பக்கம் எண் :

436திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  தொடர் குடர் - குடர் என்னும் வயிறுள்பட்ட அன்னக் குழாய் நீண்ட சுருண்டுள்ள தொன்றாதலின் தொடர் என்றார். சொரிதல் - வாள் செறுதலாலாகிய தொளையின் வழியே ஊறுண்டு வெளியில் நீண்டு தொங்கிக் கிடத்தல், தொடர்குடர் - வினைத்தொகை.
  உள் ஆவிபொன்றியே - உன் ஆவி இவற்றினுள் பொருந்திய உயிர்; ஆவி பொன்றுதல் - உயிர் நீங்குதல்.
  கிடந்தார் - சோர - சோர்ந்ததனாலும், சொரிந்து - சொரிந்ததனாலும் ஆவி பொன்றினார் எனக் காரணக் குறிப்புப்படக் கூறியதுமாம்; மிக்க குறுதி வெளிப்படின் உயிர்போம் என்பதும், குருதி நீரே உயிர் தாங்கும் சத்துடையது என்பதும் இந்நாள் ஆங்கில மருத்துவ நூலாராய்ச்சியிற் கண்ட உண்மைகள். குருதி போனதால் மரணம் (Death due to loss of blood) என்றும், குருதிப்புனலுள் சிகப்பும் வெண்மையுமாகிய இருவகைப் புழுப்போன்ற தாதுக்களே உயிர் தாங்க உதவுவன (red and white corpusles) என்றும் கூறுவர் நவீனர்; இதுபற்றி"....மெள்ள நின்றூரும் புழுவி னொழுங்கோ!.....இன்ன தியானென் றறியே னென்னை, யெங்குந்தேடினன் யாதினுங் காணேன்"(திருவிடை-மும்-கோ.13) என்பது பட்டினத்து அடிகள் திருவாக்கும் காண்க.
  தொடர் குடர் - மேலே, வாயினை ஒரு கோடியாகவும், கீழே அபானத்துளையை மற்றொரு கோடியாகவும் கொண்டு நீண்டதோர் குழாயாக, இடையில் வயிறும் அதைச் சார்ந்த குடலின் சிறுகுழாய்ப் பகுதியும் பெருங்குழாய்ப் பகுதியுமாக (Small & Iarge Intestines) தொடர்ந்த நிலைபட உள்ளது உணவுச் சீரணக் கருவி என்பதும் நவீனரும் கண்டவுண்மை; தொடர் - என்ற கருத்துக் காண்க. குடர் - குடல் எனவும் வழங்கும். சொரிதல் - ஊறுண்டு வயிற்றிற் குற்றுப்பட்ட துளை வழியாக வெளியில் வந்து வழிந்தது போலத் தொங்குதல்.
  கண்டபின் - கண்டவுடனே.
  புகுந்தவாறு நன்று - புகுந்தவாறு - நிகழ்ந்தபடி; நன்று எதிர்மறைக் குறிப்புப் பட நின்ற துன்பமொழி. புகுந்த - தீங்கு வந்து அடைந்த; நான் வந்த என்றலுமாம்.
  நானும் இவர் முன் நண்ணுவேன் - இவர் சென்றது போல நானும் உயிர் துறந்து செல்வேன்; நண்ணுதல் - உடல் விட்டபின் சாருமிடத்திற்கு என்பது குறிப்பெச்சம். உம்மை இவருடன் இவர்போலவே என்று உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை; முன் - முன்பு. இடம் குறித்தது. முன் - இவர் செல்லுமுன்; முன்பாக என்றலுமாம்.
  என்பார் - முற்றெச்சம். என்பாராகி - மனத்தராகிப் பற்ற என வரும்பாட்டுடன் கூட்டுக.
  இவர் - முன்பு கிடந்த கலிக்காமனாரைச் சுட்டிய அணிமைச் சுட்டு,இவர் - முன்பு கிடந்த கலிக்காமனாரைச் சுட்டிய அணிமைச் சுட்டு,
 

403

  3558. (வி-ரை) கோள் - தற்கொலை துணிந்த கொள்கை; உறுதல் அதனாற் கொள்ளப்பட்ட நிலை.
  குற்று உடை வாள் - குற்று - குத்துதல்; "நெற்குறுபாட் டொலிபரக்கும்" (1049); குற்று - குறுகிய - சிறிய - என்ற குறிப்பு முடையது; இது கலிக்காமனார் வயிற்றிடைக் குத்திக்கொண்டு அவர்பாலிருந்த உடைவாள் (3551). உடையிற் செருகும் வாள் உடைவாள். குற்று - குற்றிக்கொண்ட என்றலுமாம்.
  பற்றுதல் - விரைவிற் பறித்துப் பிடித்தல்,
  ஆளுடை....உய்ந்து ஆளுடை - இருவரையும் ஆட்கொண்ட, ஆளாக வுடைய; அவரும் - ஆவி பொன்றிக் கிடந்த அவரும் (கலிக்காமனாரும்); உம்மை சிறப்பு; உய்ந்து - உய்தல் ஈண்டு மீள உயிர் பெறுதல் குறித்தது.