|
  |  |  | 
  |  | கருமை நோக்கிச் சென்றால் என்றார்) "அண்ட ரறிதற் கரியதிருவலகு" (1585) என்றதும் காண்க;   "தேவாசிரியன் முறையிருக்கும் தேவர்." | 
  |  | செறிதல் - அழுந்திய உறைப்புடையராகுதல். இவ்வுறைப்புப் பின்னர்ச் சரித நிகழ்ச்சியிற் காணப்பெறும்;   (3600). | 
  |  | புரிந்தமர்வார் - என்பதும் பாடம். | 
  |  | 2 | 
  | 3594 |                       | பூவார் சடிலத் திருமுடியார் மகிழ்ந்த செல்வப் பூங்கோயிற் றேவா சிரியன் முன்னிறைஞ்சி வலஞ்செய் வாராய்ச் செம்மைபுரி
 நாவா லின்ப முறுங்காத னமச்சி வாய நற்பதமே
 ஓவா வன்பி லெடுத்தோதி யொருநாள் போல வருநாளில்,
 |  | 
  |  | 3 | 
  | 3595 |                       | செங்கண்விடையார் திருக்கோயிற் குடபாற் றீர்த்தக்குளத்தின்பாங் கெங்கு மமணர் பாழிகளா யிடத்தாற் குறைபா டெய்துதலால்
 அங்கந் நிலைமை தனைத்தண்டி யடிக ளறிந்தே யாதரவால்
 "இங்கு நானிக் குளம்பெருகக்கல்லவேண்டு"மென்றெழுந்தார்.
 |  | 
  |  | 4 | 
  |  | 3594. (இ-ள்.) பூவார்....பூங்கோயில் - பூக்கள் பொருந்திய சடைத் திருமுடியினையுடைய இறைவர்   மகிழ்ந்தெழுந் தருளிய செல்வநிறைந்த பூங்கோயிலின் கண்; தேவாசிரியன்....வலஞ்செய்வாராய்   - திருத்தேவாசிரிய மண்டபத்தினை முன்னே வணங்கி வலம் வருவாராய்; செம்மைபுரி...ஓதி - செம்மைபெறப்   புரிகின்ற நாவினாலே இன்பம் பொருந்தும் காதலோடு நமச்சிவாய என்னும் நற்பதத்தினையே ஒழியாத   அன்பினாலே எடுத்து ஓதிக்கொண்டு; ஒருநாள் போல வருநாளில் - ஒருநாள் போலப் பலகாலமும் வலஞ்   செய்து வருகின்ற நாட்களிலே; | 
  |  | 3 | 
  |  | 3595. (இ-ள்.) செங்கண்....எய்துதலால் - சிவந்த கண்ணுடைய இடபத்தினையுடைய இறைவரது திருக்கோயிலின்   மேற்புறத்திலே உள்ள கமலாலயத் தீர்த்தக் குளத்தின் பக்கங்களில் எங்கும் அமணர்களது   பாழிகளாக ஆக்கித் தூர்க்கப்பட்டு இடத்தினாற் குறைபாடு உண்டாயினமையாலே; அங்கு....அறிந்தே   - அவ்விடத்தில் அந்த நிலைமையினைத் தண்டியடிகள் தெரிந்தே; ஆதரவால்....என்றெழுந்தார் -   அன்பினாலே இங்கு நான் இந்தக் குளத்தினை அகலமாகப் பெருகும்படிக் கல்லியிட வேண்டும் என்ற   துணிவுடன் அதனை மேற்கொண்டெழுந்தனர். | 
  |  | 4 | 
  |  | இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. | 
  |  | 3594. (வி-ரை.) பூ - கொன்றை; பொதுப்படக் கூறியதனால் தும்பை, வெள்ளெருக்கு முதலியனவுங்   கொள்ளலாம்; ஆயின் உரிமையாகிய சிறப்புப் பற்றி கொன்றை எனப்பட்டது. | 
  |  | தேவாசிரியன் முன்னிறைஞ்சி தேவாசிரியனை முன்னால் வணங்கி; முன் - திருக்கோபுர வாயிலினைக்   கடந்து உட்புக்கவுடன் முதலில் காண உள்ளது தேவாசிரியன்; "மூதெ யிற்றிரு வாயின்முன் னாயது"   (136); அன்றியும் அடியார்கள் நிறைந்துள்ளது. இத்தன்மைகளால் அது முன்னர் வணங்குதற்குரியதாம். | 
  |  | முன் என்றதனால் இறைவர் எழுந்தருளிய பூங்கோயிலினை அதன்பின் இறைஞ்சி என்பது போதரும்;   அடியார் வணக்கம் முன்னும், அதன் துணைகொண்டு ஆண்டவர் வணக்கம் பின்னும் நிகழவரும் மரபும்   குறிக்கப்பட்டது காண்க. | 
  |  | வலஞ் செய்வாராய் - வருநாளில் - என்று கூட்டுக |