பக்கம் எண் :


சிவமயம்

30. திருமூலதேவ நாயனார் புராணம்

தொகை

"நம்பிரான் திருமூல னடியார்க்கு மடியேன்"

- திருத்தொண்டத் தொகை - (5)

வகை
குடிமன்னு சாத்தனூர்க் கோக்குல மேய்ப்போன் குரம்பைபுக்கு
முடிமன்னு கூனற் பிறையாளன் றன்னை முழுத்தமிழின்
படிமன்னு வேதத்தின் சொற்படி யேபர விட்டென்னுச்சி
அடிமன்ன வைத்த பிரான்மூல னாகின்ற வங்கணனே.

- திருத்தொண்டர் திருவந்தாதி - (36)

விரி
3564
அந்தியிளம் பிறைக்கண்ணி யண்ணலார் கயிலையினில்
முந்தைநிகழ் கோயிலுக்கு முதற்பெருநா யகமாகி
இந்திரன்மா லயன்முதலா மிமையவர்க்கு நெறியருளும்
நந்திதிரு வருள்பெற்ற நான்மறையோ கிகளொருவர்,

1

3565
மற்றவர்தா மணிமாதி வருஞ்சித்தி பெற்றுடையார்
கொற்றவனார் திருக்கயிலை மலைநின்றுங் குறுமுனிபால்
உற்றதொரு கேண்மையினா லுடன்சிலநா ளுறைவதற்கு
நற்றமிழின் பொதியமலை நண்ணுதற்கு வழிக்கொண்டார்.

2

புராணம்:- இது, திருமூலதேவ நாயனார் சரித வரலாறும் பண்பும் கூறும் பகுதி; சிலபிரதிகளில் இவர் பெயர் "திருமூலதேவநாயனார்" எனக் காணப்பட்டமையானும், ஆசிரியர் புராண முடிபில் "திருமூலதேவர்" என்பதனாலும் அவ்வாறே பெயர் கொள்ளப்பட்டது. இனி, ஆசிரியர் நிறுத்த முறையானே, வம்பறா வரிவண்டுச் சருக்கத்தின், மூன்றாவது திருமூலதேவ நாயனார் புராணங் கூறத் தொடங்குகின்றார்.
தொகை:- நமது குருமரபின் பெருமானாராகிய திருமூலதேவரது அடியவர்களுக்கும் நாம் அடியேனாவேன்.
நம்பிரான் - நமது குருமரபின் வழிவழி முன்னவர் என்ற குறிப்பு. நம் என்றமையால் சைவ மரபின் அனைவரையும், ஏன்? பூதபரம்பரை அனைத்தையும் - உளப்படுத்தியவாறு காண்க. இவர் நங்குரு மரபுக் கெல்லா முதற் குரு நாதராகிய நந்தி பெருமான்பால் அருள் பெற்றவர். இதனை ஆசிரியர் "நந்தி திரு