பக்கம் எண் :

532திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

3623
ங்க ணவ்வூர் தமக்கொருபற் றடியார் தங்கட் கமுதாக்க
எங்குங் காணா வகைதோன்ற விலம்பா டெய்தி யிருந்தயர்வார்
தங்கம் வகையாற் றாமுன்பு கற்ற தன்மை நற்சூதாற்
பொங்கும் பொருளாக் கவுமங்குப் பொருவா ரின்மை யினிற்போவார்.

6

3624
பெற்ற மேறிப் பலிக்குவரும் பெருமா னமருந் தானங்கள்
உற்ற வன்பாற் சென்றெய்தி யுருகு முள்ளத் தொடும்பணிந்து
கற்ற சூதா னியதியாங் கரும முடித்தே கருதாரூர்
செற்ற சிலையார் திருக்குடந்தை யடைந்தார் வந்துசிலநாளில்.

7

3623. (இ-ள்) அடியார் தங்கட்கு அமுதாக்க - அடியார்களுக்கு அமுதாக்குதற்கு; அங்கண்....பற்று - அந்நாளில் அவ்வூரில் தமக்கு எவ்விதமாகிய பற்றுக்கோடும்; எங்கும்.......அயர்வார் - எங்கும் பெறாத நிலை வெளிப்பட வறுமை சார்ந்து இருந்து மயங்குவாராய்; தங்கும் ....ஆக்கவும் - மறவாது தம்மிடத்தில் தங்கியிருக்கும்படி தாம் முன்னாளில் கற்ற நற்றன்மையுடைய சூதினாலே மிகும் பொருள் ஆக்க முயற்சித்தும்; அங்குப்..போவார் - அங்குச் சூதாட்டம் செய்வாரில்லாமையால் வெளியே செல்வாராகி;

6

3624. (இ-ள்) பெற்றம்......தானங்கள் - இடபத்தில் ஏறிக்கொண்டு "அஞ்சொலீர்! பலி "என்று கேட்டு எழுந்தருளிவரும் இறைவர் விரும்பியிருக்கும் பலபகுதிகளிலும்; உற்ற.....பணிந்து - பொருந்திய அன்பினாலே போய்ச் சேர்ந்து உருகும் மனத்துடன் வணங்கி; கற்ற...முடித்தே - தாம் கற்ற நற்சூதினால் வரும் பொருளினைக் கொண்டு நியதியாகிய தமது கருமத்தினை முடித்துக் கொண்ட வாறே; கருதார் ஊர்..சிலநாளில் - பகைவர்களது முப்புரங்களை அழித்த வில்லினையுடைய இறைவரது திருக்குடந்தைப் பதியினைச் சிலநாளில் வந்து அடைந்தனர்

7

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
3623. (வி-ரை) அமுதாக்கத் தமக்கு அங்கண் அவ்வூர் ஒரு பற்றும் எங்கும்காணாவகை தோன்ற - என்க. அமுதாக்க ஒரு பற்றும் காணாமையாவது அமுதாக்குதற்குரிய சாதனங்கள் எவையும் பெறாதநிலைமை. ஒரு பற்றும் - முற்றும்மை தொக்கது.
அங்கண் - அப்போது - அக்காலத்தில். பற்று - பற்றுக்கோடு.
இலம்பாடு - வறுமை; பாடு - தொழிற் பெயர் விகுதி. இலம் - இல்லாநிலை.
தங்கும் வகையால் தாம் முன்பு கற்ற தன்மை நற்சூது - தங்கும் வகையாவது மறவாது மனத்துள் நிலைபெறப் பயிலுதல்; முன்பு கற்ற தன்மை - இளம்பிராயத்தில் கலை ஞானங்களுள் ஒன்றாகத் தன்மை தெரியக் கற்ற; முன்பு என்றதனால் கற்றபின்பு அதனை ஊதியப் பயன்படச் செய்யவில்லை என்பது போதரும். நற்சூது - சூது என்ற தீமை அணுகாது முன்பு கலைஞான அளவுபெரும் அறிவினுக்கும், பின்பு சிவனடியார்க் கமுதுக்கும் ஆக்கவுமே பயன்படுத்தியமையால் நல் என்ற அடைமொழி தந்தோதினார். "கற்ற சூதன்" (நம்பி-தேவாரம்) என்ற முன்னூற் சொல்லும் பொருளும் எடுத்தாண்டமை காண்க."கற்ற சூதால்" (3624) எனவும், "நற்சூதாரம்" (3629) எனவும் மேல்வருவனவும் காண்க. ஐம்பெரும் பாதங்களுள் ஒன்றாக வைத்தெண்ணி விலக்கப்படும் சூதுதானும் சிவனடியார்களுக்குப் பயன்பட்ட வகையால் நல்லதாக ஆயினமை கண்டு கொள்ளத் தக்கது நளன் கதை - பாரதக் கதை முதலியவை ஈண்டு வைத்து வேற்றுமை கண்டு கொள்ளத் தக்கன.