பக்கம் எண் :

  திருவொற்றியூர்க் கோவிலில் பல நிவந்தங்கள் விடப்பட்டன. எனவே, அக்காலத்தில் அக்கோயில் சிறந்த நிலையில் இருந்திருத்தல் வேண்டும்.
  8. செய்யுள் - 247 (3401)
  வன்தொண்டன்: இப்பெயர் சுந்தரர்க்கே உரியது. இதனைப் பிற்கால மக்கள் இட்டுப் பெருமை கொண்டனர் என்பதைப் பல கல்வெட்டுக்களால் அறியலாம். அணுக்க வன் தொண்டன் (M. E. R. 524 of 1938.)
  9. செய்யுள் - 337 (3491)
  சிவபெருமான் தலைமை அர்ச்சகர் வேடத்தில் சங்கிலியாரிடம் தூது சென்றார்: திருவாரூர்க் கோயில் அர்ச்சகர் ஞானசிவாசாரியார் மகளார் இசைஞானியார். அவர் மகனார் சுந்தரர் எனவரும் கல்வெட்டுச் செய்தி இங்கு நோக்கத்தக்கது. (S. I. I. 4. P. 152).
  10. செய்யுள் - 398 (3552)
  கலிக்காமர் மனைவியார் உடன்கட்டை ஏற விரும்பியது. சோழ அரசர்களுடன் சோழமாதேவியர் உடன்கட்டை யேறியதாகக்காணப்படும் பிற்காலக்கல்வெட்டுச் செய்திகளை நோக்க, இவ்வழக்கம் நாட்டில் வழக்கிலிருந்தது என்பது நம்பத்தகும்.
 
 

திருத்தங்களும் குறிப்புக்களும்

 

(அன்பர் இராவ்பகதூர் - தணிகைமணி- V.S. செங்கல்வராய பிள்ளை, M. A. அவர்கள் உதவிய)

  3156. நஞ்சு + சூழ் + வன + நயனியர் - நஞ்சு சூழ்ந்துள்ள வனம் (அழகிய) கண்களை உடையவர் - எனவும் பிரித்துப் பொருள் கோடலுமாம். (‘வனமுலை' ‘வனபவளவாய்' - என்புழிப்போல. ‘வனநாயகம்’.)
  3164. அணிந்துள்ள மதியை மறைத்து வந்தாராதலின் ‘மறையவர்’என்றார். மறையவர் - மறைந்துவந்த அவர்.
  3178. நம்பியும் பரவையும் இருவரும் மகிழ அளித்தாராதலின் ‘ உமையோடும் வருவார்’ எனச் சத்தியையும் சேர்த்துக் கூறினார்.
  3184. ‘புற்று’ - என்பதற்கேற்பத் ‘தேன்’ என்றார். ‘புற்றுத்தேன்’ என்பது மதிலிடுக்கு முதலியவற்றில் ஈக்களால் வைக்கப்படுந் தேன் - பதார்த்த குண சிந்தாமணி-" Vide Lexin
  3189. (பக்கம் 27) பதவுரையில் புகை நோய்ந்தபுனுகு + இனிய நறுநெற் (புனுகு - Omitted).
  3193. (பக்கம்29) பதவுரையில் - வரி 7-மக்கண் முறைமை - May be மகள்களாம் முறைமை.
  3226. ‘குமகாகிய தங்கோலம்’ - ‘மணங்கமழ் தெய்வத் தினநலங் காட்டி’- திருமுருகாற்றுப்படை.
  3231. பக்கம்75. வரி 2. தாரம் = நீர்.
  3269. பக்கம் 120, ‘அடிமைக்க ணன்றியே’என்பது பாடமாயின் மடித்து நடிக்கின்ற திருவடியினிடத்து மாறுபட்டு எனப் பொருள் கொள்க. ஈண்டு அடிமை என்பது மை விகுதி தன்மை உணர்த்தாது தன்மையுடைப் பொருளையே உணர்த்திப் பகுதிப்பொருள் விகுதியாய் நின்றது. ‘இருமை வகைதெரிந்து’ என்புழிப்போல." - சாமிநாத பண்டிதர் குறிப்பு.
  3274. பக்கம் 131 - விடை யரவக் கொடி - அரவம் - ஒலி; ‘இடிபடு குரலுடை விடையினர்’ (சேறை) சம்பந்தர் III - 86 -4 ‘அதிரார் பைங்கண் ஏறு' - சம்பந்தர் (சிற்றேமம்) III - 42 - 4.
  3295. பக்கம் 154 - பதிகப்பாட்டு(1)பாறு - பருந்து, கழுகு.
  3301. பக்கம் 164. வரி 18. ‘பாறு சேர்தலைக் கையர்’ சம்பந்தர் I - 135 - 1 (பராய்த்துறை).
  3313. பக்கம்181. வரி 4. ஏலம் (வாசனைப் பாடம்) இட்ட நறுந்தண்ணீர் எனலுமாம்.