| |
| 7. சுயநலத்தை உள்வைத்து மறைத்துச் சிவன் பணிக்கு இடையூறாகிய சொற் செயல்களை நிகழ்த்திப் புறத்தே பற்பல அறவுரைகளைக் காட்டி உண்மையை மறைத்து நடிக்கும் வஞ்சமாக்கள் அநேகர் உண்டு; அவர்கள்பால் சிவாபராதம் செய்த குற்றமும், வஞ்சித்த குற்றமும் கூடிப் பன்மடங்கு சிவன்றண்டம் வரும். (3611-3613-3614). |
| 9. மனம்வருந்திச் சிவன்பால் முறைப்பட்ட தண்டியடிகளிடம் இறைவர் கனவில் தோன்றி "நெஞ்சின் மருவுங் கவலையினை ஒழிநீ" என்று தேற்றி, அவர் சொன்னவாறே சூளுறவு நிறைவேற அருளினர். (3604) "தனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லான், மனக்கவலை மாற்ற லரிது" (குறள்); ஒருவர்க்கு நேர்ந்த மனக்கவலையினைச் சிவனையே யன்றி ஏனைப்பிறர் எவரும் மாற்றுவர் என்பதெல்லாம் உபசாரமாத்திரையேயாம். |
| 10. சிவன் கட்டளைப்படியே செல்வானாயினும், அரசன் நீதிமுறை செய்யுங்கால் வழக்குட்பட்ட இருதிறத்தவரையும் முன்வைத்து நீதிப்படி விசாரித்து உண்மை கண்ட பின்னரே நூல்முறை விதிப்படி உரியதண்டஞ் செய்தல் வேண்டும். (3606 - 3611) |
| 11. மன்னன் நீதிமுறைத் தண்டம் செய்யுங்கால் வழக்குட்பட்ட இருவரிசைவு கொண்டேனும்; அன்றி, ஆட்சி - ஆவணம் - காட்சி என்ற தக்க சான்றுகள் கண்டேனும்; உண்மைகண்டே தீர்ப்புச் செய்தல் வேண்டும். (3609 - 3615) "அதற்கிசைந்தார்", "அவர் தாம் சொன்ன வண்ணம்." |
| 12. குற்றத்தண்டம் மிகையும் குறையுமின்றி அவ்வக் குற்றத்துக் கேற்றவாறு நூன்முறை வழக்குத் தகுதியுடைத்தாய் அமைதல் வேண்டும். (3613) |
| 13. குற்ற தண்டம் அக்குற்றம் செய்தாரும் ஒப்பும்படி அமைதல் வேண்டும். |
| 14. தீர்த்தக்குளம், ஆறு முதலிய தெய்வத் தானங்களில் இடங்களின் எல்லைகளை அளவறுத்துப் பாதுகாத்து வருதல் அரசன் கடமையும் மக்கள் கடமையும் ஆம். (3615) |
| |