பக்கம் எண் :

[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 31. தண்டியடிகள் நாயனார் புராணமும் உரையும்513

தலைநின்று செய்த கொடுமையும் சிவன்பணிக்கு இடையூறும், அவன்பால் நீ மேவி என்றதனால் அரசனாணை நடைபெறும் முறையும், கொண்ட குறிப்பால் - என்றதனால் சூளுறவு தெரிந்து முடிக்கவேண்டிய அமைவும், அவன் கருத்தை முடிப்பாய் - என்றதனால் அவர்மேற் கொண்ட பணிவிடையினை நீயே முற்றுவித்தலுடன் புறச்சமயிகளால் இனி இடையூறு நேராதவகை பண்ணவேண்டிய முடிபும் கூறிய நயம் கண்டுகொள்க; கொள - மனங்கொள்ள; கனவிற் கண்ட பொருள் நனவில் மறத்தலு முளதாதலின் அவ்வாறு மாறாது மனத்தினுள் நிலைபெற்றுணரும்படியும், ஐயங் கொள்ளாதபடியும்.
அத்தொழில் உவப்பார் - அடியார் இடுக்கண் நீங்கச் செய்யும் அத்தொழிலின் கண்மகிழ்ந்து அருளுவாராகிய இறைவர். தொழில் - திருப்பணி என்றலுமாம்.
நீங்க - நீங்கும்படி நியமித்த படியினால் அது நீங்கியதாக.

14

3606
வேந்தனதுகண் டப்பொழுதே விழித்து மெய்யின் மயிர்முகிழ்ப்பப்
பூந்தண் கொன்றை வேய்ந்தவரைப் போற்றிப்புலரத்தொண்டர்பாற்
சார்ந்து புகுந்த படிவிளம்பத் தம்பி ரானா ரருணினைந்தே
ஏய்ந்த மன்னன் கேட்பவிது புகுந்த வண்ண மியம்புவார்,

15

3607
"மன்ன! கேள்யான் மழவிடையார் மகிழுந் தீர்த்தக் குளங்கல்லத்
துன்ன மமண ரங்கணைந்"தீ தறமன்" றென்று பலசொல்லிப்
பின்னுங் கயிறு தடவுதற்கியான் பிணித்த தறிக ளவைவாங்கி
என்னை வலிசெய்தியான்கல்லுங் கொட்டைப்பறித்தா" ரென்றியம்பி,

16

3608
அந்த னான வுனக்கறிவு மில்லை யென்றார்; யானதனுக்
"கெந்தை பெருமா னருளால்யான் விழிக்கி லென்செய் வீ"ரென்க
‘இந்த வூரி லிருந்கிலோ' மென்றே யொட்டி னா;ரிதுமேல்
வந்த வாறு கண்டிந்த வழக்கை முடிப்ப" தெனமொழிந்தார்.

17

3606. (இ-ள்.) வேந்தன்....போற்றி - அரசன் அக்கனவினைக் கண்டு அப்போதே துயில் நீங்கி உடம்பில் மயிர்க் கூச்செறிய அழகிய கொன்றைப் பூவினைச் சூடிய இறைவரைத் துதித்து; புலர - பொழுது விடிய; தொண்டர்....விளம்பத் - திருத்தொண்டரிடத்துச் சார்ந்து தன்பாற் கனவில் நிகழ்ந்ததனைச் சொல்ல; (அதுகேட்டுத்) தம்பிரானார்....இயம்புவார் - தமது பெருமானாரது திருவருளை நினைந்து பொருந்திய அரசன் கேட்க இவ்வாறு புகுந்த நிலையினைச் சொல்வாராகி,

15

3607. (இ-ள்.) மன்னகேள் - அரசனே நீ கேட்பாயாக; யான்....கல்ல - நான் இளமை பொருந்திய விடையினையுடைய இறைவர் மகிழும் தீர்த்தக் குளத்தைத் தோண்டி அகழ; துன்னும்....சொல்லி - நெருங்கும் அமணர்கள் அங்கு வந்து ஈது அறமன்று என்று பலவாறும் வாயினாற் கூறி; பின்னும்....என்றியம்பி - அதன்மேலும், கையாற் றடவி வழி காண்பதற்காக யான் கயிறு கட்டிய நடுதறிகளையும் பறித்து என்னை வன்மை செய்து யான் மண் கல்லுதற்கு வைத்திருந்த கொட்டையும் பறித்தார்கள் என்று சொல்லி,

16

3608. (இ-ள்.) அந்தனான....என்றார் - விழிக்குருடாகிய உனக்கு அறிவுமில்லை என்றார்கள்; யான்....என்ன - அதற்கு நான் எமது பெருமானருளினால் நான் கண் பெற்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று கூற; இந்த....ஒட்டி