| |
| னார் - இந்த ஊரில் பின்னை நாங்கள் இருக்கமாட்டோம் என்றே ஒட்டிக் கூறினார்கள்; இது....மொழிந்தார் என்றார் - இதுவே மேல் நிகழ்ந்தபடியாம்; இதன் உண்மை நிலை கண்டு இந்த வழக்கினை முடிப்பாயாக" என்று கூறினார். |
| 17 |
| இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
| 3606. (வி-ரை.) அது கண்டு - கண்டு - கனவில் கண்டதும் கேட்டதுமாகிய நிகழ்ச்சிகளையும் குறித்தது. |
| அப்பொழுதே விழித்து - நல்ல கனாக்கள் கண்ட உடனே விழித்துப் பின் தூங்காது விழித்திருந்து திருநீறு அணிந்து இறைவரை நினைந்திருத்தல் வேண்டும் என்பது விதி. |
| புலர - பொழுது விடிய; விடிந்தவுடன் முதற் செயலாக அரசன் அக்கனவின்படி செயல் செய்யத் தொடங்கினான்; புலர என்றதனால் இக்கனவு வைகறைப் போதில் நிகழ்ந்த தென்பதும் கருதப்படும். |
| தொண்டர்பாற் சார்ந்து - "அவன்பால் நீ மேவி" (3605) என்று ஏவல் பெற்றானாதலினால் அவரைத் தன்னிடத்துக்கு அழைக்காது அவரிடம் சென்று சேர்ந்து. "அவரழைக்க வொட்டான்" (பூசல் - பூரா - 13) பார்க்க. |
| புகுந்தபடி - இறைவர் தனது கனாவில் அருளிய வரலாற்றின் படியினை. |
| புகுந்த வண்ணம் - நிகழ்ந்த செய்திகளை; இது - இயம்புவார் என்று கூட்டுக. இது - இவ்வாறு. |
| 15 |
| 3607. (வி-ரை.) மழவிடையார் மகிழும் - இறைவர் மகிழ்ந்து விழாக் கொண்டு வீற்றிருந்தருளும். |
| துன்னும் அமணர் அங்கு அணைந்து - யான் ஒருவன் பணி செய்ய, அமணர் தொகுதியாய்க் கூடி வந்தனர் என்றும், அவர்கள் அங்கு வரவேண்டா நிலையினராயினும் வலிந்து இகலுக்காக வந்தனர் என்றும் குறித்தவாறு. |
| விடையார்....கல்ல - என்றதனால் அது சிறு பணியாதலும், ஈது அறமன்று என்று பலசொல்லி - என்றதனால் சிவதருமத்தை அவர் இகழ்ந்தனர் என்பதும் குறிப்பிட்டவாறு; பல சொல்லி - என்றதனால் அவ்வாறு பல நிந்தை மொழிகளைக் கூறியதுவும், அவற்றை வாக்கினாற் சொல்லலும் ஆகாது என்பதும் போந்தபடி. |
| பின்னும் - இகழ்ந்து நிந்தை பகர்ந்ததன்றி மேலும் தொடர்ந்து; வாங்கி - வலிந்து பிடுங்கி. வலி செய்து - வன்கண்மை செய்து. |
| இயம்பி - மொழிந்தார் - என்று மேல்வரும் பாட்டுடன் முடிக்க. |
| 16 |
| 3608. (வி-ரை.) முன்பாட்டிற் கூறியவை அமணர் செய்த சிவாபசாரம். இப்பாட்டிற் கூறுபவை அடியார்பால் அவர்கள் செய்த அபசாரம். |
| அந்தனான....என்றார் - காரணமின்றி வலியவந்து ஒருவரை - அதன்மேலும் சிவன்பணி செய்யும் ஒருவரை - இகழ்ந்த செயல் என்பது. |
| எந்தை....ஒட்டினார் - அரசன் கண்டு தீர்க்கவேண்டிய வழக்கின் நிலையினை முடித்து எடுத்துக் கூறியபடி. |
| விழிக்கில் - கண் ஒளிபெற்றால். "நுங்கண் குருடாய்" (3600) என்று அமணர் கண்ணிழக்கக் கூறியதனை மேற்சூளுறவு கூறும் இடத்து எடுத்துக் கூறப்படுதலாற் பெறவைத்தார்; வேறு கூறவேண்டாத சிறுபொருளாதலின் இங்குக் கூறாது விடுத்தனர். ஒட்டினார் - ஒட்டுதல் - பந்தயம் வைத்து நிபந்தனை கூறுதல். "ஒட்டியே செய்வது" (2695). |