பக்கம் எண் :

448திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  கூடலையாற்றூர்
  என்று நம்பிகள் கேட்க, அவர் திருக்கூடலையாற்றூரெய்தச் சென்ற திவ்வழிதான்! என்று சொல்லித் தாமும் வழித் துணையாகி உடன் சென்றனர். சிறுபொழுதில் அவர் காணாது மறைந்தருள, நம்பிகள் "அடிகளில் வழிபோந்த அதிசய மறியேனே" என்ற கருத்துடன் "வடிவுடை மழுவேந்தி" என்ற பதிகம்பாடிக் கூடலையாற்றூர் சென்று மிக்க ஆர்வத்தோடும் பணிந்து துதித்துத் திருமுது குன்றத்தினை அணைந்தனர்.
  திருமுதுகுன்றம் - 12000 பொன் பெற்று ஆற்றிலிடுதல்
  அங்கு இறைவரை முறையினாலே வழிபட்டு "நஞ்சியிடை" என்ற பதிகத்தினைப் பாடித் தாம் பொருள் வேண்டி வந்த திருவுள்ளக் குறிப்பினோடே வணங்கித் துதிக்கும்போது இறைவர் 12000 பொன் கொடுத்தருளினார். அது கண்டு நம்பிகள் மகிழ்ந்து தாழ்ந்து அருகு சென்று "தேவரீர் அருளும் இப்பொன்னெல்லாம் ஆரூர் உள்ளோர் மருளுற வியப்ப ஆங்கே வரப்பெற வேண்டும்" என்றும் விண்ணப்பித்தனர். அதற்கு இறைவர் "இப்பொன்னை யெல்லாம் இங்குத் திருமணி முத்தாற்றில் இட்டுப் போய்த் திருவாரூர்க் குளத்தினிற் கொள்க" என்றருள நம்பிகள் மச்சம் வெட்டிக் கைக்கொண்டு அப்பொருளை யெல்லாம், அன்று என்னை வலிய ஆண்ட அருளை இதில் அறிவேன் என்று வணங்கி ஆற்றினில் இட்டனர்.
  அங்கு நின்றும் அருள் விடை பெற்றுத், திருத்தில்லையினை அணைந்து திருவம்பலக் கூத்தரது அருட் பெருங் கூத்தினைக் கண்டு கும்பிடுவார் இறைவரைப் பேரூரிற் கண்ட நிலை சிறப்பித்துப் பாடியருளினார்; அதன்பின் அங்கு நின்றும் திருக்கருப்பதியலூர் திருப்பழ மண்ணிப் படிக்கரை என்ற பதிகளை வணங்கித் திருவாழ் கொளிபுத்தூரினை எய்தாது சென்றவர் மீள நினைந்து வந்து வணங்கி "மறந் தென்னினைக்கேனே" என்ற பதிகம் பாடித் துதித்தனர். அங்கு நின்றும் திருக்கானாட்டு மூன்ளுர், திருஎதிர்கொள்பாடி, திருவேள்விக்குடி முதலிய பதிகளைக் கும்பீட்டுத் திருவாரூரில் அணைந்தனர். பின் ஒரு நாள் பரவையாரையும் உடன் கொண்டு திருமுதுகுன்றில் இறைவர் தந்த பொருளை எடுப்பதற்குக் குளத்தின் வடகீழ்க் கரையினை அணைந்து அற்றைநா ளிட்டெடுப்பவர் போல் தடவினர். திருவிளையாட்டினை உவந்து இறைவர் பொன்வருவியா தொழியக் கண்டு, "ஆற்றினி லிட்டுக் குளத்தினிற் றேடுவார் அருளிதுவோ" என்று பரவையார் நகைத்து மொழிந்தருளவே, நம்பிகள், "பொன் செய்த மேனியினீர்" என்று தொடங்கிப் பரவையார் நகைக்காதபடி அடியேன் இட்டளங்கெடவே பொன்தாரும் என்று வேண்டினார்; அதனுள் "ஏத்தாதிருந் தறியேன்" என்ற எட்டாவது திருப்பாட்டளவில் இறைவர் பொன்முழுதுந் தந்தருளக் கைக்கொண்டு பதிக நிறைவாக்கிப் பொன்னினை, மூலமெனக் கொடுபோந்த ஆணியின் முன் உரைப்பிக்க, இறைவரருளால் உரைதாழ, அதன் பொருட்டு இறைவரை வணங்க, உரைநிறை வெய்தப்பெற்றுக், கரையேறிக் கனகமெலாம் மாளிகையினிற் போக்கித் தாம் புற்றிடங்கொண்டாரை வணங்கி மகிழ்ந்திருந்தருளினர்.
  அந்நாளில் நம்பிகள் இறைவரது பிற பதிகளைச் தொழுவதற்கு நினைந்து சென்று திருநள்ளாறு, திருக்கடவூர் திருக்கடவூர்த் திருமயானம், திருவலம்புரம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, திருநனிபள்ளி, திருநின்றியூர் முதலிய தலங்களைப் பணிந்து திருநீடுரைப் பணியாது செல்பொழுதில் மீள நினைந்து வந்து "நீடூர் பணியா விடலாமே" என்ற திருப்பதிகம்பாடி வணங்கி அங்குத் தங்கினர். அதன்