| | |
| | பொங்கும் பொருளாக்கவும் - சூதினால் ஒரோர் வழி வரும் ஊதியப் பொருள்களின் மிகுதி நோக்கியே மக்கள் சூதினில் ஆசைப்பட்டு மயங்கித் தம் பொருள் எல்லாம் இழந்து கேடுறவும் முற்படுகின்றாராதலின், முதலிற், பொங்குவதாகக் காட்டும் என்றும், கெட்ட ஆசை பொங்கும் என்றும் பல்லாறு உரைக்கப் பொங்கும் என்றார். இந்நாளில் திட்டச் சீட்டு - குதிரைப் பந்தயம் - பணையம் முதலாகிய பலவகைப் பகட்டுச் சூதுகளுள்ளே அறிவிழந்து மயங்கிப் பெருநிலையினர் என்னும் மாக்களும் உழலும் தன்மை காணப்படுதல் மிக வருந்தத் தக்கது; ஆக்கவும் - ஆக்க முயன்றும் என்ற பொருள் தந்து நின்றது. |
| | அங்குப் பொருவாரின்மையில் - "தீய வென்பன கனவிலு நினைவிலாச் சிந்தைத், தூய மாந்தர்வாழ் தொண்டைநாட் டியல்பு" (1123) என முன்னர்க் கூறிவிடுத்தாராகலின்அந்நாட்டிற் பணையத்துக்குச் சூதுபொருவாரின்மை என்று கூறிய அளவிலமைந்தார்; "தெண்ணீர் வயற்றொன்டை, நன்னாடு சான்றோ ருடைத்து" என்ற தனிப்பாடலும் காண்க. ஆயின் இந்நாயனார் அங்கு அதனைப் பயின்றனரே? எனின், அது கலைஞானங் கற்குமளவே என்பது முன் உரைக்கப்பட்டது. |
| | போவார் - அங்குநின்றும் நீங்கி வேற்றூர்களிற் போவாராய். அயர்வார் போவார். -முற்றெச்சம்; அயர்ந்து போவாராய். சென்று எய்தி - என மேல்வரும் பாட்டுடன் கூட்டுக. |
| | 6 |
| | 3624. (வி-ரை) தானங்கள்....பணிந்து அடியார்க் கமுதாக்க ஒருபற்றுக் கோடுமில்லாமையாலும், அங்குத் தாம் கற்றறிந்த சூதினால் அதற்கு ஊதியம் பெற இயலாமையானும் வேற்றூர் தேடிப் புறப்பட்ட இந்நாயனார், சிவனுறையும் பதி பலவும் அன்புடன் சென்று பணிந்தனர் என்க. சூதினாற் பொருளாக்கும் கருத்தன்றி எவ்வாற்றானும் அடியாரைப் பேணும் அன்பினாற் சென்றார் என்பது சிவன் பதிகளிடைச் சென்று அன்புடன் பணிந்தனர் என்றதனாற் பெறப்படும். அன்பால் - அன்புடனே; ஆல் - ஓடு உருபின் பொருளில் வந்தது. |
| | கற்ற சூதால் நியதியாங் கருமம் முடித்தே- நியதியாம் கருமமாவது முன்(3620) உரைத்தவாறு, "காத லடியார்க் கமுதாக்கி யமுது செய்யக் கண்டுண்ணும் நீதி முறை வழுவாத நியதி" என்றபடி, அடியார்க் கமுதாக்கி அவரை முன் ஊட்டிப் பின் தாம் உண்ணுதல்; மாகேசுர பூசை; கற்ற சூதால் முடித்தே - அங்கங்கும் சூது பொருது அதனால் வரும் பொருள் கொண்டு நிறைவேற்றி. |
| | இந்நாளினும் பல பகுதிகளுள் திருவிழாக் காலங்களில் மக்களை மயக்கும் சூதுவகையுட்படப் பலப்பல ஆட்டங்கள் நிகழக் காணுதல் இதன் வழிவழி வந்த வழக்கம் போலும்; இத் தகாத செயல்கள் நமது இறைவர் திருவிழாக்களைப் பழுது படுத்தாது ஒழிக்கப்படுதல் வேண்டுமென்று அன்பர் பலரும் கருதுதல் தகுதியேயாம். ஆனால் இதுபற்றி நாம் சிற்திக்க வேண்டிய செய்திகள் சில உண்டு; உலகில் நன்மை தீமை என இரண்டும் உண்டு; இரண்டும் சிவன் படைப்பினுட் பட்டவை; இவை உயிர்கள் தத்தம் கன்மங்களைப் அனுபவித்துக் கழித்துப் பண்படுவதற்காக இறைவர் படைத்தவை, உயிர்களின் பக்கவத்துக் கேற்ப அனுபவிக்கச் செய்தற்பொருட்டு இவையிரன்டும் வேண்டத்தக்கன. "மெய்ம்மையும் பொய்ம்மையு மாயி னார்க்குச்,சோதியுமாயிரு னாயி னார்க்குத் துன்பமுமாயின்ப மாயினார்க்கு.....பந்தமு மாய்வீடுமாயினாருக்கு"(திருவா);"நன்மை தீமை நின்செய லாதலின், நானே யமையு நலமில் வழிக்கே" (பட்டினத்தார்); என்பவாதலின், சூது, முதலிய தீமைகள் தீயோர்களை அனுபவத்தினால் பக்குவபபடுத்துதற்கு இறைவர் வகுத்தவை; கைக்கும் மருந்தும் |