பக்கம் எண் :

[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 31. தண்டியடிகள் நாயனார் புராணமும் உரையும்517

ஆய்ந்த - பொருள் - வேதாகம முதலிய எல்லா ஞான நூல்களானும் ஆய்ந்து கண்ட முடிவான பொருள்.
சிவபதம் - திருவைந்தெழுத்து; வேதாகமங்களின் முடிந்த முடிபு எல்லாம் அதனுள் அடங்குதல் பெரியோர் வாய்க் கேட்டுணரத்தக்கது.
சிவபதம் - சிவன் றிருவடி என்றலும் குறிப்பு.
அஞ்செழுத்தை ஓதி - திருவருள் வெளிப்படும் நிலை காணும் செயலாதலின் அஞ்செழுத் தோதினார்; "தழைத்த வஞ்செழுத் தோதினா ரேறினார் தட்டில்" (544); "அஞ்செழுத்தோதி....பொய்கையின் மூழ்கினார்" (1635); "அஞ்செழுத்தோதி யேறினார்" (2114) என்பன முதலியவை பார்க்க.
எடுத்து - உச்ச சுரத்தில் கூறி, உச்சாடன கர்மத்திற்கு இங்ஙனம் உரத்த சுரத்தில் காயிக முறையில் மந்திரங்களைச் செபித்தல் வேண்டும் என்பர். தமது புறக்கண்ணில் அந்தத் தன்மை நீங்கிக் கண் காணுதலும், அமணர் அந்தராதலும் உச்சாடன கர்மத்தின்பாற்படும். வரும் பாட்டிற் பார்க்க;- (இது சிவப்பிரகாசதேசிகர் குறிப்பு.)
இன்னே கண் பெற்று - என்பதும் பாடம்.

19

3611
தொழுதுபுனன்மே லெழுந்தொண்டர் தூயமலர்க்கண் பெற்றெழுந்தார்;
பொழுது தெரியா வகையமரர் பொழிந்தார் செழுந்தண் பூமாரி;
இழுதை யமணர் விழித்தேகண் ணிழந்து தடுமா றக்கண்டு
"பழுதுசெய்தவமண்கெட்ட"தென்றுமன்னன்பகர்கின்றான்;

20

3612
"தண்டி யடிக டம்முடனே யொட்டிக் கெட்ட சமண்குண்டர்
அண்டர் போற்றுந் திருவாரூர் நின்று மகன்று போய்க்கழியக்
கண்ட வமணர் தமையெங்குங் காணா வண்ணந் துரக்க"வென
மண்டி வயவர் சாடுதலும் கண்கள் காணார் மனங்கலங்கி,

21

3613
குழியில்விழுவார்; நிலைதளர்வார்; "கோலு மில்லை"யெனவுரைபார்ப்;
வழியீ" தென்று தூறடைவார்; "மாண்டோ" மென்பார்;மதிகெட்டீர்
"அழியும்பொருளை வட்டித்திங் கழிந்தோ" மென்பா;"ரரசனுக்குப்
பழியீதாமோ? "வென்றுரைப்பார்; பாய்களிழப்பார்பறிதலையர்;

22

3614
பீலி தடவிக் காணாது பெயர்வார்; நின்று பேதுறுவார்;
காலி னோடு கைமுறியக் கன்மே லிடறி வீழ்வார்கள்
சால நெருங்கி யெதிரெதிரே தம்மிற் றாமே முட்டிடுவார்;
மாலு மனமு மழிந்தோடி வழிக ளறியார் மயங்குவார்;

23

3615
ன்ன வண்ண மாரூரி லமணர் கலக்கங் கண்டவர்தாஞ்
சொன்ன வண்ண மேயவரை யோடத் தொடர்ந்து துரந்ததற்பின்
பன்னும் பாழி பள்ளிகளும் பறித்துக் குளஞ்சூழ் கரைபடுத்து
மன்ன னவனு மனமகிழ்ந்துவந்து தொண்ட ரடிபணிந்தான்.

24

3611. (இ-ள்.) தொழுது....எழுந்தார் - இறைவரருளைத் தொழுது நீரின் மேல் எழுகின்ற தொண்டர் தமது தூய மலர்போன்ற கண்களின் ஒளிபெற்று எழுந்தார்; பொழுது....பூமாரி - ஞாயிற்றினை மறைத்தலால் பொழுது தெரியக்