பக்கம் எண் :

496திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  8. சிவயோக முதிர்ச்சியினால் எல்லாமறியும் அறிவு கூடும். இறைவரது திருவருட் செயல்களும் விளங்கும் (3586).
  9. இறைவர் தாமே உயிர்களுய்ய அருளிய சிவாகமங்களின் பொருளைத் திருமூலர் வாக்கினால் நற்றமிழின் வகுப்பத் திருவுளங்கொண்டு அவ்வாறே நிகழ்வித்தனர். இஃது இறைவர் உயிர்களின்மேல் வைத்த பெருங்கருணைத் திறம்; (3586).
  தலவிசேடம்:- ஆண்டா ண்டுரைக்கப்பட்டன.
  தலங்களாவன:- 1. திருக்கேதாரம்; 2. பசுபதி நேபாளம்; 3. அவிமுத்தம் (காசி); 4. விந்தம்; 5. ஸ்ரீபர்ப்பதம்; 6. திருக்காளத்தி; 7.திருவாலங்காடு; 8. திருக்கச்சி யேகாம்பரம்; 9.திருப் பெரும்பற்றப்புலியூர். 10. திருவாவடுதுறை.
 
 

திருமூலதேவ நாயனார் திருவடி வாழ்க.
 

 

திருமூலதேவ நாயனார் புராணம் முற்றும்