பக்கம் எண் :

[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்433

  இவ்வாறே முன், "நந்தமை யாளுமோர் காவலர்" என்று ஒப்பக் கூறியது நோக்கற்பாலது.
  அவர்க்கு நகை முகம் நல்கி என்க, அவர் - எதிர்கொள்ள வந்த மாந்தர்; நகை முகம் நல்குதல் - வரவேற்பை ஏற்று மகிழ்ச்சிக் குறியாக இன்முகம் காட்டுதல். நகையோடு கூடிய முகமலர்ச்சியைக் காட்டி; மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை.
  மெய்ம்மையாம் விருப்பினோடு மேவி - மெய்யடிமைத் திறமே பற்றி உளதாகிக் கலிக்காமனாரது நட்பினை விரும்பும் மனநிலை பொருந்தி; ஆம் - ஆக்கச்சொல் இந்நிலை இனி உண்மையேயாகி நிறைவுறும் என்ற குறிப்புப்பட நின்றது; ஆதல் - விளைதல்.
  தவிசு - நம்பிகளுக்கென்று அமைந்த ஆசனம்.
 

400

  3555. (வி-ரை) வழாமை - கொண்டு என்று கூட்டுக.
  பான்மை அர்ச்சனைகள் எல்லாம் சிவனடியார்களையும் சிவாசாரியர்களையும் உபசரிக்கும் முறை இங்கு அர்ச்சனை எனப்பட்டது; பான்மை - ஆகமவிதிப் பகுப்பு; சிறப்பு மிக்க எனினுமாம். அர்ச்சனை - தூப தீப பாத்தியம் அர்க்கியம் முதலியவை. 16 வகை உபசாரங்கள்.
  பண்பினில் வழாமை - பண்பாவது செய்யும் முறை; அர்ச்சனைகள் என்பது உபசாரப் பகுதிகளையும், பண்பு - என்பது அவை செய்யும் முறைகளையும் குறித்தன. ஏந்த என்று பாடங் கொண்டு முன்கூறிய அர்ச்சனைப் பகுதிகளாகிய பாத்திய அர்க்கியம் சாந்தம் புட்பம் தூப தீபம் முதலியவற்றை ஏந்த என்பது இராமநாதச் செட்டியார் குறிப்பு; ."கதுமெனக் கணவ னாரைக் கண்ணுதற் கன்பரோடும்; விதிமுறை தீப மேந்தி" (851) என்றதும்; "நங்கை பரவை யார் திருமாளிகையி னண்ண நன்னுதலார், பொங்கு விளக்கு நிறைகுடமும் பூமா லைகளும் புகையகிலும், எங்கு மடவா ரெடுத்தேந்த" (3817-கழறிற்-புரா.70); "இனிய பஞ்ச வாசமுட னடைக்கா யிலையு மேந்தினார்" (3817-கழறிற்-புரா.77) என்பனவும் காண்க.
  நான்மறை தொடர்ந்த வாய்மை - வேதவுண்மைகளையே விளக்கும் திருவாக்குக்களாகிய தேவாரங்களை அருளும்; தொடர்தல் - கருத்துக்களை எடுத்து விரித்தல்; நான்மறை தொடர்ந்த வாய்மை - சிவாகமங்கள் என்ற குறிப்புமுடையது.
  கொண்டு - ஏற்றுக்கொண்டு; அங்கீகரித்து.
  ஊனவெஞ்சூலை - ஊனம் - கொடுந்துயர் என்ற பொருளில் வந்தது; வெம்மை - கொடுமை; இந்த இரண்டு அடைமொழிகளும், ஊனம் - வயிற்றினைக் கிழித்தலாலாகிய உடற் சேதத்தினையும், வெம்மை - உயிர் நீக்கிய கொடுமையினையும் செய்யும் நிலை என்ற சரித நிகழ்ச்சியின் உண்மை நம்பிகளது மெய்வாக்கினைப் பற்றி விளக்கி நிற்றல் காண்க; வாய்மை - என்றதும் இக்குறிப்பு; வருந்துகின்றேன் - நிகழ்ந்தவை பற்றிய குறிப்பும் தருவது காண்க. இங்கு - இப்போது; இடம் காலமும் குறித்தது.
 

401

  ஊன வெஞ் சூலை நீக்கி உடன் இருப்பதனுக்கு - மிக வருந்துகின்றேன் - சூலையினை நீக்கி அவருடன் கூடி மகிழ்ந்திருக்கும் நிலையை விரும்பினேனாதலின் அது இன்னும் நேராமை பற்றி வருந்துகின்றேன் என்பதாம்; அவர் சூலைவாய்ப்பட்டுக் கிடக்கின்றமையால் நன்னிலையின்றி உடனிருத்தல் கூடப் பெறாமை வருத்தத்தின் காரணம் என்றபடி. சூலை நீக்கமும் உடனிருக்கும் இன்பமும் விரும்பிய