பக்கம் எண் :

[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 31. தண்டியடிகள் நாயனார் புராணமும் உரையும்503

குறிப்பு :- அமணர்கள் இங்குக் கமலாலயத்தின் கரையில், குடிபுகுந்து, அந்நாளில் ஏனை, நடு நாடு - பாண்டிநாடு - தொண்டை நாடுகளிற் போலவே சைவத் திறத்திற்குப் பெருங்கேடு சூழ்ந்து கெடுதி செய்து வந்தனர் என்பது நாட்டுச் சரித ஆதர்வுகளால் அறியக்கிடக்கும் உண்மை. நமிநந்தி நாயனார் புராண வரலாறும் பார்க்க.

4

3596
குழிவா யதனிற் குறிநட்டுங் கட்டுங் கயிறு குளக்கரையில்
இழிவாய்ப் புறத்து நடுதறியோ டிசையக் கட்டி யிடைதடவி
வழியால் வந்து மண்கல்லி யெடுத்து மறித்துந் தடவிப்போய்
ஒழியா முயற்சியாலுய்த்தா ரோது மெழுத்தஞ் சுடனுய்ப்பார்,

5

3597
ண்ணி நாளு நற்றொண்டர் நயந்த விருப்பான் மிகப்பெருகி
அண்ண றீர்த்தக் குளங்கல்லக் கண்ட வமணர் பொறாராகி
எண்ணித் தண்டி யடிகள்பா லெய்தி முன்னின் றியம்புவார்
"மண்ணைக்கல்லிற் பிராணிபடும் வருந்தவேண்டா"வென்றுரைத்தார்.

6

3596. (இ-ள்.) குழிவாய்....கட்டி - குளத்தினுள் அகழுங் குழியின் ஓரத்தில் குறியாகிய கோல்நட்டு அதிற் கட்டிய கயிற்றினைக் குளத்தின் கரையின் மேல் தணிவான உயரத்தில் புறத்திலே நட்ட தறியினுடனே பொருந்தும்படி கட்டி; இடைதடவி....போய் - இடையிலே அக்கயிற்றைத் தொட்டுத்தடவிக் கொண்டு அவ்வழியினாலே வழிபிழையாது இறங்கி வந்து மண்ணைத் தோண்டி எடுத்துப் பின்னும் முன்தடவிய அவ்வழியே மேலே போய் இவ்வாறு; ஒழியா....உய்ப்பார் - இடையறாத முயற்சியுடன் மண்ணைக் கொட்டினார்; ஓதும் எழுத்து அஞ்சுடன் உய்ப்பார் - இச்செயலில் இடையறாது ஓதும் திருவஞ் செழுத்தினோடு தம்மைச் செலுத்துவாராய்,

5

3597. (இ-ள்.) நண்ணி....கல்ல - பொருந்தி நாள்தோறும் மிகுந்த நல்ல தொண்டராகிய தண்டியடிகள் உட்கொண்ட விருப்பத்தினாலே செய்யும் இத்திருத்தொண்டில் மிக மேம்பட்டு இறைவரது தீர்த்தக் குளத்தினை அகழ; கண்ட....இயம்புவார் - அதனைக் கண்ட அமணர்கள் பொறுக்க லாற்றாதவர்களாகித் தமக்குள்ளே ஆலோசித்துத் தண்டியடிகளிடம் வந்து அவர் முன்பு நின்று சொல்வார்களாய்; மண்ணை....என்றுரைத்தார் - மண்ணை அகழ்ந்து எடுத்தால் அதனுள் வாழும் பிராணிகள் மடியும்; நீரும் வீணே வருத்தவேண்டாம் என்று கூறினார்கள்.

6

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிவு கொண்டன.
3596. (வி-ரை.) கண்காணாத தண்டியடிகள் குளத்தினுள் ஒழுங்குபட இறங்கிக் கரையினை அகழ்ந்து எங்ஙனம் மண்ணை யெடுத்து மேல் இட்டனர் என்ற தொழில் செய் விவரம் கூறப்பட்டது. அவர் மனக்கண்கொண்டு உள்ளே நிச்சயித்துத் திட்டம் செய்து பின்னர்ப் புறத்திற் செயல் செய்தனர். பூசலார் நாயனாரும், வாயிலார் நாயனாரும் மனவாலயங்களை அமைத்து வழிபட்ட வரலாறுகள் காண்க. சிவாகமங்களுள் சிவபூசை முறையில் அந்தரியாகம் என்ற பகுதி இத்தன்மை கொண்டது; "அந்தரியாகந் தன்னை முத்தி சாதனமாக வறைகுவர்" என்பது சிவஞான சித்தியார்: புறச்செயலுக்கு முற்பட அகச்செயல் யாவர்க்கும் வேண்டுமாயினும், இங்குத் தண்டியடிகள் புறக்கண் காணாராயினும் அகக்கண் கொண்டு செய்த திருத்தொண்டினது இச்சிறப்பின் அருமையினைத் தனித் தனிப் பகுதிகளாகப் பிரித்து