும் சூலையும் தீர்ந்தது - மங்கல வழக்கு; உயிரினோடு சிறப்பு நோக்கி ஓடு உருபை உயிருடன் சார்த்தி ஓதினார்; சூலையும் - உம்மை இழிவு சிறப்பு; வெல்லவந்ததாயினும் அது செய்ய மாட்டாது தான் தீர்ந்தது என்று எளிமைபடக் கூறியவாறு. அன்றே - அப்பொழுதே. |
| நான் மாயப்பற்றி நின்று - நான் மாயும்படி இறக்கும் அத்தனை வேதனை செய்து பற்றி ஊன்றி நின்று; மாய - மாயும்படி; முற்குறிப்பு. |
| 397 |
3552 | கருதரும் பெருமை நீர்மைக் கலிக்காமர் தேவி யாரும் பொருவருங் கணவ ரோடு போவது புரியுங் காலை "மருவியிங் கணைந்தார் நம்பி" யென்றுமுன் வந்தார் கூற "ஒருவரு மழுதல் செய்யா தொழிக"வென் றுரைத்துப் பின்னும், | |
| 398 |
3553 | கணவர்தஞ் செய்கை தன்னைக் கரந்து"கா வலரை நம்பி அணைவுறும் பொழுது சால வலங்கரித் தெதிர்போ" மென்னப் புணர்நிலை வாயிற் றீபம் பூரண கும்பம் வைத்துத் துணர்மலர் மாலை தூக்கித் தொழுதெதிர் கொள்ளச் சென்றார். | |
| 399 |
| 3552. (இ-ள்) கருதரும்....தேவியாரும் - நினைத்தற்கும் அரிய பெருமையும் அன்புமுடைய கலிக்காமனாரது தேவியாரும்; பொலிவரும்....காலை - தமது ஒப்பற்ற கணவருடனே உயிர் துறந்து உடன் தாமும் போவதனை விரும்பி அதற்குரிய நிலையினை அமைக்கும் காலையில்; மருவி....கூற - நம்பிகள் இங்குப் பொருந்தி அணுக அணைவாராயினர் என்று முன் வந்தவர்கள் சொல்லக் கேட்டு; ஒருவரும் பின்னர் - ஒருவரும் அழுதலைச் செய்ய வேண்டாம் என்று உடனிருந்தார்க்கெல்லாம் சொல்லிப் பின்னரும். |
| 398 |
| 3553. (இ-ள்) காவலரை - காவலாளர்களை நோக்கி; கணவர்....கரந்து - கணவனாரது செயலினை மறைத்து; நம்பி....என்ன - நம்பிகள் இங்கு அணையும் போது திருமனையை மிகவும் அலங்காரஞ் செய்து எதிர் சென்று நல்வரவேற்று அழையுங்கள் என்று ஏவியிட; புணர்நிலை;....சென்றார் - (அதுகேட்ட அப்பரிசன மாந்தர்களும்) செறிந்த நிலையினையுடைய வாயிலில் விளக்கும் நிறைகுடமும் வைத்து கொத்துக்களையுடைய மலர்மாலைகளையும் தொங்கவிட்டு வணங்கி எதிர் கொள்ளச் சென்றார்கள். |
| 399 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |