| ஆதலால் காணவேண்டும் - அவர் தீதணைவின்றி யிருப்பினும் என் மனந்தெருளாமையினால் அவர் பொருட்டன்றி என் பொருட்டே - அது தெருட்சி பெறும் பொருட்டுக் - காணவேண்டும் என்பது. |
| அருளிச் செய்தார் - காண்பது கருதி மொழிந்த அளவே மேல் இறைவர் அருளிப் பாட்டுக்கு வழியாக நிகழ்வது என்றது குறிப்பு. |
| 402 |
3557 | வன்றொண்டர் பின்னுங் கூற, மற்றவர் தம்மைக் காட்டத் துன்றிய குருதி சோரத் தொடர்குடர் சொரிந்துள் ளாவி பொன்றியே கிடந்தார் தம்மைக் கண்டபின் "புகுந்த வாறு நன்"றென மொழிந்து "நானு நண்ணுவே னிவர்முன்" பென்பார், | |
| 403 |
3558 | கோளுறு மனத்த ராகிக் குற்றுடை வாளைப் பற்ற ஆளுடைத் தம்பி ரானா ரருளினா லவரு முய்ந்து "கேளிரே யாகிக் கெட்டே" னெனவிரைந் தெழுந்து கையில் வாளினைப் பிடித்துக் கொள்ள வன்றொண்டர் வணங்கி வீழ்ந்தார். | |
| 404 |
| 3557. (இ-ள்) வன்றொண்டர்...காட்ட - வன்றொண்டர் அது கேட்ட பின்னரும் இவ்வாறு சொல்ல மற்று அவர்கள் (அழைத்துச் சென்று) அவரை (கலிக்காமனாரை)க் காட்ட; துன்றிய....கண்டபின் - நிரம்பிய இரத்தம் வெளிவந்து தொடர்ச்சியாகிய குடர் வெளிப் போந்து உயிர் நீங்கியே கிடந்த அவரைக் கண்டவுடனே; புகுந்த....மொழிந்து - நிகழ்ந்தவாறு நன்று! என்று கூறி; நானும்....என்பார் - நானும் இவர்முன் இவ்வாறே சார்வேன் என்பாராகி, |
| 403 |
| 3558.(இ-ள்) கோளுறும்... பற்ற - தற்கொலைத் துணிவு கொண்ட மனத்தினை உடையவராகி அதன்பொருட்டுக் குத்திக்கொள்வதற்குரிய அவ் வுடை வாளினைத் தம் கையாற் பற்றிட; ஆளுடை.....உய்ந்து - ஆளுடைய தமது இறைவனாரது திருவருளாலே அக்கலிக்காமனாரும் மீள உயிர் பெற்று; கேளீரே ...பிடித்துக்கொள்ள - நட்புடையவரேயாகிக் கெட்டேன்!என்று விரைவுடனே எழுந்து நம்பிகள் கையிற் பற்றிய வாளினைப் பிடித்துக் கொள்ளவே; வன்றொண்டர் வணங்கி வீழ்ந்தார்- வன்றொன்டராகிய நம்பிகள் வணங்கி வீழ்ந்தனர் |
| 404 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
| 3557. (வி-ரை) பின்னும் - "தீதணைவில்லை உள்ளே பள்ளி கொள்கின்றார்" என்று கூறக் கேட்டபின்னரும்; உள்ளே பள்ளி கொள்கின்றாராதலின் சென்று காணக்கூடாத நேரம் என்பது கேட்ட பின்னும் என உம்மை சிறப்பும்மை; "இடைதெரிந்தருள வேண்டும் - துயில்கொளு மிறைவன்" (475) என்புழி வெளிப்படும் உட்குறிப்புப் போலக் கொள்க. பின்னும் கூற - முன் பாட்டிற்கூறிய அதுவேயுமன்றி அக்கருத்தினையே வற்புறுத்தி மேலும் கூற என்றுரைப்பாரும் உண்டு; இப்பொருளில் உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை. |
| காட்ட - உள் அழைத்துக் கொண்டு சென்று காட்ட; மற்றவர் - மனைத்தொழில் மாக்கள் கூறியவாறுமன்றித், தாம் எதிர்பார்த்தவாறு சூலையுடனுமன்றிக் கிடந்தார் என்பது மற்று என்பதன் குறிப்பு. |
| துன்றிய குருதி சோர - துன்றுதல் - மிகுதல்; சோர - சோர்ந்து என்ற வினையெச்சத்திரிபு. |