| மானை ஏவினானாகிய நம்பி இங்கு வந்து எனது சூலைநோயினைத் தீர்க்கும்படியான பெருங்கேடும் பொருந்த வருமேயாகில் யான்செய்வதென்னாமோ என்பாராகி, |
| 396 |
| 3551. (இ-ள்) மற்றவன்....முன் - மற்றவன் இங்கே வந்து நோய் தீர்ப்பதற்கு முன்னே; நான்....சூலை தன்னை - நான் இறக்கும் வேதனை அளவு என்னைப் பற்றி நின்று நீங்காத இந்தப் பாதகமுடைய சூலை நோயினை; உற்ற....என்று - அது பொருந்தித் தங்குதற் கிடமாகிய வயிற்றினோடுங் கிழித்து அழித்து விடுவேன் என்று துணிந்து; உடைவாள்....செற்றிட - உடைவாளினாலே வயிற்றினைக் கிழித்திட; உயிரினோடும்....அன்றே - உயிரினுடனே சூலை நோயும் அப்போதே தீர்ந்தது. |
| 397 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
| 3550. (வி-ரை) சூலையும் - கேதமும் - வருத்த என்க. கேதம் - துன்ப மொழி; சூலை வருத்தியதன் மேலாக இறைவர்பாற் கேட்டமொழி வேறாக அதிகத் துன்பம் செய்தமையால் வேறு பிரித்தோதினார். அவர் - இறைவர்; கேட்டகேதம் - முன் (3545) கூறியது. |
| மீண்டும் - அவற்றின் மேலும்; வரவும் - முன்னவற்றின் மேல் இதுவும் என உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை. |
| ஏவினான் சூலை தீர்க்கும் ஏதம் - சூலை தீர்தலை விரும்பி இறைவரை வேண்டினாரேனும் (3544-3545), இறைவரைத் தூதாக ஏவினானால் அது தீரும் நிலையைக் கெடுதியாகவே கொண்டனர்; ஏதம் -கேடு; ஏவினான் - ஆரூரர்; வினையாலணையும் பெயர். |
| ஏதம் இங்கு எய்த எய்தில் எய்தில் பொருந்தினால்; எய்த - எய்தும்படி; எய்தில்-வன்றொண்டன் எய்தினால் என்றலுமாம்; வன்றொண்டன் வரில் இறைவர் அருளியபடி சூலை தீரும்; அது தீர அவனால் தீர்க்கப்படும் ஏதம் எய்தும் என்பதாம். |
| இங்கு - இவ்விடத்தில்; நான் உயிருடன் உள் இப்போது என்றலுமாம்; மேற்பாட்டுப் பார்க்க. |
| செய்வதென்னாம் - என்னாகுமோ; எது விளையுமோ? நான் செய்வது என்னை என ஆலோசித்தார் என்பாருமுன்டு. |
| என்பார் என்று - செற்றிட - என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. |
| யான் செய்வதென்னோ என்று - என்பதும் பாடம். |
| 396 |
| 3551. (வி-ரை) மற்றவன் - அருள் ஒழுக்கத்திற்கு வேறானவன். அயலவன் என்பது குறிப்பு; மற்று அவன் என்றலுமாம்; மற்று - முன் (3550) கூறியபடி "ஏவினான்" ஆகிய என்பது. |
| தீர்ப்பதன் முன் - சூலை தன்னைக் கிழிப்பேன் என்று கூட்டுக, கிழித்தல் - ஈண்டுத் துணிவுபடுத்தி அழித்தல் என்னும் பொருளில் வந்தது. அவன் தீர்ப்பதன்முன் நானே அதனை அழித்தொழிப்பேன் என்றது அடியார்பால் விளங்கும் வீரம். "வீரமென்னால் விளம்புந் தகையதோ?" (144); "வானந் துளங்கிலென்....ஆட்பட்ட வுத்தமர்க்கே" (தேவா); இப்புராணத்தில் வரும் பல அடியார்களின், தம் உயிரையும் பொருட்படுத்தாத பற்பல வீரச் செயல்களை இங்கு நினைவு கூர்க. |
| பாதகச் சூலை - சிவாபராதம் செய்தானது தொடர்புக்கு உடன்பட வைத்தலால் பாதகச்சூலை என்றார். |
| உற்ற இவ்வயிற்றி னோடும் கிழிப்பன் - சூலையைக் கிழித்து ஒழித்தலே கலிக்காமனார் இங்குக் கருதியதாயினும், அது வயிற்றை யிடமாகப் பற்றி நிற்றுறவாம் |