[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 30. திருமூலதேவ நாயனார் புராணமும் உரையும் | 463 |
| வருள் பெற்ற" (3564) என்று இப் புராணத் தொடக்கத்தில் விரித்தருளுதல் காண்க. "என்னுச்சி அடிமன்ன வைத்த பிரான்" என்ற வகைநூற் கூற்று மிக்கருத்தது. "திருமூலன்" - இப்பெயர் போந்த வரலாறு "திருமூல ராயெழலும் "(3577) என்று பின்னர் விரிக்கப்படும்; திருமந்திரமும் பார்க்க; இதனால் நாயனாரது பெயரும் பண்பும் கூறப்பட்டன. | | வகை:- குடிமன்னு....புக்கு - குடிவளம் நிலைபெற்ற சாத்தனூரில் ஆமேய்ப்போனாகிய மூலன் என்னும் இடைமகனுடைய உடம்பிற் புகுந்து; முடிமன்னு....பரவிட்டு - சென்னியிலே நிலைபெற்ற வளைந்த பிறையினை உடைய சிவபெருமானை முழுமையாகிய தமிழின் படியிலே நிலைபெற்ற வேதங்களின் படியே துதிசெய்து; என்...பிரான் - என் உச்சியிலே தனது திருவடியைப் பொருந்த வைத்த பெருமான்; மூலன் ஆகின்ற அங்கணனே - மூலன் என்னும் பெயரையுடையவராகின்ற அருளாளராகும். | | குடி - குடிவளம்; குரம்பை - உயிர்போன உடம்பு; கூடு; "அரு ந்துயர்க் குரம்பையி னான்மா நாடி" (சி. போ. சி. பாயி.); புக்கு - (பரகாயப் பிரவேசம்) கூடுபுகுதல் என்னும் சித்தியினால் புகுந்து; கூனல் - உள்வளைந்த தன்மை; கூன் - நல் என்று பிரித்துரைத்தலுமாம். நற்பிறையாவது இறைவரைச் சரண் புகுந்த நன்மை. பிறையாளன் - பிறையினை உடையவன். இதனை ஆசிரியர் அந்தியிளம் பிறைக்கண்ணி யண்ணலார் என விரித்தருளினர்; "கூனற் றிங்கட் குறுங்கண்ணி" (பிள் . தேவா. நாகைக்கா - 1). முழுத்தமிழின்படி - முழுமையாகிய - குறைவில்லாத - இலக்கண வரம்பு நிறைந்த தமிழ். ஏனைய தமிழ் போலன்றி முடிந்த முடிபுகளாகிய சைவசித்தாந்த சாரமாகிய வேத சிவாகமங்களின் முடிபுகளை யெல்லாம் உணர்த்துதலின் முழுத்தமிழ் என்றார் என்றலும் ஆம்; தமிழின்படி - தமிழின் வழியாக; திருமந்திரங்கள் மூவாயிரமும் ஒரே படியாகிய நாற்சீர் விருத்தங்களாக "நாற்சீரினா னெறிவிளக்கி" மிளிரும்நிலை காண்க; "தன்னை நன்றாகத் தமிழ்ச்செய்யு மாறே" என்பது திருமந்திரம்; வேதத்தின் சொற்படியே பரவிட்டு - வேதம் - இங்கு வேத சிவாகமங்க ளிரண்டனையும் குறித்தது. வேத சிவாகமங்களுள் பேதம் யாம் கண்டிலம் என்றனர் அரதத்த சிவாசாரியர். திருமூலதேவ நாயனாரும் பாயிரத்துள் வேதச் சிறப்பும் ஆகமச் சிறப்பும் ஒப்பக் கூறுதலும், "ஆகமம் செப்பலுற் றேனே" "திருக்கூத்தின், சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே" என்று வரலாறு ஒப்பக் கூறுதலும், "மதிஞர் வளமுற்ற வேதத்தை யோதியே வீடுபெற் றார்களே" "குருநெறி யாஞ்சிவ மாநெறி கூடு, மொருநெறி யொன்றாக வேதாந்த மோதுமே" "பரனாய்ப் பராபரங் காட்டி யுலகிற், றரனாய்ச் சிவதன்மந் தானே சொல் காலத்தரனா யமரர்க ளர்ச்சிக்கு நந்தி, யுரனாகியாகம மோங்குகின்றானே" என்று பயனும் பண்பு மொப்பக் கூறுதலும், பிறவும் காண்க; சொற்படியே என்றது அவற்றிற் கூறும் வண்ணமே - கூறியவாறே - வடித்து எடுத்து என்றதாம். பரவுதல் - ஈண்டு இயல்பெடுத்துரைத்து உபதேசித்தல் என்றதாம்; என்னுச்சி அடிமன்ன வைத்தபிரான் - குரு மரபில் வழிவழி முன் வந்த குருநாதன் என்றது கருத்து, நம்பிரான் என்ற முதனூற் பொருளை வகுத்தபடி; இதனை "நெறியருளும் நந்தி திரு வருள்பெற்ற " (3564) என்று விரித்தது விரி நூல்; மூலனாகின்ற - மூலன் - குரமரபின் முதல்வன்; இனி இரட்டுற மொழிதலால் மூலன் என்ற பெயரினையுடைய இடையனது உடம்பினுட் புக்குத் திருமூலராக ஆகும் என்ற சரித வரலாறு பற்றி உரைத்தலுமாம்; ஆகும் - ஆக்கச் சொல் இடை |
|
|
|
|