| 3382. பக்கம் 254 - பக்கம் 257வரி 24 என்னை! = இது என்ன வியப்பு! துன்னுக் கொடி போல்வாள் உள்ளம் திரிவித்தாள்; (என்னை - இது என்ன வியப்பு!) எனலுமாம். |
| 3384. பக்கம் 259 - வரி 18 . சங்கிலியார் பிணைக்கும் மலர் இறைவனடி கூடுதல் போலத் தன் உயிரும் அதனுடன் அவரால் பிணிக்கப்பட்டு இறைவனடி சேர்ப்பிக்கப்படும் - எனவும் தொனிக்கும். |
| 3386. பக்கம் 262 - வரி 23. மாலை தொடுத்துத் தொடை அவிழ்த்த - முரணணி. |
| 3388. முளரிவளை நிதி - வேண்டுவதைக் கொடுப்பதுபோல - இறைவனும் வேண்டியதைக் கொடுத்தருள்வான் - என்பதைக் குறிக்கப் பதுமநிதி சங்கநிதி குறிப்பிடப்பட்டன. |
| 3391. பக்கம் 266. மதியம் தீண்டு கன்னிமாடம் - கன்னி (மணங்கூடித்) தீண்டப் படுவாள் என்பதைக் குறிக்கும். |
| 3392. பக்கம் 268 - வரி 1. ‘நீற்றுக் கோலம்,’ ‘நீற்றுக்கோடி நிமிர்ந்து காட்டியும்’ - திருவாசகம். |
| 8397. பக்கம் 271. ‘அற்றமுறு நிலைமையினால்’ - சமயத்துக்கு ஏற்றபடி (வேறுவழியில்லாமல்); அவமான நிலை வராவழிக்கு; அற்றம் - சமயம்; அவமானம். |
| 3409. வரவுபார்த்தாரூரர் - ஆரூரர் என்றார், ஒற்றியூரை "எவ்வளவு நாள் பிரிந்தேன் என் ஆரூர் இறைவனையே"எனத் திருவாரூரை நினைந்து செல்லக் கூடியவர் எனக் காட்டுதற்கு. |
| 3424. எதிர்கொண்டழைத்தபடி ஓர் நினைவு வந்தது போலும்,. எதிர்கொண்டருளும் வசந்தம் தம்மை (திருவாரூருக்கு வா என்று) |
| 3453. ‘வேதமெலாம் தொக்கவடி வாயிருந்த துருத்தியார் - சுவாமி பெயர் (இத்தலத்தில்) வேதேசுரர் - (சிவஸ்தலமஞ்சரி) ஆதலின். |
| 3472. பக்கம் 367வரி 13. செற்றம் - பகைமை; நெடுங்காலம் நிகழ்வது. செற்றம் ‘இகலொடு செற்ற நீக்கிய மனத்தினர்’ - திருமுறுகாற்றுப்படை உரை (நச்சினார்க்கினியர்). |
| 3483. பொன் - மணி - பரவை என்பன பரவையின் பொன்போலும் மணி போலும் உயர்ந்த குணப்பண்புகளைக் காட்ட வந்தன. |
| 3490. குஞ்சர உரிவை புனைந்தவர் - என்பது தமது சோதித் திருவுருவை மறைத்துப் பூசை அர்ச்சகர் உருவைக் காட்டப் போகின்றார் ஆதலின். |
| 3491. ஞாலமுய்ய எழுந்தருளும் என்பதை நம்பியுடன் கூட்டாது தூதருடன் கூட்டியுரைக்கவும் நின்றது. |
| 3492. ‘பாவாய் திறவாய்’ - என்பது பரவாய் திறவாய் என்பதும் பாடம். |
| 3496. மின்னிடை மடவாய் - மின் மறைவமுது போல உன் சினம் மறைதல் வேண்டும் என்பது தொனி. |
|
|