பக்கம் எண் :

534திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

குற்றப்பட்டாரைச் சீர்திருத்தும் பள்ளிக்கூடங்கள் போல்பவையுமாம் எனவாம். பலதிறப்பட்ட பக்குவபேதமுடைய உயிர்கள் உள்ள அளவும் நன்மையும் தீமையும் உலகில் இறைவராணைவழி இருந்தே தீரும். பக்குவபேதம் கருதாது யாவரையும் ஒன்று போலவே நலப்படுத்தி விடுவோம் என்று கூறுதலும் முயலுதலும் மடமையின் பாலதாகும். இறைவ ராணைவழி நின்றாலன்றி, ஒரு தீமையை நீக்கி எல்லாவுயிரையும் ஒன்றுபோல நலப்படுத்துவோமெனப்புகின் முன்பு புலப்படாத மற்றொரு தீமை அம்முற்சியினின்றும் வெளிப்பட்டுத் தோன்றும்.
உலகில் ஏனை யிடங்களில் பயிலும் சூது வகைகளுக்கும் தலங்களிலும் விழாக்களில் பயில்வனவற்றுக்கும் வேறுபாடுண்டு; ஏனையிடங்களில் சூது பயில்வோர் அதனுட்பட்டே ஒழிந்து விடுவர்;ஆனால் தலங்களில் விழாக்களில் சூது பயில்வோர் அவ்வாறன்றித் தூய தலங்களின் நினைவும், விழாக்களின் நினைவும், அடியவர் நினைவும் , ஆண்டவன் நினைவும் காட்சியும் அபுத்திபூர்வமாயேனும் ஓரோர் கால் வரப்பெறும் நல்லூழ் வாய்க்கப் பெறுகின்றார்கள்; ஆதலின் அதன்மூலம் உய்தி பெறும் வழியில் நிற்கின்றார்கள்; இவ்வாறுள்ள ஊழிற்பட்டுச் சூதர் கூட்டத்தினின்றும் முகந்தெடுக்கப்பட்டவர்களே தலங்களிலும் விழாக்களிலும் சூது பயில்பவர்கள் என்பதும் கருதுதல் வேண்டும்; ஆனால் இவ்வாறு சூது முதலியவற்றாலும் நலப்படுத்தும் தலங்கள் சிலவே என்க.
கருதார் - (சிவனினைவில்லாத) பகைவர்களாகிய முப்புரவாணர்.
சில நாளில் வந்து திருக்குடந்தை அடைந்தார் - என்க.
திருக்குடத்தை அடைந்தார் - திருக்குடந்தை அந்நாளிலும் சூதாட்டம் முதலிய வற்றாலும் சிறந்தது விளங்கிற்றுப்போலும்; அது பற்றிய இந்நாள் விளக்கம் முன்னை வழிவழி வந்த வழக்கும் போலும். இதனைப் பற்றி மேல்வரும் பாட்டில் "பொருளாய மெய்துதற்குப் புகழ்க்குடந்தை யம்பலத்தே, யுருளாய்ச் குதாடி" (3625) என்னும் கருத்தும் கருதத் தக்கது.
கடனு முடித்தே - என்பதுத் பாடம்.

7

வேறு

3631
ருளாரு மணிகண்ட னடியார்க்கின் னமுதாக்கப்
பொருளாய மெய்துதற்குப் புகழ்க்குடந்தை யம்பலத்தே
உருளாயச் சூதாடி யுறும் பொருள்வென் றனநம்பர்
அருளாக வேகொண்டங் கமுதுசெய்வித் தின்புறுவார்,

8

3632
முற்சூது தாந்தோற்று முதற்பணய மவர்கொள்ளப்
பிற்சூது பலமுறையும் வென்றுபெரும் பொருளாக்கிச்
சொற்சூதான் மறுத்தாரைச் சுரிகையுரு விக்குத்தி
நற்சூதர் மூர்க்கரெனும் பெயர்பெற்றார் நானிலத்தில்

9

3625. (இ-ள்) இருளாரும்..அமுதாக்க - நீலம் நிறைந்த அழகிய கண்டத்தினை உடைய சிவபெருமானுடைய அடியவர்களுக்கு இனிய திருவமுது அளிப்பதற்காக; பொருள் ஆயம் எய்துதற்கு - பொருளீட்டம் பொருந்துதற்கு; புகழ்....சூதாடி - புகழினை உடைய திருக்குடைந்தைப் பொதுவிடத்திலே உருளும் கருவியினால் சூதாடி; உறும்....கொண்டு - அதனால் வரும் பொருள்கள் வெற்றி பெற்றன