|
| |
| உ சிவமயம் |
| 32. மூர்க்க நாயனார் புராணம் |
| தொகை |
| "(நாட்டமிகு தண்டிக்கு) மூர்க்கர்க்கு மடியேன்" - (5) | |
| - திருத்தொண்டத் தொகை |
| வகை |
| தண்டலை சூழ்திரு வேற்காட்டூர் மன்னன் றகுகவற்றாற் கொண்டவல் லாயம்வன் சூதரை வென்றுமுன் கொண்டபொருண் முண்டநன் னீற்ற னடியவர்க் கீபவன் மூர்க்கனென்பர் நண்டலை நீரொண் குடந்தையின் மேவுநற் சூதனையே. |
|
| - திருத்தொண்டர் திருவந்தாதி - (38) |
| விரி |
3618 | மன்னிப்பெருகும்பெருந்தொண்டை வளநாடதனில்வயல்பரப்பும் நன்னித் திலவெண் டிரைப்பாலி நதியின் வடபா னலங்கொள்பதி அன்னப் பெடைகள் குடைவாவி யலர்புக் காட வரங்கினிடை மின்னுக் கொடிக டுகிற்கொடிகள் விழவிக் காடு வேற்காடு. | |
| 1 |
| புராணம் :- இனி, நிறுத்த முறையானே, ஆறாவது வம்பறா வரிவண்டுச் சருக்கத்துள், ஐந்தாவது மூர்க்க நாயனார் புராணம் கூறத் தொடங்குகின்றார். மூர்க்க நாயனாரது சரித வரலாறும் பண்பும் கூறும் பகுதி. |
| தொகை:- மூர்க்கர் என்ற பெயரினையுடைய நாயனாருக்கும் நான் அடியேனாவேன்; மூர்க்கர்க்கும் - தண்டிக்கும் மூர்க்கர்க்கும் என்ற உம்மை எண்ணும்மை. இதனால் இந்நாயனாரது பெயரும் பண்புக் குறிப்பும் கூறப்பட்டன. |
| வகை :- தண்டலை....மன்னன் - சோலைகள் சூழுந் திருவேற்காட்டூரின் தலைவர்; தகு கவற்றால்....வென்று - தக்க சூதாடுதலில் சூதாடு கருவியால் வரும் பந்தயப் பொருளை வலிய சூதர்களை வென்று; முன்....ஈபவன் - முன் தான் ஈட்டிய பொருளை எல்லாம் திருநெற்றியில் நல்ல நீற்றினை உடைய சிவனடியவர்களுக்குக் கொடுப்பவன்; மூர்க்கனென்பர்....சூதனையே - நண்டுகள் அலைதற்கிடமாகிய நீர்வளமுடைய திருக்குடந்தைப் பதியில் வாழும் நற்சூதனை மூர்க்கன் என்று பெயர் சொல்லுவர். |
| குடந்தையின் மேவு நற்சூதனைத் திருவேற் காட்டூர் மன்னன், தகுகவற்றாற் கொண்ட பொருள் அடியவர்க்கீபவன், மூர்க்கள் என்பர் என்று முடிபுகொள்க. |