| |
| கண்டு - ஒப்பநாடி வழக்கின் உண்மை கண்டு. |
| முடிப்பது - தகவொறுத்து நிறைவாக்குக. |
| 17 |
3609 | அருகர் தம்மை யரசனுமங் கழைத்துக் கேட்க வதற்கிசைந்தார்; மருவுந் தொண்டர் முன்போக, மன்னன் பின்போய் மலர்வாவி அருகு நின்று விறற்றண்டி யடிக டம்மை முகநோக்கிப் "பெறுகுந் தவத்தீர்! கண்ணருளாற் பெறுமாகாட்டு" மெனப்பெரியோர், | |
| 18 |
3610 | "ஏய்ந்த வடிமை சிவனுக்கியா னென்னி லின்றென் கண்பெற்று வேந்த னெதிரே திருவாரூர் விரவுஞ் சமணர் கண்ணிழப்பார்; ஆய்ந்த பொருளுஞ் சிவபதமே யாவ" தென்றே யஞ்செழுத்தை வாய்ந்த தொண்ட ரெடுத்தோதி மணிநீர் வாவி மூழ்கினார். | |
| 19 |
| 3609. (இ-ள்.) அருகர்....இசைந்தார் - அமணர்களை அரசனும் அவ்விடத்தே அழைப்பித்துக் கேட்க அவர்களும் அதனுக்கு இசைந்தார்கள்; மருவும்....நின்று - பொருந்திய தொண்டராகிய தண்டியடிகள் முன்னே செல்ல, அரசன் அவர் பின்னே சென்று கமலாலயக் குளத்தின் அருகில் நின்றுகொண்டு; விறல்....காட்டும் என - விறலுடைய தண்டியடிகளாரது முகத்தினை நோக்கிப் பெருகும் தவத்தினை உடையவரே! திருஅருளினாலே நீர் கண்பெறும் நிலையினைக் காட்டுவீராக! என்று கூற; பெரியோர் - பெரியவராகிய தண்டியடிகள். |
| 18 |
| 3610. (இ-ள்.) ஏய்ந்த....என்னில் - சிவனுக்கு யான் பொருந்திய அடியவனே யாகில்; இன்று....இழப்பார் - இன்று இவ்வேந்தனெதிரே யான் எனது கண் பெற்றுத் திருவாரூர் விரவும் சமணர்கள் கண்களை யிழப்பார்கள்; ஆய்ந்த....ஆவது என்றே - ஆய்ந்து துணிந்த முடிபாகிய பொருளும் சிவபதமேயாவதாம் என்ற சூளுறவு மொழிந்து; அஞ்செழுத்தை....மூழ்கினார் - திருவைந்தெழுத்தினை வாய்ந்த திருத்தொண்டர் எடுத்து ஓதி அழகிய நீர்வாவியினுள்ளே முழுகினார். |
| 19 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன. |
| 3609. (வி-ரை.) அருகர்....இசைந்தார் - முன் "தொண்டர்பாற் சார்ந்து" (3606) என்றதும், இங்கு "அருகர் தம்மை அங்கு அழைத்து" என்றதும் ஆகிய வேறுபாடு கருதத்தக்கது. முறை சொல்வானும் முறை சொல்லப்பட்டானும் நீதி அரசன் முன்பு ஒன்று போலவே சாரவும் செலுத்தப்படவும் கடவர் என்பது அரச நீதி முறையாயிருப்பவும், இங்கு இவ்வேறுபாட்டினால் அரசன் நீதிமுறை கோடினான் என்ன வாராதோ? எனின், வாராது; என்னை? இறைவர் "அவன் பால் நீ மேவி" (3605) என்று கட்டளையிட் டருளப் பெற்றானாதலின் அரசனே அவர்பாற் செல்ல வேண்டியதாயினது நியதியாதலின் என்க; அன்றியும் ஈண்டுத் "திருவாரூர் காவல்கொண்டு தனியாளுங் கடவுட்பெருமா" னாராகிய தியாகராசர் திருவாயில் முன்பு தொண்டர் சென்று (3602) முறையிட்டுள்ளா ராதலின் அரச நீதிமுறை பிறழாமையும் கண்டுகொள்க. இராசாதி ராசராகிய தியாகராசரது ஆணையின் முறைவழியே அமைந்து முறை செய்யவுள்ளவன் நிலவேந்தனாதலின் ஆணைப்படி அவரது சேவகனாக இங்குத் தொண்டர்பால் வந்து சார்ந்தான். இதனால் திருத்தொண்டின் பெருமை உணர்த்தியவாறு மாயிற்று. |